
இன்றைய தினம் ராமநவமி. ராமர் இந்த பூமியில் அவதரித்த நாள். உங்களுடைய குடும்பத்தில் பித்ரு தோஷம், பித்ரு சாபம் இருக்கிறது, எவ்வளவோ பரிகாரங்கள் செய்து பார்த்து விட்டோம். ஆனால் பிரச்சனைக்கான விமோசனம் கிடைக்கவில்லை. பித்ரு சாபமும், பித்ரு தோஷமும் குடும்பத்திற்கு மேலும் மேலும் கஷ்டத்தை தான் கொடுக்கிறது என்றால், இன்றைய தினம் ராமர் வழிபாடு செய்யுங்கள்.
உங்களுடைய வீட்டில் இருக்கும் துன்பங்கள் தீரும். அதுவும் உடனடியாக இன்றே ஒரு முடிவுக்கு வரும் என்று சொன்னால், உங்களால் நம்ப முடியுமா. ஆனால் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு கொடுக்கக்கூடிய கடவுள் அந்த ராமபிரான். இந்த நாளில் ராமனை நினைத்து நம்முடைய வீட்டில் இந்த ஒரு பொருளை வாங்கி வைத்து “ராமா ராமா” நாமத்தை சொல்லி அந்த பொருளுக்கு மேலே இரண்டு பூக்களை போட்டாலே போதும். உங்களுடைய துன்பங்கள் தீர்ந்துவிடும். இன்று நாம் வாங்க வேண்டிய அந்த முக்கியமான ஒரு பொருள் என்ன. ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
சுந்தரகாண்டம், சுந்தரகாண்டம் இன்று படித்தால் பெரும்புண்ணியம். ஒரு சுந்தரகாண்ட புத்தகத்தை வாங்கி பூஜையறையில் வைத்து அதற்கு மேலே இரண்டு பூக்களை போட்டு ராமா ராமா என்று சொன்னால் மேலும் மேலும் புண்ணியம் வந்து நம்மை சேரும். பித்ரு தோஷம் நீங்கும். ராமருடைய பட்டாபிஷேக காட்சியை உங்கள் கண் முன்னே கொண்டு வாருங்கள். ராமருக்கு, தேவர்களும், ரிஷிகளும், வானர சேனைகளும், வாழ்த்தியதை உங்கள் கண்முன்னே கொண்டு வாருங்கள்.
இன்று யாரெல்லாம் இந்த ராமர் பட்டாபிஷேக படத்தை பார்க்கிறார்களோ, அவர்கள் வீட்டில் செல்வங்களும் சந்தோஷமும் மனநிம்மதியும் பெருகும் என்று அனைவரும் ஆசிர்வாதத்தை வழங்கியுள்ளார்கள். இந்திரன், சுக்ரீவர், ஹனுமன், லட்சுமி, சிவன், பார்வதி, விநாயகர் முப்பத்து முக்கோடி தேவர்களும் இப்படி அனைவரும் இந்த ராமர் பட்டாபிஷேகம் காட்சியைக் கண்டு மகிழ்ந்து வாழ்த்து தெரிவித்த நேரம் அது.
இந்த காட்சியை நாமும் இன்று மனதிற்குள் கொண்டு வந்து நிறுத்தி, சந்தோஷமாக ராமரை வழிபாடு செய்தால் நமக்கும் பொன் பொருள் சேரும். வீட்டில் சுபிட்சம் நிலவும் என்பதுதான் இதற்கு பின்னால் மறைந்திருக்கும் உண்மை. முடிந்தால் இன்று 4 பேருக்கு நீர் மோர் வாங்கி தானம் கொடுங்கள். பெரும் புண்ணியம் கிடைக்கும்.
சுந்தரகாண்டத்தை வீட்டில் பூஜையறையில் தான் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அழகாக புத்தகம் அடுக்கி வைத்திருக்கும் அலமாரியில் வைத்துக் கொள்ளுங்கள். நேரம் கிடைக்கும் போது அந்த புத்தகத்தை எடுத்து இரண்டு பக்கம் படியுங்கள். ராமா ராமா என்ற வார்த்தையை சொல்லுங்கள். அன்றைக்கான பிரச்சனை அன்றே தீரும். இது நிதர்சனமான உண்மை உங்களுக்கு தேவைப்பட்டால் இந்த பரிகாரத்தை நீங்கள் பின்பற்றி பலன் பெறலாம்.
பிறகு இன்றைய தினம் ராமர் வழிபாடு செய்தால் பித்ரு தோஷம் நீங்கும் என்று சொன்னீர்களே, அது எப்படி. ராமருக்கும் பித்ரு தோஷம் விலகுவதற்கும் என்ன சம்பந்தம். ராமபிரான் பித்ருக்களுக்கு செய்யக்கூடிய கடமைகளை எல்லாம் தவறாமல் செய்து விடுவார். ஆகவே இன்றைய தினம் அவரை நாம் வழிபாடு செய்தால், சூழ்நிலை காரணமாக நம்முடைய பித்ருக்களை வழிபாடாமல் விட்ட கணக்குகளை அவர் சரி பண்ணி விடுவார் என்றும் நமக்கு சொல்லப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே: நிரந்தர லட்சுமி கடாட்சம் பெற அஷ்டமி பரிகாரம்
உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இந்த வழிபாட்டையும் பின்பற்றி பலன் பெறலாம். நம்பிக்கை தான் வாழ்க்கை. உங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும் வழிபாடு ராம வழிபாடு. இந்த சக்தி வாய்ந்த ஆன்மீகம் தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் சந்தோஷத்துடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.