
மனிதராகப் பிறந்தவர்களுக்கு அவசர புத்தி என்பது அனைவருக்குமே இருக்கும். அந்த காலத்தில் ஒரு சிலர்தான் முன்கோபியாக இருப்பார்கள். ஆனால் இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எடுத்த உடனே கோபம் முந்திக் கொண்டு வருகிறது. எல்லோருமே அவசர அவசரமாக வேலை செய்கின்றோம். அவசர அவசரமாக கோபப்படுகின்றோம். அவசர அவசரமாக ஒரு முடிவை எடுத்து விடுகின்றோம்.
இன்று நிதானமாக சிந்திக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் யாருக்குமே கிடையாது. ஒரு சிலருக்கு பொறுமை இருக்கு. அப்படி பொறுமை இருந்தால் அவர்கள் நிச்சயம் மகான் தான். அவர்களை மனித பிறவியில் சேர்த்துக் கொள்ள முடியாது. நீங்களும் இப்படி அடிக்கடி கோபப்படுவீர்களா? சரியான முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் உணர்ச்சி வசப்பட்டு கோபப்பட்டு தவறான முடிவு எடுத்து விடுவீர்களா. கோபத்தை குறைக்க இன்றைய தினம் கடவுள் உங்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்து இருக்கின்றார்.
இன்றைய தினம் நீங்கள் விநாயகர் வழிபாட்டை பின் சொல்லக்கூடிய முறையில் செய்து பாருங்கள். உங்களுடைய கோபம் குறையும். தடுமாற்றத்தில் எந்த சூழ்நிலையிலும் நீங்கள் தவறான முடிவை எடுக்கவே மாட்டீர்கள். பிள்ளையாரப்பா எப்பாடுபட்டாவது இந்த வழிபாட்டை செய்வதற்கு எனக்கு வழிகாட்டு. எந்த தடையையும் வழிபாட்டில் கொடுத்து விடாதே, என்று வேண்டிக்கொண்டு இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவிற்குள் செல்வோம்.
கோபத்தை கட்டுப்படுத்தக்கூடிய தன்மை, விநாயகருக்கு உண்டு. அசுரனை வசம் வதம் செய்து அம்பாள் கோபமாக கொதித்துக் கொண்டிருந்தபோது, அந்த அம்பாள் கோபத்தை தனிய வைக்க வேண்டும் என்பதற்காகவே, அம்பாளின் முன்பு விநாயகரை கொண்டு போய் அமர வைத்ததாக சில புராண கதைகள் கூறுகிறது. இந்த விஷயத்தை ஒரு இடத்தில் மகா பெரியவா அவர்கள் தன்னுடைய பக்தனுக்கும் சொல்லி இருக்கிறார். விநாயகர் வழிபாடு செய்தால் கோபம் குறையும்.
அந்த வகையில் இன்று விநாயகருக்கு உகந்த சங்கடகர சதுர்த்தி திதி, வெள்ளிகிழமையோடு சேர்ந்து வந்திருக்கிறது. இன்று மாலை விநாயகர் கோவிலுக்கு செல்லுங்கள். அந்த கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து, உங்களுக்கு வரும் இந்த முன்கோபம் தனிய வேண்டும் என்று மனமுருகி விநாயகரிடம் பிரார்த்தனை வைத்துக் கொள்ளுங்கள்.
விநாயகருக்கு பிடித்த நாவல்பழம், இந்த சீசனில் கிடைப்பது அரிது என்று நினைக்கின்றேன். இருந்தாலும் நாவல் பழம் கிடைத்தால் அந்த பழத்தை வாங்கிக் கொண்டு போய் விநாயகர் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து, அந்த பழத்தை மீண்டும் வாங்கி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எல்லாம் ஒவ்வொரு பழமாக தானம் கொடுங்கள்.
நாவல் பழம் மரம் வீட்டு பக்கத்தில் இருந்தால் கூட அவர்களிடம் அனுமதி கேட்டு ஒரு பத்து பழங்களை மட்டும் பறித்துக் கொள்ளுங்கள். இந்த தானத்தை இன்றைய தினம் நீங்கள் செய்தால், அடுத்த சங்கடஹர சதுர்த்தி வருவதற்குள் உங்களுடைய குணத்தில் நிறைய நல்ல வித்தியாசங்கள் தெரியும். முன்கோபம் குறையும். நிதானதோடு சிந்தித்து எந்த முடிவையும் எடுக்க பழகிக் கொள்வீர்கள். அதுமட்டுமல்லாமல் காரிய தடைகள் உங்களுக்கு வராமலும் இருக்கும்.
சரி எனக்கு நாவல் பழம் கிடைக்கவில்லை என்ன செய்வது. முடிந்தால் கொழுக்கட்டை செய்து கொண்டு போய் வைத்து விநாயகருக்கு வழிபாடு செய்து அதை தானம் கொடுக்கலாம். முடியவில்லை என்பவர்கள் வெறும் அவல், பொறிகடலை வெல்லம் போட்டு அதை கலந்து, விநாயகருக்கு நெய்வேத்தியம் செய்து அங்கு வரும் பக்தர்களுக்கு தானமாக கொடுங்கள்.
இதையும் படிக்கலாமே: இன்றைக்கு விநாயகரை இப்படி கும்பிட்டால் அவசரத்தில் ஆத்திரத்தில் எந்த சூழ்நிலையிலும் தவறான முடிவை எடுக்கவே மாட்டீங்க. முன்கோபம் முற்றிலும் குறையும்.
இவ்வளவு சிறப்பு மிக்க பரிகாரத்தை செய்வதற்கான வாய்ப்பை அந்த விநாயகர் உங்களுக்கு உண்டு பண்ணி கொடுத்தாலே வாழ்வில் பிரச்சனைகள் தீர்வதற்கான நல்ல நேரம் பிரிந்து விட்டது என்று தான் அர்த்தம். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த பதிவு நல்ல மாற்றங்களை வாழ்க்கையில் ஏற்படுத்தி தரும் இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.