- Advertisement -

ஒருவரை நேருக்கு நேர் நாம் பார்க்கும் பொழுது முதலில் நாம் செய்வது புன்னகை தான். இந்த புன்னகையில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பது நம்முடைய உதடு. நம் உடலில் இருக்கக்கூடிய அனைத்து உறுப்புகளிலும் மிகவும் மிருதுவாக இருக்கக்கூடிய ஒரு உறுப்பு என்றால் அது உதடு என்றுதான் கூற வேண்டும். மேலும் உதட்டில் மட்டும்தான் வியர்வை சுரப்பிகள் இல்லாமல் இருக்கிறது. அதனால் இந்த உதட்டில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் அதுவாக வெளியேற்ற முடியாது. அதை அவ்வப்பொழுது நாம் தான் சுத்தம் செய்ய வேண்டும்.

ஆனால் பலரும் அதை செய்யாததால் அவர்களுடைய உதடு கருத்துப் போய் விடுகிறது. பிறகு உதடு கருப்பாக இருக்கிறது என்பதற்கான வெளியில் செல்லும்பொழுது லிப்ஸ்டிக் உபயோகப்படுத்திக் கொண்டு செல்கிறார்கள். இதை தவிர்த்து இயற்கையான நம்முடைய உதட்டின் நிறத்தை நாம் மீட்பதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான முறையை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

ஆண்களுக்கும் பெண்களுக்கும் உதட்டில் பிக்மென்ட்டேஷன் ஏற்படும். அதாவது கருமை ஏற்படும். இந்த கருமை ஏற்படுவதற்கு காரணமாக சில விஷயங்கள் இருக்கின்றன. பொதுவான காரணத்தை மட்டும் நாம் பார்ப்போம். உதட்டில் இருக்கக்கூடிய இறந்த செல்களை நீக்காமல் விடுவதன் மூலம் உதடு கருமையாகும். சில பேர் புகைபிடித்தல், புகையிலை போடுதல் போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாகி இருப்பார்கள். அவர்களுடைய உதடும் கருமையாக தான் இருக்கும்.

இவற்றை நிறுத்தி விட்டால் பழைய நிலைக்கு உதடு வந்து விடுமா என்று கேட்டால் கண்டிப்பான முறையில் வராது என்று தான் சொல்ல வேண்டும். இதை நிறுத்துவதோடு மட்டுமல்லாமல் ஒரு சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் தான் நம்முடைய உதட்டின் இயல்பான நிறத்தை நம்மால் பெற முடியும். முதலில் இந்த உதட்டின் நிறத்தை நாம் திரும்பப் பெறுவதற்கு உதட்டில் இருக்கக்கூடிய இறந்த செல்களை நீக்க வேண்டும்.

- Advertisement -

இந்த இறந்த செல்களை நீக்குவதற்கு உதட்டில் ஸ்க்ரப்பிங் பண்ண வேண்டும். எலுமிச்சம்பழத்தில் சர்க்கரையை தொட்டு உதட்டில் நன்றாக தேய்ப்பதன் மூலம் அதில் இருக்கக்கூடிய இரண்டு செல்கள் நீங்கும். இவ்வாறு செய்த பிறகு ஒரு சிறிய லிப்ஸ்பேக்கை நாம் போடுவதன் மூலம் உதட்டின் நிறத்தை படிப்படியாக நம் திரும்பப் பெற முடியும். அந்த லிப்ஸ்பேக் பற்றி பார்ப்போமா?

இதற்கு ரோஜா இதழ்கள் தேவைப்படும். ரோஜா இதழ்களை நன்றாக காய வைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இயலாதவர்கள் ரோஜாப்பொடி என்று கடைகளில் விற்கும் அதை வாங்கிக் கொள்ளலாம். ஒரு ஸ்பூன் அளவிற்கு ரோஜா இதழ் பொடியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிது காய்ச்சாத பசும்பால், சிறிது பீட்ரூட் சாறு இரண்டையும் கலந்து பேஸ்ட் பதத்திற்கு தயார் செய்து கொள்ளுங்கள்.

பிறகு ஒரு காட்டன் பஞ்சை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது காட்டன் துணியை கூட உபயோகப்படுத்தலாம். அதில் இந்த பேக்கை பரவலாக எடுத்து உதட்டின் மீது அப்படியே போட்டு விட வேண்டும். 15 நிமிடம் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு இதை துடைத்து எடுத்து விட வேண்டும். இந்த முறையில் வாரத்திற்கு மூன்று நாட்கள் செய்வதன் மூலம் நம்முடைய உதட்டில் இருக்கக்கூடிய கருமை அனைத்தும் நீங்கி மிருதுவான பிங்க் உதட்டை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: உடல் பளபளக்க உதவும் எண்ணெய்
லிப்ஸ்டிக் உபயோகப்படுத்தாமல் இந்த முறையில் இயற்கையான நல்ல பொருட்களை பயன்படுத்தி நம்முடைய உதட்டின் நிறத்தை மேம்படுத்திக் கொள்வோம்.

- Advertisement -