- Advertisement -

மஹாலயா அமாவாசை வழிபாடு செய்யும் முறை

- Advertisement -

நம்முடைய இறந்த முன்னோர்களை நினைத்து நாம் வழிபாடு செய்யக்கூடிய நாளாக திகழ்வதுதான் அமாவாசை. அதிலும் குறிப்பாக வருடத்தில் சில மாதங்களில் வரக்கூடிய அமாவாசை என்பது சிறப்புக்குரியதாக திகழ்கிறது. தை அமாவாசை, ஆடி அமாவாசை போன்று புரட்டாசி அமாவாசையும் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. புரட்டாசி மாதத்தில் தான் நம்முடைய முன்னோர்கள் நம் வீட்டிற்கு வருவார்கள். அந்த மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினத்தன்று நம்முடைய முன்னோர்களுக்கு முறையாக செய்ய வேண்டிய காரியங்களை செய்பவர்களுக்கு முன்னோர்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அப்படி முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைப்பதற்கு செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

மஹாலயா அமாவாசை வழிபாடு

பொதுவாகவே மாதா மாதம் வரக்கூடிய அமாவாசை தினத்தன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது என்றும், நம்முடைய இறந்த முன்னோர்களுக்கு விரதம் இருக்க வேண்டும் என்றும் சமைத்த சாதத்தை காக்கைக்கு வைத்துவிட்டு பிறகுதான் நாம் உண்ண வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இந்த வழக்கத்தை பலரும் கடைபிடித்து வருகிறார்கள். அமாவாசையில் சிறப்பு மிகுந்த புரட்டாசி அமாவாசை என்று கூறப்படுகிறது. அந்த நாளில் செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

எந்த நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கிறோமோ இல்லையோ புரட்டாசி அமாவாசை தினத்தில் கண்டிப்பான முறையில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும். ஆண்கள் தான் திதி கொடுக்க வேண்டும். பெண்கள் திதி கொடுக்கக் கூடாது. அதிலும் குறிப்பாக ஆறு, கடல் போன்ற இடங்களில் திதி கொடுத்தால் முன்னோர்களுக்கு புண்ணியம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

காலையிலேயே திதி கொடுத்துவிட்டு அருகில் இருக்கக்கூடிய பசு மாட்டிற்கு அகத்திக் கீரை, இரண்டு மஞ்சள் வாழைப்பழம், ஒரு துண்டு வெல்லம் இதை கொடுக்க வேண்டும். வீட்டில் இருக்கக் கூடிய பெண்கள் காலையில் கோலம் போடக்கூடாது. தவிர்க்க முடியாத பட்சத்தில் காவி பொடியினால் கோலம் போடலாம். நம்முடைய முன்னோர்களுக்கு விருப்பமான பொருட்கள் அனைத்துமே சமைத்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். ஆண்கள் திதி கொடுத்து முடித்துவிட்டு வந்த பிறகு முன்னோர்களுக்கு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். நுனி இலையாக பார்த்து ஒரு இலையை அவர்களுக்கு முன்பாக விரித்து அவர்களுக்காக செய்து வைத்த உணவுப் பொருட்களை படையலாக இட்டு கற்பூர ஆரத்தி காட்டி அவர்களை வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

பிறகு சமைத்த இந்த உணவை காகத்திற்கு வைக்க வேண்டும். அடுத்ததாக வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய ஏழ்மையான ஒரு நபரை வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களுக்கு சாப்பாடு போட வேண்டும். அவர் திருப்தியாக சாப்பிட்டு முடித்த பிறகு தான் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட வேண்டும். இந்த முறையில் மஹாளய அமாவாசை அன்று நாம் முன்னோர்களை வழிபாடு செய்தோம் என்றால் முன்னோர்களின் பரிபூரண ஆசிர்வாதம் நமக்கு கிடைக்கும். மேலும் முன்னோர்களால் ஏற்பட்ட சாபங்கள் நீங்க பெற்று காரியத்தடைகள் அனைத்தும் விலகும். சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும். பெண்கள் தங்களுடைய தாய் தந்தையருக்கு திதி தரக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்டவர்கள் திதி தருவதற்கு பதிலாக பசு மாட்டிற்கு தானம் கொடுத்து விட்டு இந்த முறையில் காகத்திற்கும், வறுமை நிலையில் இருப்பவர்களுக்கும் உணவளித்தாலேயே அவர்கள் தாய் தந்தையரின் ஆசிர்வாதத்தை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே:கடன் தீர்க்கும் பெருமாள் உண்டியல்
இந்த முறையில் எளிமையாக முன்னோர்களை மஹாலய அமாவாசை தினத்தன்று வழிபாடு செய்பவர்களுக்கு முன்னோர்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -