- Advertisement -

கஷ்டங்கள் நம்மை விட்டு விலகிப் போவதற்கு ஆன்மீகத்தில் சின்ன சின்ன எளிய பரிகாரங்கள் ஏராளமாக இருக்கிறது. பெரிய அளவில் செலவு செய்து யாகங்கள் ஓமங்கள் நடத்தினால் தான் நல்ல பயலங்கள் கிடைக்கும் என்பது கிடையாது. நம்பிக்கையோடு சின்ன கல்லை, கடவுளாக நினைத்து வழிபாடு செய்தால் கூட அதன் மூலம் பெரிய பலன் கிடைக்கும்.

பெரிய பெரிய கோவில்களுக்கு சென்று பெரிய பெரிய இறைவனை வழிபாடு செய்து விட்டு மனதில் ஒரு துளிகூட நம்பிக்கை இல்லாமல் வீடு திரும்பினால் எந்த பிரயோஜனமும் இருக்காது. அந்த வகையில் மிக மிக எளிமையான ஒரு பரிகாரத்தை இன்று பார்க்க போகின்றோம். உங்கள் உடம்பு முழுவதும் இருக்கக்கூடிய தரித்திரத்தை வெளியேற்றப் போகும் ஆன்மீகம் சார்ந்த பரிகாரம்.

- Advertisement -

தரித்திரம் விலக மிளகு பரிகாரம்

பரிகாரத்திற்கு நமக்கு தேவையானது மிளகு. வீட்டு பக்கத்தில் அரசமரம் இருக்கக்கூடிய இடத்தை கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். அரச மரத்தடி பிள்ளையார் இருந்தால் இன்னும் சிறப்பு. கையில் மூன்று மிளகை வைத்துக்கொண்டு, அரச மரத்தை மூன்று முறை வலம் வந்து, பிள்ளையாரை மனப்பூர்வமாக வேண்டிக்கொண்டு, அந்த மிளகை உங்கள் தலையை மூன்று முறை சுற்றி, அந்த மரத்தடியில் போட்டு விட்டு வரவும். பிள்ளையாருக்கு முன்பாக போடக்கூடாது.

அரச மர பிள்ளையாருக்கு பின்பக்கம் இருக்கக்கூடிய இடத்தில், மரத்திற்கு கீழே இந்த மூன்று மிளகை போட்டு விட்டு திரும்பி பார்க்காமல் உங்கள் வீட்டுக்கு வந்து விடுங்கள். வாரம் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்கு இந்த பரிகாரத்தை செய்தாலே போதும். உங்களை பிடித்த தரித்திரம் விலகும் என்பது நம்பிக்கை. இதோடு மட்டுமல்லாமல் இந்த பரிகாரத்தை செய்தால் சனி தோஷத்தால் வரும் பிரச்சனைகளிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.

- Advertisement -

கூடவே கொஞ்சமாக பச்சரிசியை அரைத்து அதில் சர்க்கரை கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை அந்த அரச மரத்தைச் சுற்றி தூவி விட்டு வாருங்கள். அங்கே வரும் கட்டெறும்புகள் அதை சாப்பிடும். ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கிய புண்ணியமும் உங்களுக்கு கிடைக்கும். கர்ம வினைகள் குறையும்.

இந்த பரிகாரம் எங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்று சொன்னாலும், இந்த பரிகாரத்தை மீண்டும் மீண்டும் நினைவு கூறுவதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. பரிகாரத்தை தெரிந்தவர்கள் எல்லாம் அதைப் பின்பற்றுவது கிடையாது. இந்த பரிகாரத்தை பின்பற்றி பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு வாழ்க்கையில் தீர்க்க முடியாத பெரிய பெரிய கஷ்டங்கள் கூட ஒரு சில நாட்களில் தீரும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: திருவோண நட்சத்திர மந்திரம்

அந்த காலத்தில் பெரியவர்கள் சொல்லி வைத்த சின்ன சின்ன பரிகாரத்திற்கு பின்பும் பெரிய அளவில் நல்லது மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பரிகாரமும் அப்படிதான் அறிவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் உங்களுக்கு நல்லது செய்யும் என்ற இந்த தகவலோடு ஆன்மிகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -