
Marriage wishes in tamil 2023: திருமணம் என்பது அனைவரின் மனதிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு சமுதாய நிகழ்வாகும். அனைத்து மனிதர்களின் மனத்திலும் இன்பமானது மிகவும் ஆழமான ஒரு தருணமாக இருப்பது திருமணம் எனும் நிகழ்வு தான். அத்தகைய திருமணத்தில் புதிதாக இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கின்ற மணமக்களை தமிழில் வாழ்த்த பலரும் விரும்புகின்றனர். அதே சமயம் ஏற்கனவே திருமணம் ஆன பலருக்கும் அவர்களது திருமண நாளில் வாழ்த்துக்கள் கூறி மகிழ ஆசைப்படுகின்றனர். அப்படி தமிழில் வாழ்த்த விரும்புபவர்களுக்கான தமிழ் திருமண வாழ்த்து கவிதைகள் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
உங்களுக்குள் என்றும்
இந்த அன்பும், காதலும் தொடர
இனிய திருமண வாழ்த்துக்கள்.
சூரியன், சந்திரன் சாட்சியாய் நின்று
சொந்தங்களும், பந்தங்களும், சுற்றத்தாரும்
தொலை தூரத்து உறவினரும், நண்பர்களும்,
நெருக்கமான நேசங்கள் ஒன்றுசேர ஆசீர்வதிக்கும்
பொன்னான இந்த திருமண விழா
உங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கட்டும்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
திருமண கோலத்தில் எழுதப்படும் நல்வரவு போல
இனிவரும் காலங்கள் அனைத்தும்
உங்கள் வாழ்வில் நல்லதாகவே அமையட்டும்.
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
இந்த மங்களகரமான நாளில்
நீங்கள் இருவரும் அனைத்து மங்களங்களையும்
பெற்று சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
வாழ்க்கை என்பதற்கான உண்மையான அர்த்தத்தை
புரிந்து கொள்ள உதவும் மிகச்சிறந்த நன்னாள் ஆன
உங்களின் திருமண நாளில்
நீங்கள் சீரும் சிறப்புமாக வாழ இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
பிரியாத அன்பும்
புரிந்துகொள்ளும் பக்குவமும்
விட்டுக்கொடுக்காத பண்பும்
கொண்டு பல்லாண்டு வாழ
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் மழைபோல் பொழிய
மலர்மாலை சூடி மகிழ்வோடு வாழ்க.
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.
ஆயிரம் உறவுகள் கூடி கோர்த்த
மாலைகளை கழுத்தில் சூடி,
மங்கள வாத்தியங்களோடு
மனதிற்குள் பேரின்பத்தை உணரும்
இந்நாள் என்றும் நன்னாளாக இருக்கட்டும்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
அகம் மகிழ்ந்து
அன்பு பொங்கி
முகம் மலர்ந்து
தினமும் சிரித்து வாழ
மனம் கனிந்த திருமண நாளில் வாழ்த்துகிறேன்
தென்றலின் சாமர வீச்சில்
திங்களின் ஒளி ஒத்தடத்தில்
மங்கள நாளில்
மணமக்கள் மகிழ்வுடன் வாழ்க.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
இன்று போல் என்றும் மகிழ்ச்சியிலும்,
அன்பிலும் திளைத்து இன்பமயமான வாழ்க.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
இதையும் படிக்கலாமே: முகூர்த்த நாட்கள் 2023
மனம் போல மாங்கல்யம்
மன்றத்தில் உற்றார் உறவினர்களின் வாழ்த்துக்கள்
மழைபோல் பொழிய,
மலர்மாலை சூடி பல்லாண்டு
மகிழ்வோடு வாழ்க
உற்றார் உறவினர்கள் புடை சூழ, பெரியோர்களின் ஆசியுடன் பலருக்கும் திருமணம் நடந்ததாலும் சில நேரங்களில் நமக்கு மிகவும் நெருக்கமான சிலரின் திருமணத்திற்கு கூட முக்கியமான சில வேலை காரணங்களுக்காக நாம் செல்ல முடியாது ஒரு சூழல் ஏற்படும். அது போன்ற சமயங்களில் மணமேடையில் வீற்றிருக்கும் உங்கள் உறவின் முகத்தில் புன்னகை பூக்கச்செய்யும் வகையில் மேலே உள்ள வாழ்த்துக்கள் இருக்கும்.
நீங்கள் இந்த வாழ்த்துக்களை அனுப்புவதன் மூலம் அவர்களின் முகத்தோடு மனமும் மலரும் என்பதில் ஐயமில்லை. திருமண வாழ்த்து மடல், திருமண நாள் வாழ்த்து கவிதை என திருமணம் சார்த்த அதையும் வாழ்த்தும் உள்ளது.