- Advertisement -
சமையல் குறிப்புகள்

இதுவரைக்கும் சுவைக்காத ருசியில் மிக மிக சுலபமான ஒரு ‘மசாலா சப்பாத்தி ‘ரெசிபி! சப்பாத்தி செய்ய தெரியாதவங்க கூட இந்த சப்பாத்தியை செஞ்சா, வீட்டில் ஒரே பாராட்டு மழைதான்.

- Advertisement -

என்னடா இது, எப்ப பார்த்தாலும் ஒரே மாதிரி சப்பாத்தி சாப்பிட்றோம். அப்படின்னு நினைக்கிறவங்களுக்கு இந்தப் சப்பாத்தி ரெசிபி புது விதமாக இருக்கும். இதேபோல் சப்பாத்தியை சரியான பக்குவத்தில் செய்ய தெரியாதவர்கள் கூட இந்த சப்பாத்தியை செய்து உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுத்தால் நிச்சயம் அவர்கள் உங்களை பாராட்டுவார்கள். இந்த சப்பாத்தி உப்பி வந்தால் தான் நன்றாக இருக்கும். அப்படி என்ற கண்டிஷன்ஸ் எல்லாம் கிடையாது. சாதாரணமாக மாவு பிசைந்து, திரட்டி தோசைக்கல்லில் போட்டு சுட்டு எடுத்தால் இந்த சப்பாத்தியின் சுவை சொல்வதற்கு வார்த்தை இல்லை. சரி ரெசிபிக்கு செல்வோம் வாருங்கள். சப்பாத்தி ரெசிபியின் இறுதியில் சூப்பரான ஒரு சைட் டிஷ் ரெசிபியும் உங்களுக்காக.

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் வறுத்த வேர்க்கடலை – 3 ஸ்பூன், வரமிளகாய் – 4, முந்திரிபருப்பு – 10 இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பருப்பு முழுமையாக இருக்கக்கூடாது. நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் 300 கிராம் அளவு சப்பாத்தி மாவை போட்டு, அந்த மாவிற்கு தேவையான அளவு உப்பு, மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடி சேர்த்து முதலில் நன்றாக கையை விட்டு கலந்து கொள்ள வேண்டும். அதன் பின்பு 2 ஸ்பூன் எண்ணெயை மாவில் ஊற்றி மாவை கலந்து கொள்ள வேண்டும். அதன் பின்புதான் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணிர் தெளித்து சப்பாத்தி மாவு எப்போதும்போல பக்குவமாக பிசைந்து, 20 நிமிடங்கள் ஊற வைத்து விடுங்கள்.

உங்களுக்கு சரியான பக்குவத்தில் சப்பாத்தி மாவு பிசைய தெரியவில்லை என்றால், பச்சை தண்ணீருக்கு பதிலாக, வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி சப்பாத்தி மாவு பிசைந்தால் பக்குவம் சரியாக கிடைக்கும். சரி, சப்பாத்தி மாவை சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து எப்போதும்போல சப்பாத்தி கட்டையில் திரட்டி வைத்து, சப்பாத்தி கல்லில் போட்டு முதலில் எண்ணெய் ஊற்றாமல் இரண்டு பக்கமும் திருப்பி திருப்பி போட்டுக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

இரண்டு பக்கமும் லேசாக வெந்து வரும்போது எண்ணெய் ஊற்றி சப்பாத்தியை வேக வைத்து எடுத்தால் சுவையான மசாலா சப்பாத்தி தயார். இந்த சப்பாத்தி, உப்பி எல்லாம் வராது. சாதாரண சப்பாத்தி போல நமக்கு கிடைக்கும். இருந்தாலும் இதனுடைய சுவை சூப்பராக இருக்கும். தொட்டுக்கொள்ள சைடிஷ் இல்லாமல் கூட குழந்தைகள் சாப்பிடுவார்கள்.

சட்டுனு முட்டையை வைத்து ஒரு சைட் டிஷ் இந்த சப்பாத்திக்கு. ஒரு கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கருவேப்பிலை – 1 கொத்து, தோல் உரித்து பொடியாக நறுக்கிய பூண்டு – 4 பல், பெரிய சைஸ் பெரிய வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து முதலில் வெங்காயத்தின் பச்சை வாடை போகும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதன்பின்பு மிளகாய் தூள் – 1 டேபில் ஸ்பூன், தனியா தூள் – 1/2 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய – 5 மீடியம் சைஸ் தக்காளி சேர்த்து இந்த கலவையை கடாயில் நன்றாக கலந்து விட்டு, தேவையான உப்பு தூவி மீண்டும் ஒருமுறை நன்றாக கலந்து விட்டு, ஒரு மூடி போட்டு, தக்காளியை வேக வைக்க வேண்டும். (தண்ணீர் ஊற்ற வேண்டாம். தக்காளியில் இருக்கும் தண்ணீரே விடும். அதுவே போதும்.)

வெங்காயம் தக்காளி, தொக்கு ஆவதற்கு எண்ணெய் பிரிந்து மேலே வருவதற்கு, 10 லிருந்து 15 நிமிடங்கள் கட்டாயம் எடுக்கும். வெங்காயம் தக்காளி தொக்கு தயாரானதும் ஒரு முட்டையை உடைத்து ஒரு குழி கரண்டியில் ஊற்றி கொள்ளுங்கள். அந்த முட்டையின் மேலே மிளகுத்தூள் உப்பு இரண்டு சிட்டிகை தூவி, அந்த முட்டையை அப்படியே, தக்காளி தொக்கு மேல் ஊற்றி விட வேண்டும்.

நாம் செய்து வைத்திருக்கும் வெங்காய தக்காளி தொக்கில் 4 லிருந்து 5 முட்டைகள் வரை சேர்க்கலாம். கடாயில் ஒரு முட்டைக்கு பக்கத்தில் இன்னொரு முட்டையை கொஞ்சம் கொஞ்சம் கேப் விட்டு இதேபோல் ஊற்றிக் கொள்ளுங்கள். முழுசாக ஊற்றிய முட்டைகளைக் கரண்டியை விட்டு கலந்து உடைத்து விடக்கூடாது. ஒரு தட்டு போட்டு கடாயில் இருக்கும் தொக்கை மூடிவிட்டு, அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டால், முட்டைகள் அழகாக வெந்துவிடும். அடுப்பை அணைத்துவிடுங்கள்.

முட்டைகள் அப்படியே இருக்கட்டும். கடாயின் சூட்டில் முட்டைகள் பக்குவமாக வெந்துவிடும். பரிமாறும் போது அழகாக ஒவ்வொரு முட்டைகளோடு சேர்த்து சப்பாத்திக்கு இந்தத் தொக்கை பரிமாறினால் அருமையான சைடிஸ் தயார். இந்த தக்காளி தொக்கு நான்கிலிருந்து ஐந்து பேர் தாராளமாக சாப்பிடலாம். சாப்பாட்டிற்கும் இந்த முட்டை தக்காளி தொக்கு சூப்பராக இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம உங்க வீட்லயும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -