- Advertisement -
சமையல் குறிப்புகள்

முள்ளங்கிகீரையை எங்க பார்த்தாலும் மிஸ் பண்ணாம வாங்கி வந்து இப்படி பொரியல் செய்து பாருங்க. செம டேஸ்ட்.

- Advertisement -

பொதுவாகவே கீரை அதிக அளவில் எடுத்துக் கொள்வது நம் உடலுக்கு மிகவும் நல்லது. தினமும் ஏதாவது ஒரு கீரையை சாப்பிட வேண்டும். குறைந்தது வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது கீரை சமைத்தால் நல்லது தான். அதிலும் இந்த முள்ளங்கி கீரையில், முள்ளங்கியில் இருப்பதை விட அதிகமாக வைட்டமின் சி இருக்கிறது. இதில் நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி போன்ற ஊட்டச்சத்துக்களும் அதிக அளவில் இருக்கிறது. சிலருக்கு இதை சமைக்கலாம் என்றே தெரியாமல் தூக்கி போட்டு விடுகிறார்கள். இனி இந்த முள்ளங்கி வாங்கும் போது கீரையுடன் சேர்த்தே வாங்குங்கள். ஏன் என்றால் இந்த பதிவில் கீரை முள்ளங்கி இரண்டையும் ஒன்றாக சேர்த்து தான் ஒரு அருமையான பொரியல் செய்ய போகிறோம். வாங்க எப்படினு பதிவை படிச்சு தெரிஞ்சிக்கலாம்.

தேவையான பொருட்கள்: முள்ளங்கி கீரை – 1 கட்டு (முள்ளங்கியுடன்), வெங்காயம் – 2, காய்ந்த மிளகாய் – 6, கடுகு – 1/2 அரை டீஸ்பூன், சீரகம் -1/2 டீஸ்பூன், வேர்கடலை- 2 டேபிள் ஸ்பூன், மிளகு – 1 டேபிள் ஸ்பூன், உப்பு -1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், பூண்டு – 10 பல், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

முதலில் முள்ளங்கியை நன்றாக தோல் சீவி கழுவிய பிறகு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அலசி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் கீரையும் இரண்டு மூன்று முறை நன்றாக அலசிய பிறகு சிறிதாக நறுக்கி இதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பேனை வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம் இரண்டையும் சேர்த்து பொரிந்ததும் காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு விடுங்கள். பிறகு நறுக்கிய வெங்காயத்தை அதில் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். பூண்டு பொடியாக நறுக்கி இதில் சேர்த்து கொள்ளுங்கள். (தேவைப்பட்டால் பூண்டு அதிகமாக கூட சேர்க்கலாம். பூண்டு அதிகம் சேர்ப்பதால் இந்தக் கீரை பொரியலின் சுவை அதிகமாகவே இருக்கும்).

- Advertisement -

வெங்காயம் பூண்டு இதையெல்லாம் சற்று பொன்னிறமாக வதங்கியவுடன், நறுக்கி வைத்து முள்ளங்கியை போட்டு அதற்கு மேலே அறிந்து வைத்த கீரையும் சேர்த்து அப்படியே ஒரு இரண்டு நிமிடம் தட்டை வைத்து மூடி வேக வையுங்கள். (இடையே கொஞ்சம் கிளறி விடுங்கள் இல்லை கீரை அடி பிடித்து விடும்). இரண்டு நிமிடம் கழித்து மூடியை திறந்து கீரை முள்ளங்கி அனைத்தையும் நன்றாக கிளறிய பின் மஞ்சத்தூள், உப்பு இரண்டையும் சேர்த்து பிறகு லேசாக தண்ணீர் தெளித்த பின், மூன்று நிமிடம் மூடி போட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக ஒரு மிக்சி ஜாரை எடுத்து கொள்ளுங்கள். அதில் எடுத்து வைத்துள்ள வேர்க்கடலையுடன் மிளகையும் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ளுங்கள். இதை கீரை நன்றாக வெந்ததும் இதற்கு மேல் தூவிய உடன் அடுப்பை அணைத்து இறக்கி விடுங்கள். சூப்பரான முள்ளங்கி கீரை பொரியல் தயார்.

- Advertisement -