- Advertisement -

உண்மையான பக்திக்கு அடிபணிந்து பக்தனின் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரக்கூடிய தெய்வமாக திகழ்ந்தவர் தான் லட்சுமி நரசிம்மர். நமக்கு வரக்கூடிய இன்னல்கள் அனைத்தையும் நீக்கி நம்மை காப்பாற்றக்கூடிய தெய்வமாகவும் இவர் திகழ்கிறார். அப்படிப்பட்ட லட்சுமி நரசிம்மரை எப்படி வழிபட்டால் நம்முடைய கெட்ட நேரமும் நல்ல நேரமாக மாறும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒருவருக்கு நல்ல நேரம் என்பது இருந்தால் அவர் தொட்டது எல்லாம் துலங்கும். எதர்ச்சியாக செய்யும் செயலில் கூட வெற்றிகள் ஏற்படும். அதுவே அவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் என்னதான் அவர் கஷ்டப்பட்டு நல்லதை நினைத்து நல்லதை செய்தால் கூட அது ஏதாவது ஒரு ரூபத்தில் அவருக்கு கெட்டதாகவே போய் முடியும். இந்த கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றுவதற்கு நமக்கு லட்சுமி நரசிம்மர் துணை இருப்பார்.

- Advertisement -

நம்மிடம் இருக்கக்கூடிய தீயவை அனைத்தையும் விளக்கக்கூடிய தெய்வமாக இவர் திகழ்வதால் இவரை நாம் முழுமனதோடு வழிபட்டோம் என்றால் நம்முடைய கெட்ட நேரமும் நல்ல நேரமாக மாறிவிடும். நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் விலகி ஓடும். கடன் பிரச்சனை தீரும், உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் என்று இவரை வழிபடுவதால் ஏற்படக்கூடிய நன்மைகளை நாம் அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

லட்சுமி நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமாக கருதக்கூடியது தான் சுவாதி நட்சத்திரம். ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரம் வரும். எந்த நாளில் சுவாதி நட்சத்திரம் வருகிறதோ அந்த நாளில் அருகில் இருக்கக்கூடிய லட்சுமி நரசிம்மரின் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது லஷ்மி நரசிம்மருக்கு நெய்வேத்தியம் செய்வதற்காக பானகத்தை தயார் செய்து எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும்.

- Advertisement -

இதை லட்சுமி நரசிம்மருக்கு நெய்வேத்தியமாக வைத்துவிட்டு துளசி அல்லது தாமரை பூ மாலை சாற்றி நெய் தீபத்தை ஏற்றி வைத்து லட்சுமி நரசிம்மரை 11 முறை சுற்றிவர வேண்டும். பிறகு இந்த நெய்வேத்தியத்தை வாங்கி அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும். இப்படி தொடர்ந்து 11 மாதங்கள் வரக்கூடிய சுவாதி நட்சத்திர நாளில் இந்த முறையில் நாம் வழிபாடு செய்து பக்தர்களுக்கு பானகத்தை நெய்வேத்தியமாக தருவதன் மூலம் லட்சுமி நரசிம்மரின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும்.

லக்ஷ்மி நரசிம்மரின் அருளை பெற்றுவிட்டால் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான தீமைகளும் விலகி ஓடும். எதிர்மறை ஆற்றல்கள் காணாமல் போகும். அதனால் நம்முடைய கெட்ட நேரமும் நல்ல நேரமாக மாறும்.

இதையும் படிக்கலாமே: நினைத்தது நடக்க வராகி அம்மன் தீப வழிபாடு

லட்சுமி நரசிம்மரை முழுமையாக நம்பி அவருக்கு மிகவும் பிடித்தமான பானகத்தை பிரசாதமாக பிறருக்கு தருவதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

- Advertisement -