- Advertisement -

அனைவரின் இல்லங்களிலும் தினமும் ஏதாவது ஒரு டிபன் ஐட்டத்தை நாம் செய்வோம். அவ்வாறு டிபன் ஐட்டத்தை நாம் செய்யும்பொழுது அதற்கு தொட்டுக் கொள்வதற்காகவே சட்னியை செய்வோம். எப்பொழுதும் போல் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, காரச் சட்னி, வெங்காய சட்னி, பூண்டு சட்னி என்று செய்யாமல் காளானை பயன்படுத்தி எப்படி சட்னி செய்தால் வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்

காளானை நம்முடைய உணவில் தினமும் சேர்ப்பதன் மூலம் அதில் இருக்க கூடிய நார்ச்சத்தால் நம்முடைய உடல் எடை குறையும். மேலும் வயிறு தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்கும். மலச்சிக்கல், வயிற்றுப்புண் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது. காளானில் அதிக அளவு கால்சியம் சத்து இருப்பதால் எலும்புகள் வலுவாகிறது. காளானை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதால் பசி ஏற்படாது. இதனால் உடலில் உள்ள கொழுப்புகளின் அளவு குறையும்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • காளான் – 200 கிராம்
  • சின்ன வெங்காயம் – 150 கிராம்
  • பூண்டு – 4 பல்
  • இஞ்சி – 2 இன்ச்
  • எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 6
  • தேங்காய் – கால் மூடி
  • புளி – நெல்லிக்காய் அளவு
  • கடுகு உளுந்து – ஒரு டீஸ்பூன்
  • பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்
  • கருவேப்பிலை – 2 இனுக்கு
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் காளானை தண்ணீரில் அலசி நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயத்தையும், பூண்டையும், இஞ்சியையும் தோலை உரித்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் பாதி அளவு வெந்த பிறகு அதில் நறுக்கி வைத்திருக்கும் காளானை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு பூண்டு, இஞ்சி இவற்றையும் சேர்த்து புளியையும் சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வெந்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு ஆற வைத்து விடுங்கள்.

- Advertisement -

நன்றாக ஆரிய பிறகு மிக்ஸி ஜாரில் இவை அனைத்தையும் சேர்த்து இதனுடன் தேங்காயையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக சட்னி பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த சட்னியை ஒரு பவுலில் மாற்றிவிட்டு தாலிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள், கருவேப்பிலை இவற்றை சேர்த்து நன்றாக பொரிந்ததும் சட்னியில் சேர்த்து கலந்து விட வேண்டும். மிகவும் அருமையான காளான் சட்னி தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: கடுகு குழம்பு செய்முறை

காளானை சாப்பிட மறுக்கும் நபர்களுக்கு அதில் இருக்கக்கூடிய சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த முறையில் சட்னி செய்து கொடுங்கள்

- Advertisement -