- Advertisement -
- Advertisement -

மகா சங்கடஹர சதுர்த்தி என்பது மாதம்தோறும் வரும் தேய்பிறை சதுர்த்தி நாட்களில் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் பெரிய சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. 12 மாதங்களில் வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தியில் விநாயகரை வழிபட தவறியவர்கள், இந்த மகா சங்கடஹர சதுர்த்தி நாளில் வழிபட்டால் 12 மாதம் விரதம் இருந்த பலன் கிடைக்கும். இவ்வருடம் செவ்வாய் காலை 10.36 மணி முதல் புதன் காலை 8.38 வரை திதி நீடிக்கிறது. மகா சங்கடஹர சதுர்த்தியில் சொல்ல தவறக்கூடாத மந்திரம் என்ன? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவில் தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறோம்.

ஒருமுறை விநாயகப் பெருமானின் பெரிய வயிற்றையும், யானை போன்ற முகத்தையும் பார்த்து சந்திர பகவான் தான் அழகாக இருக்கும் கர்வத்தால் மதிகெட்டு போய் கேலி, கிண்டல் செய்து கொண்டிருந்தார். இதனால் கோபம் கொண்ட விநாயகர், “கர்வத்தால் என்னை இகழ்ந்து சிரித்த உன்னை பார்ப்பவர்களுக்கு, இந்த தினத்தில் அவதூறு ஏற்படும்” என்று சாபம் கொடுத்து விட்டார். தன் ஒளியை இழந்து கருப்பாக மாறிவிட்டார் சந்திர பகவான். பின்னர் தன் தவறை உணர்ந்த சந்திர பகவான், கடும் தவம் புரிந்தார் என்று புராணம் கூறுகிறது.

- Advertisement -

சந்திர பகவானின் தவத்தை கண்டு மகிழ்ந்த விநாயகப் பெருமான், அவர் முன் தோன்றி, இனி தேய்பிறை சதுர்த்தியில் என்னை வணங்கி, உன்னையும் வணங்குபவர்களுக்கு அனைத்து விதமான சாபங்களும் நீங்கும் என்று அருள் கொடுத்தார். சங்கடம் என்றால் துன்பம், ஹர என்றால் நீக்குவது சங்கடஹர என்பது துன்பத்தை நீக்கும் நாளாகும். ஒருமுறை ஸ்ரீ கிருஷ்ணர், விநாயகர் சந்திரனுக்கு சாபம் கொடுத்த அந்த நாளில், சந்திரனை பார்த்து விட்டார். இதனால் அவருக்கும் கூட சாபம் ஏற்பட்டது. சியமந்தக மணி என்னும் ரத்தினத்தை அவர் திருடியதாக வீண்பழி சுமக்க நேரிட்டது.

இதனை அறிந்த நாரதர் பின்னர் கிருஷ்ணரிடம் சென்று, நீங்கள் சதுர்த்தி நாளில் சந்திரனை பார்த்து விட்டதால், இந்த சாபம் ஏற்பட்டது என்றும், அதற்கான தீர்வாக சங்கட ஹர சதுர்த்தி விரதத்தை மேற்கொள்ள அறிவுரையும் கூறினார். அதன்படி சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மேற்கொண்ட பின்பு, அது ஜாம்பவான் குகையில் இருப்பதை அறிந்து கொண்டு போர் புரிந்து, தான் யார் என்பதை சொல்லி, பின்னர் அந்த ரத்தினத்தை கைப்பற்றி கிருஷ்ணர் தன் பழியை நீக்கிக்கொண்டார்.

- Advertisement -

தோரண கணபதி மந்திரம்:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் கலௌம் கம் தோரண கணபதயே
சர்வகார்ய கர்த்தாய ஸகல சித்திகராய ஸர்வஜன வசீகரணாய
ருணாமோசன வல்லபாய ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா..

இதையும் படிக்கலாமே:
மகா சங்கடஹர சதுர்த்தி 2025

நான்கு கரங்களுடன் சித்தி, புத்தியுடன் அருள்பாலிக்கும் தோரண கணபதியாக காட்சி தரும் விநாயகரின் இந்த மந்திரத்தை மகா சங்கடஹர சதுர்த்தி அன்று பூஜையில் சொல்லி வந்தால், தீராத துன்பங்கள், கடன்கள் தீருவதாக ஐதீகம் உண்டு. அதுமட்டுமல்லாமல் புதிதாக துவங்கும் காரியங்கள் தடையின்றி நிறைவேறும், திருமண தடைகள் அகன்று திருமணம் கைகூடி வரும், நற்பெயரும், செல்வாக்கும் உயரும், குடும்பத்தில் நிம்மதியும், சாந்தமும் உண்டாகும். பொருளாதார ரீதியான சிக்கல்கள் தீர்ந்து, வாழ்வில் மென்மேலும் உயர்வதற்கு தோரண கணபதியுடைய இந்த சக்தி வாய்ந்த மந்திரம் நல்ல பலன் தரும். எனவே மகா சங்கடஹர சதுர்த்தி அன்று பூஜை செய்யும் பொழுது, இந்த தோரண கணபதி மந்திரத்தையும் சொல்லி வழிபட மறக்காதீர்கள்.

- Advertisement -