- Advertisement -

சர்வ மங்களமும் அஷ்ட ஐஸ்வரியமும் பெருக

- Advertisement -

பொதுவாக பெரியவர்கள் நமக்கு ஆசீர்வாதம் செய்யும்பொழுது சர்வ மங்களமும் உண்டாகட்டும் என்றுதான் ஆசி வழங்குவார்கள். சர்வ மங்களம் என்று சொல்லும் பொழுது அனைத்து விதமான நன்மைகளும் நமக்கு வந்து சேரும் என்று அர்த்தம். இதோடு அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெறுவதற்கு வெள்ளிக்கிழமை வழிபாடு என்பது மிகவும் உகந்த வழிபாடாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக மாசி மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று ஐந்து ரூபாய் வைத்து இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அதைப்பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

அஷ்ட ஐஸ்வரியமும் பெருக

மகாலட்சுமிக்கு உகந்த கிழமையாக வெள்ளிக்கிழமை திகழ்கிறது. அன்றைய நாளில் வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் பலரும் மிகவும் மங்களகரமாக திகழ்வார்கள். மற்ற நாட்களில் எப்படி இருக்கிறார்களோ இல்லையோ வெள்ளிக்கிழமை மட்டும் மிகவும் சுத்தபத்தமாக ஆன்மீக ரீதியாக வழிபாடுகளை மேற்கொண்டு இருப்பார்கள். அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த வெள்ளிக்கிழமை அன்று நாம் சர்வ மங்களமும் அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகி சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கு செய்ய வேண்டிய ஒரு வழிப்பாட்டு முறையை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை இன்று இரவு 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு நமக்கு ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு வேண்டும், ஒரு ஐந்து ரூபாய் நாணயம் வேண்டும். இவை இரண்டு மட்டும் இருந்தால் போதும். பணவரவில் இருக்கக்கூடிய தடைகளை நீக்கி அனைத்து விதமான செல்வ செழிப்பையும் நமக்கு கொண்டு வந்து சேர்க்கும்.

ஒரு கண்ணாடி கிண்ணத்தில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை பரப்பி வீட்டு பூஜை அறையில் மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு விரிப்பை விரித்து அதற்கு மேல் வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு வலது கையில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து மூடிக்கொண்டு மடியில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்பொழுது உங்களுடைய குலதெய்வம், இஷ்ட தெய்வம், மகாலட்சுமி தாயார் என்று அனைவரையும் மனதார நினைத்துக் கொண்டு உங்கள் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நிம்மதி பெருக வேண்டும், சுகமான வாழ்க்கை வாழ வேண்டும், அனைத்து விதமான நன்மைகளும் உண்டாக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு பின்வரும் இந்த ஒரு வரி மந்திரத்தை குறைந்தபட்சம் 10 நிமிடத்தில் இருந்து அதிகபட்சம் 20 நிமிடம் வரை நிறுத்தி நிதானத்தோடு முழுமனதோடு கூட வேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு கையில் இருக்கக்கூடிய ஐந்து ரூபாய் நாணயத்தை கல்லுப்பின் மீது வைத்துவிட்டு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விடுங்கள்.

வழிபாட்டை நிறைவு செய்த பிறகு கல் உப்புஇருக்கக்கூடிய கிண்ணத்தை எடுத்து எந்த இடத்தில் நீங்கள் பணம் வைத்து புலங்குவீர்களோ அந்த இடத்தில் கொண்டு போய் வைத்து விட வேண்டும். பீரோ என்றால் பீரோவிற்குள் வைக்கக்கூடாது பீரோவிற்கு பக்கத்தில் வைக்க வேண்டும். இதை முடியும் வைக்கக்கூடாது. திறந்தே வைக்க வேண்டும். இன்று இரவு முழுவதும் இது அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலையில் கல்லுப்பை தண்ணீரில் கரைத்து கால் படாத இடத்தில் ஊற்றி விடுங்கள். இந்த ஐந்து ரூபாய் நாணயத்தை ஒரு பிளாஸ்டிக் கவரிலோ அல்லது பேப்பரிலோ மடித்து பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

மந்திரம்

“சிவகாரி வசி வசி”

இதையும் படிக்கலாமே:மகா சிவராத்திரி மகா மந்திரம்

இப்படி செய்வதன் மூலம் பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் நீங்குவதோடு சர்வ மங்களமும் உண்டாகும். வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கி அஷ்ட ஐஸ்வர்யத்துடன் வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -