
இப்போது மார்கழி மாதம் நடந்து கொண்டிருக்கிறது. நம்மில் பெரும்பாலானவர்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து இறை வழிபாடை செய்பவர்களாகத்தான் இருப்போம். உங்களால் தினமும் மார்கழி மாதம் எழுந்து பிரம்ம முகூர்த்த நேரத்தில் வழிபாடு செய்ய முடியவில்லை என்றாலும், பரவாயில்லை. பின் சொல்லக்கூடிய இந்த முறையில் ஒரே ஒரு நாள், உங்களுடைய தேவைகளை இறைவனிடம் சொல்லிப் பாருங்கள்.
உங்கள் கையில் இந்த ஒரு பொருளை வைத்துக் கொண்டு, இறைவனிடம் என்ன கேட்டாலும் அந்த வரம் உங்களுக்கு உடனடியாக கிடைக்கும். பிரம்ம முகூர்த்த வேண்டுதலின் போது நம்முடைய கையில் வைத்துக் கொள்ள வேண்டிய அந்த பொருட்கள் என்ன, எப்படி வேண்டுதலை வைப்பது ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
பண ஈர்ப்பை அதிகப்படுத்தும் ஜாதிக்காய், பச்சைக் கற்பூரம் தான் அந்த பொருட்கள். பணத்தை வசியம் செய்ய சொல்லப்பட்டிருக்கும் முதல் பொருள் ஜாதிக்காய், பச்சைக் கற்பூர வாசம் நம் மனதை ஒருநிலைப்படுத்தி இறை வழிபாட்டில் ஆர்வத்தை தூண்டிவிடு. அது நமக்கு ஒரு விதமான மன அமைதியை கொடுக்கும். ஆக இந்த இரண்டு பொருட்களையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து அமர்ந்து கொள்ளுங்கள். பூஜை அறைக்கு செல்ல முடியாது, பூஜை அறை, வரவேற்பு அறையில் இருக்கிறது. வரவேற்பறையில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருப்பார்கள் என்றால், உங்கள் வீட்டில் எந்த இடம் அமைதியாக இருக்கிறது. அந்த இடத்தில் ஒரு மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அந்த விளக்கு முன்பாக அமர்ந்து கொள்ளுங்கள்.
ஒரு சின்ன மஞ்சள் இழைக்கின்ற கல்லில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, ஒரு தனி ஜாதிக்காயை குழைத்து அதை எடுத்து நெற்றியில் திலகமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஜாதிக்காய் திலகத்தை 2 புருவங்களுக்கு மத்தியில் இட்டுக் கொண்டால் பணவசியம் உண்டாகும்.
அடுத்து புதுசாக 2 ஜாதிக்காய்களை எடுத்து 2 உள்ளங் கைகளில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பரிகாரத்திற்கு உங்களுக்கு மூன்று ஜாதிக்காய் தேவை. இரண்டு ஜாதிக்காய்களையும் உள்ளங்கைகளில் வைத்து, மூடிக்கொண்டு முதுகு தண்டுவடம் நேராக இருக்கும் படி அமர்ந்து மூச்சை நன்றாக உள்ளே இழுத்து, மூச்சு நன்றாக வெளியே விட்டு தியானம் செய்து உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை இந்த பிரபஞ்சத்திடம் கேட்கலாம். உங்களுக்கு ஏதாவது மந்திரம் சித்தியாக வேண்டும் என்றாலும் இதன்படி மந்திரத்தை உச்சரிக்கலாம்.
சாதாரணமாக மார்கழியில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் வைக்கும் வேண்டுதலுக்கு என்ன பலன் கிடைக்குமோ, அதை விட ஆயிரம் மடங்கு பெரிய பலன் உங்களுக்கு கிடைக்கும். இரண்டு கைகளில் ஜாதிக்காயை வைத்து, நெற்றியில் ஜாதிக்காய் திலகத்தை வைத்து மேல் சொன்ன முறையில் பிரார்த்தனை செய்தால். உங்கள் முன்பாக ஒரு சின்ன கிண்ணத்தில் பச்சை கற்பூரத்தை திறந்தபடி, தூள் செய்து போட்டு விடுங்கள். அந்த வாசம் உங்களை சுற்றி இருக்க வேண்டும்.
அந்த வாசம் உங்கள் சுவாசத்தில் கலந்து உங்களுடைய மனதை இன்னும் ஒருநிலைப்பட்டு இறைவனிடம் அழைத்து சென்று அடையும். 15 லிருந்து 20 நிமிடங்கள் மேலே சொன்ன முறையில் தியான நிலையில் அமர்ந்து வேண்டுதலை வையுங்கள். பணம் வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும் கடன் குறைய வேண்டும், வீட்டில் இருக்கும் சண்டை சச்சரவுகள் தீர வேண்டும், சொந்த வீடு வாகனம் வேண்டும், பிடித்த நபரை கரம் பிடிக்க வேண்டும் என்று எந்த பிரார்த்தனை வைத்தாலும் அது நிச்சயம் நடக்கும். மார்கழி மாதத்தில் தொடர்ந்து மூன்று நாள் ஐந்து நாள் இதுபோல செய்யுங்கள்.
இதையும் படிக்கலாமே: கோளறு பதிகம் பாடல் வரிகள்
நீங்கள் முதல் நாள் பரிகாரத்திற்கு பயன்படுத்திய அந்த ஜாதிக்காய் பச்சை கற்பூரம், அதையே தினமும் தொடர்ந்து பயன்படுத்தலாம். தினமும் புதுசாக மாற்ற வேண்டும் என்று அவசியம் கூட இல்லை. பிறகு என்ன உங்கள் மனநிலை ஒருநிலைப்படுத்தப்பட்டு பிரபஞ்சத்தின் ஆற்றல் உங்களுக்குள் வந்து திறமையாக செயல்பட தொடங்கி விட்டால், வெற்றி காண்பதில் எந்த தடையும் இருக்காது. சவால்களை சுலபமாக சமாளிப்பீர்கள் நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.