- Advertisement -
- Advertisement -

மனித உடம்பில் எங்கு வேண்டுமானாலும் அசாதாரணமாக நுழையக் கூடியது இந்த ஹியூமன் பாப்பிலோமா வைரஸ். இவ்வைரஸ் மூலமாக உருவாகக் கூடியது தான் மரு. இதில் பல வகைகள் இருந்தாலும், ஸ்கின் டேக் எனப்படும் தோலோடு ஒட்டியபடி இருக்கும் சில கடினமான மச்சம் போன்ற மருக்களும், காலிஃப்ளவர் போல மேற்புற தோற்றமளிக்கும் பெரிய பெரிய மருக்கள் தான் மனிதர்களிடையே அதிகம் பரவுகிறது. இந்த மருக்களுக்கு நிரந்தர குட் பை சொல்லக் கூடிய ரெண்டு எளிய அழகு குறிப்பு சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

மருக்கள் ஆரம்ப கட்டத்திலேயே கவனிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டு விட்டால் பிரச்சனைகளும் குறையும். நீண்ட காலம் வளர விட்ட பின்பு அதைப் போக்க நினைத்தால் வலி மற்றும் பின் விளைவுகளும் ஏற்படும். நவீன உபகரணங்கள் மூலமாக லேசர் ட்ரீட்மென்ட் செய்து எளிதாக மருக்களை விரட்டி அடிக்கலாம். வீட்டிலேயே சில எளிய வைத்தியங்களை கடைபிடித்தும் மருக்களை துரத்தலாம். அப்படிப்பட்ட இரண்டு வீட்டு வைத்திய முறைகளை தான் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம்.

- Advertisement -

முதலாவதாக சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கப்படும் ஆப்பிள் சீடர் வினிகர் வாங்கிக் கொள்ளுங்கள். காட்டன் பஞ்சு எடுத்து அதில் கொஞ்சம் வினிகரை சேர்த்து நனைத்து மரு உள்ள இடத்தில் மட்டும் சுத்தம் செய்து, அதன் மீது அழுத்தி வையுங்கள். பின்பு ஒரு செலோடேப் அல்லது டேப் மாதிரி ஏதாவது ஒன்றை வைத்து இறுக்கமாக ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள். இதை இரவு தூங்க செல்லும் பொழுது செய்துவிட்டு தூங்க செல்லுங்கள்.

காலையில் எழுந்ததும் எடுத்து விடுங்கள். அது போல தொடர்ந்து பத்திலிருந்து 15 நாட்கள் செய்தால் எப்படிப்பட்ட கடுமையான வேரூன்றி இருக்கும் மருக்களும் கருகி உதிர்ந்து விடும். அதே போல காலிஃப்ளவர் போல இருக்கும் குருணை மருக்களையும் விரட்டி அடிக்க இந்த வழிமுறையை பயன்படுத்தலாம்.

- Advertisement -

இரண்டாவதாக சோடா உப்பு எனப்படும் பேக்கிங் சோடாவை எடுத்துக் கொள்ளுங்கள். பேக்கிங் பவுடர் கிடையாது, பேக்கிங் சோடாவை எடுத்து அதனுடன் சம அளவிற்கு விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து விடுங்கள். ஒரு காட்டன் பஞ்சு எடுத்து அதில் இதை நனைத்து மரு உள்ள இடங்களில் சுத்தம் செய்த பின்பு அழுத்தி வைத்து லேசாக தேய்த்துக் கொடுங்கள். பின்பு முன்பு கூறியதைப் போலவே ஒரு செலோடேப் அல்லது ஏதாவது ஒரு டேப் வைத்து இறுக்கமாக ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள். காலையில் அதனை எடுத்து விடுங்கள். இது போல மரு நன்கு தளர்ந்து உதிரும் வரை செய்ய வேண்டும். அது எவ்வளவு வேரூன்றி இருக்கிறதோ, அதை பொறுத்து நாட்களும் அதிகப்படும். எளிமையான மருக்கள் 7 லிருந்து 10 நாட்களுக்குள் உதிர்ந்து விடும்.

இதையும் படிக்கலாமே:
நாளை பானு சப்தமி வழிபாட்டு முறை

கடினமாக இருக்கக் கூடிய நாள்பட்ட, நீண்டகால மருக்கள் உதிர்வதற்கு அதிக நேரமும் எடுக்கும். எனவே தினமும் இது போல செய்து தூங்குங்கள், நிச்சயம் 20 நாட்களுக்குள் எப்பேர்பட்ட மருக்களும் உதிர்ந்து விடும். இந்த இரண்டு விஷயங்களை செய்யும் பொழுதும் மரு உள்ள இடத்தில் மட்டுமே செய்ய வேண்டும். மற்ற இடங்களில் செய்தால் எரிச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு சிகப்பு சிகப்பாக முகம் அலர்ஜியாக வாய்ப்புகளும் உண்டு. கழுத்து, கை, கால், முகம், அக்குள் போன்ற எல்லா இடங்களிலும் இதை பயன்படுத்தலாம். கண்களுக்கு மிக அருகாமையில் இருக்கும் மருக்களை மட்டும் எச்சரிக்கையாக கையாளுங்கள்.

- Advertisement -