- Advertisement -
- Advertisement -

முகத்தில் மாம்பழம் போன்ற தங்க நிற ஒளியை தரக்கூடிய ஜொலிப்பை தேடுகிறீர்களா? தானே பழுத்த மாம்பழம் உங்கள் அழகு குறிப்புகளில் புதுமையான ரகசியமாக இருக்கலாம்! சத்துமிக்கதும், விட்டமின்கள் நிறைந்ததுமான மாம்பழம், உங்கள் சருமத்துக்குத் தேவையான ஈரப்பதம், ஊட்டச்சத்து மற்றும் பொலிவை வழங்குகிறது. வாங்க ஒளிரும் சருமத்திற்கு மாம்பழ ஃபேஸ் பேக் எப்படி போடுவது? என்னும் அழகு குறிப்பு ரகசியத்தை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

ஏன் மாம்பழம் ஃபேஸ் பேக்?
மாம்பழத்தில் உள்ள விட்டமின் A, C மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முக சருமத்தை சீராக்கி, பளிச்சென பொலிவாக்கும். இது சரும உலர்ச்சி, முகப்பரு, கருமை போன்ற பிரச்சனைகளைத் தடுக்கும். மாம்பழம் என்பது சுவையும், சத்தும் நிறைந்த ஒரு பழமாக மட்டுமல்லாது, சரும அழகிற்கும் பல நன்மைகளை வழங்கும் ஒரு சிறந்த இயற்கை பொருளாகும்.

- Advertisement -

மாம்பழம் கொண்டு செய்யக்கூடிய அழகு குறிப்பு :
மாம்பழ பழுத்த பகுதி – 2 மேசைக்கரண்டி
தேன் – 1 மேசைக்கரண்டி
பால் – 1 மேசைக்கரண்டி

செய்முறை:
இரண்டு மேசைக்கரண்டி மாம்பழத்தை நன்கு மசித்து, அதில் தேனும், பாலும் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்திலும் தடவி 15–20 நிமிடங்கள் வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும். இது சருமத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்கிறது. முகத்தில் ஒளி பாய வைக்கிறது. மென்மையான மற்றும் மாசற்ற தோலை வழங்கும். இந்த மாம்பழ ஃபேஸ் பேக் வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம். ஃபேஸ் பேக் மட்டுமல்லாமல், மாம்பழத்தை சருமத்திற்கான ஸ்க்ரப்பர் ஆகவும் பயன்படுத்தலாம்.

- Advertisement -

வறண்ட சருமத்திற்கான மாம்பழ ஸ்கிரப்பர் :
மாம்பழம் பழுத்த பகுதி – 2 மேசைக்கரண்டி
சர்க்கரை – 1 மேசைக்கரண்டி
தேன் – 1 மேசைக்கரண்டி

செய்முறை:
மாம்பழத்தை மசித்து அதில் சர்க்கரையும், தேனும் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை முகத்தில் சற்று அழுத்தமாக சுற்றுச்சுற்றாக மசாஜ் செய்யவும் (5 நிமிடங்கள்). பிறகு கழுவவும். சருமத்தில் இருக்கக்கூடிய அழுக்கும், இறந்த செல்களும் நீங்கும். முகம் நன்றாக மிளிரும்.

- Advertisement -

எண்ணெய் சுரக்கும் சருமத்திற்கான மாம்பழ ஸ்கிரப்பர் :
மாம்பழக் கூழ் – 1 மேசைக்கரண்டி
பசும்பால் – 1 மேசைக்கரண்டி
ஓட்ஸ் பொடி – 1 மேசைக்கரண்டி

செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள மூன்றையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் விட்டுப் பிறகு, மெதுவாக மசாஜ் செய்து கழுவவும். இப்படி செய்வதால் எண்ணெய் சுரப்பை இது கட்டுப்படுத்தும், முகத்தை புத்துணர்வாக மாற்றும்.

முகப்பரு (Acne) குறைக்கும் மாம்பழ ஃபேஸ் பேக் :
மாம்பழக்கூழ் – 1 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
அரிசி மாவு – 1 மேசைக்கரண்டி

செய்முறை:
இவை அனைத்தையும் ஒன்றாக நன்கு கலந்து பின் சருமத்தில் மென்மையாக தடவவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். முகப்பருவை குறைக்கும், பாக்டீரியாக்களை ஒழிக்கும்.

சருமம் மாம்பழ நிறத்தில் ஒளிரக்கூடிய பேஸ் பேக் :
மாம்பழக்கூழ்– 2 மேசைக்கரண்டி
அலோவேரா ஜெல் – 1 மேசைக்கரண்டி
அரிசி மாவு – 1 மேசைக்கரண்டி

இதையும் படிக்கலாமே:
பணம் பெயர் புகழ் பதவி அந்தஸ்து கிடைக்க தாயார் வழிபாடு

செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் மெல்லிய மசியலாகக் கலக்கி முகத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். முகத்தில் இயற்கை பளபளப்பை தரும், கடினமான கருப்பு புள்ளிகளை குறைக்கும். சருமத்தை தங்கம் போல உள்ளிருந்தே ஒளிர செய்யும். இவை எல்லாம் இயற்கை முறைகள் என்பதால் பக்கவிளைவுகள் இல்லை. ஆனால் முதலில் ஒரு சிறிய பகுதியில் மட்டும் பரிசோதித்து பின் பயன்படுத்துவது நல்லது.

- Advertisement -