
நம்முடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஒவ்வொரு விஷயத்திற்கும் காரணமாக திகழக்கூடியவர்கள் நவகிரகங்கள் தான். நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையில் நமக்கு பலனை தரக்கூடியவர்களாக தான் இந்த நவகிரகங்கள் திகழ்கின்றன. நவக்கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகம் நமக்கு பாதிப்பை தந்தாலும் அதனால் நம்முடைய வாழ்க்கையில் பிரச்சனை என்பது உண்டாக்கும். அப்படி நவகிரகங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை நீக்கி நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு பௌர்ணமி தினத்தன்று ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பௌர்ணமி அன்று பெண் தெய்வ வழிபாடு, சிவபெருமானின் வழிபாடு, சந்திர பகவானின் வழிபாடு, குலதெய்வத்தின் வழிபாடு என்று பலவிதமான வழிபாடுகளை நாம் செய்வது உண்டு. மேலும் நம்முடைய வேண்டுதல் நிறைவேறுவதற்காகவும், நினைத்தது கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் பலவிதமான பரிகாரங்களையும் நாம் செய்வது உண்டு. அந்த வகையில் நவகிரகங்களால் ஏற்பட்ட பாதிப்புகளை நீக்கவும் நவகிரகங்களின் அருளை பெறுவதற்கும் ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
இந்த தீபத்தை பௌர்ணமி திதி நிறைவடைவதற்குள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஏற்றலாம். பௌர்ணமி திதி என்பது ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி காலை 6.03 மணிக்கு நிறைவடைகிறது. அதற்குள் இந்த தீபத்தை நம்முடைய வீட்டு பூஜை அறையில் ஏற்றி வைத்தோம் என்றாலே போதும் நவகிரகங்களின் அருளை நம்மால் பெற முடியும். நவகிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகங்களாக சில கிரகங்கள் திகழ்கின்றன. அந்த கிரகங்களின் அருள் கிடைத்தாலே நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகள் தீரும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த கிரகங்களின் அருளை பெறுவதற்கு தான் இந்த தீபத்தை நாம் ஏற்ற போகிறோம்.
வீட்டு பூஜை அறையில் 5 புதிதாக வாங்கிய அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள். இந்த அகல் விளக்குகளில் நெய் ஊற்றி வெள்ளை நிற பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். முதல் அகல் விளக்கில் கருப்பு எள் சிறிதளவு போட வேண்டும். கருப்பு எள் என்பது சனீஸ்வர பகவானுக்கு உரிய தானியம் என்று நம் அனைவருக்குமே தெரியும். சனீஸ்வர பகவான் தான் நம்முடைய கர்ம வினைகளுக்கு ஏற்ற பலனை தருகிறார் என்பதால் இந்த தீபத்தை ஏற்றுவதன் மூலம் அவரின் அருளை நம்மால் பெற முடியும்.
அடுத்ததாக மிளகை இரண்டாவது அகல் விளக்கில் போட வேண்டும். இந்த மிளகை நாம் போடுவதன் மூலம் நமக்கு எப்பேற்பட்ட பாதகமான சூழ்நிலையில் கிரகங்கள் இருந்தாலும், நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு பெரிய கஷ்டங்கள் இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. மூன்றாவது அகல் விளக்கில் மஞ்சள் தூளை சேர்க்க வேண்டும். மஞ்சள் என்பது குரு பகவானுக்குரிய என்று நம் அனைவருக்குமே தெரியும். மேலும் மஞ்சள் என்பது அம்பிகையின் அம்சம் பொருந்தியதாக திகழ்கிறது என்பதால் மஞ்சளை போட்டு நாம் தீபம் ஏற்றும் பொழுது நமக்கு பெருஞ்செல்வம் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.
நான்காவது அகல்விளக்கில் பச்சரிசியை சிறிதளவு போட வேண்டும். பச்சரிசி என்பது சந்திர பகவானுக்குரிய தானியமாக கருதப்படுகிறது. சந்திர பகவான் தான் மனோகாரகனாக திகழ்கிறார். நம்முடைய வாழ்க்கையில் நாம் எடுக்கக்கூடிய முடிவுகள் சிறப்பான முடிவுகளாக அமைய வேண்டும் என்னும் பட்சத்தில் நம்முடைய மனம் தெளிவாக இருக்க வேண்டும். அந்த தெளிவை தரக்கூடியவராக தான் சந்திர பகவான் திகழ்கிறார். மேலும் பௌர்ணமி என்பது சந்திர பகவானுக்குரிய திதியாகவும் சந்திர பகவானின் ஆதிக்கம் அதிகமாக இருக்கக்கூடிய நாளாகவும் கருதுவதால் இந்த தீபம் சந்திர பகவானின் அருளை பெற உதவும்.
கடைசியாக இருக்கக்கூடிய அகல் விளக்கில் நான்கு கிராம்பை போட வேண்டும். கிராம்பு என்பது வசியத்தை ஏற்படுத்தக் கூடியது. தெய்வ வசியமாக இருந்தாலும், பண வசியமாக இருந்தாலும் எது நமக்கு வேண்டுமோ அது நமக்கு கிடைக்க இந்த தீபத்தை ஏற்றி வைத்து கேட்க வேண்டும். மேலும் நம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கும். நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும்.
இதையும் படிக்கலாமே:கேட்டதை கொடுக்கும் பௌர்ணமி வழிபாடு
இந்த எளிமையான தீப வழிபாட்டை பௌர்ணமி தினத்தன்று நாம் முழுமனதோடு செய்வதன் மூலம் ஒன்றீரென்று மாதத்திலேயே நம்முடைய வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை நம்மால் உணர முடியும் என்று என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.