- Advertisement -

மஹாளய பட்சம் 9ஆவது நாள் சிறப்பு பரிகாரம்

- Advertisement -

நாளை, மகாளய பட்சத்தின் ஒன்பதாவது நாள். நவமி திதி இருக்கிறது. இந்த நாளை நம்முடைய சாஸ்திரத்தில் அவிதவ நவமி என்று சொல்கிறார்கள். நம்முடைய குடும்பத்தில் சுமங்கலிகளாக வாழ்ந்து மறைந்தவர்களின் ஆசிர்வாதத்தை முழுமையாக பெற இந்த நாள் நமக்கு உதவி செய்யும்.

இந்த நாளில் வழக்கம் போல பித்துருக்களுக்கு செய்ய வேண்டிய சிரார்த்த முறைகளை செய்து, கூடவே பிரத்தியேகமாக நம் குடும்பத்தில் மறைந்த சுமங்கலி பெண்களுக்காக ஒரு சில சாஸ்திர சம்பிரதாய வழிபாட்டு வழிபாடுகள் செய்யப்படும். இந்த 15 நாளும் மகாலய பட்சத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பவர்களுக்கு இது தெரிந்திருக்கும்.

- Advertisement -

15 நாட்களும் ஒரு பிராமணரை வைத்து முன்னோர்களுக்கு திதி கொடுத்தால், மறைந்த சுமங்கலி பெண்களுக்கு செய்ய வேண்டிய விசேஷ பூஜைகளை அவர்களே செய்து விடுவார்கள். நாங்கள் 15 நாட்களும் திதி கொடுக்கவில்லை. முன்னோர் வழிபாடு செய்யவில்லை. இந்த மஹாளய பட்சம் எல்லாம் எங்களுக்கு கிடையாது. நாங்களும் எங்கள் வீட்டில் மறைந்த சுமங்கலி பெண்களின் ஆசிர்வாதத்தை பெற வேண்டும் என்றால் என்ன முறையில் பரிகாரங்களை நாளைய தினம் செய்ய வேண்டும். இதற்கான பதிலை தான் இன்றைய ஆன்மீகம் பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

மகாளய பட்சம் 9ஆவது நாள் வழிபாடு

நாளைய தினம் உங்களுடைய வீட்டில் சுமங்கலியாக இறந்தவர்களின் திருவுருவப்படம் உங்களது வீட்டில் இருந்தால் அந்த படத்தை துடைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, பூ வைத்து, அவர்களை மனதார நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். முடிந்தால் அந்த மறைந்த சுமங்கலி பெண்ணின் திருவுருவப்படத்திற்கு முன்பாக ஒரு புடவை, ரவிக்கை, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பூ பழம், வைத்து கற்பூர ஆரத்தி காண்பித்து அவர்களுக்கு வழிபாட்டை மேற்கொண்டு அந்த வஸ்திரம் தாம்பூலம் பூ பழம் அனைத்தையும் ஒரு ஏழை சுமங்கலி பெண்ணுக்கு தானமாக கொடுத்தால் ரொம்ப ரொம்ப நல்லது.

- Advertisement -

இந்த வழிபாட்டை மேற்கொள்வதால் உங்கள் வீட்டில் இருக்கும் சுபகாரிய தடைகள் விலகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். வீட்டில் சுபிட்சம் நிலவும் என்பது நம்பிக்கை. உங்கள் வீட்டில் மறைந்த சுமங்கலி பெண்களின் திருவுருவப்படம் இல்லை இரண்டு மூன்று தலைமுறைக்கும் முன்பாக இப்படி சுமங்கலியாக இருந்தவர்கள் உள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரிந்தால் அவர்களை நினைத்தும் புதுசாக வஸ்திரம் வாங்கி அதில் தாம்பூலம் வைத்து நீங்கள் தானம் கொடுக்கலாம்.

அதிலும் எந்த தவறும் கிடையாது. உங்களுடைய அம்மா, அல்லது உங்கள் மாமியார் யாராவது சுமங்கலிகளாக இருந்திருந்தால் இந்த நாளில் அவர்களை நினைத்து நீங்கள் திதி தர்ப்பணம் செய்யலாம். நீர் நிலைகளிலுக்குசென்று ஒரு பிராமினரின் உதவியோடு இந்த திதி தர்ப்பணங்களை முறையாக செய்யலாம். சில பேரால் இதுவும் செய்ய முடியாது. அப்போது என்ன செய்வது. கொஞ்சம் எள்ளும் தண்ணீரும் உங்கள் கையில் எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒரு மரத்தடிக்கு அருகில் சென்று மறைந்த முன்னோர்களின் நினைத்து அந்த எள் தண்ணீரையும் அந்த மரத்துக்கு அடியில் உங்கள் கையால் விட்டுவிட்டு நமஸ்காரம் செய்து கொண்டு வர வேண்டும். மகாளைய பட்சத்தில் 15 நாட்களும் பித்ருலோகத்தில் இருந்து பூலோகத்திற்கும் முன்னோர்கள் வருவார்கள் என்பது ஐதீகம். இந்த மகாளய பட்சத்தில் பூமிக்கு வரக்கூடிய முன்னோர்களை பசியுடன் நாம் திருப்பி அனுப்பக் கூடாது.

அவர்கள் பசியோடு, பூமியில் இருந்து பித்ருலோகம் சென்றால் அந்த ஏக்கம் சாபமாக மாறி நம் குடும்பத்திற்கு கஷ்டத்தை கொடுத்து விடும். இதில் எதுவுமே உங்களுக்கு நம்பிக்கை இல்லை. சாஸ்திரம் சம்பிரதாயம் எல்லாம் எங்களுக்கு தெரியாது. இது எல்லாமே எங்களுக்கு பழக்கம் கிடையாது என்றாலும் சரி நாளைய தினம் வெறும் இரண்டு பேருக்காகவது, வயிறார உங்கள் கையால் அன்னதானம் செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: திருப்பதி லட்டு உருவான வரலாறு

பசியோடு வீதியில் சுற்றி திரியும் இரண்டு பேருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தாலே அந்த புண்ணியம் உங்களை வந்து சேரும். மறைந்த முன்னோர்களின் ஆசி உங்களுக்கு கிடைக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -