
அம்பிகையை 9 நாட்களும் ஒவ்வொரு விதமாக நாம் வழிபாடு செய்வோம். அந்த வகையில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மன் ஆகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி ஆகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி ஆகவும் வழிபாடு செய்வதுண்டு. அந்த வகையில் நவராத்திரியின் ஒன்பதாம் நாளான கடைசி நாளன்று எந்த முறையில் வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நவராத்திரியின் ஒன்பதாம் நாள் அம்பிகையை நாம் சாமுண்டியாகவும், பரமேஸ்வரியாகவும் வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம், காலை 9 மணியிலிருந்து 10:30 மணிக்குள் செய்யலாம், மதியம் 12:15 இல் இருந்து 1:15 வரை செய்யலாம், மாலை 5:30 மணியிலிருந்து 9:30 மணிக்குள் செய்யலாம். கொலு வைத்திருப்பவர்கள் காலையிலும், மாலையிலும் என்று இரண்டு வேளையும் வழிபாடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்றைய தினத்தில் அம்மனுக்கு சர்க்கரை பொங்கல், ஏதாவது ஒரு சுண்டல் வகை, அவல், பொரி, கடலை, புளிசாதம் போன்றவற்றை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினம் நாம் அம்பிகைக்கு வைக்க வேண்டிய பழமாக கருதப்படுவது நாவல் பழம். அன்றைய தினத்தில் நாம் அணிய வேண்டிய ஆடையின் நிறம் வெந்தய நிறம். அன்றைய தினம் நாம் சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைப்பதாக இருக்கும் பட்சத்தில் மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று என்று எண்ணிக்கையில் அழைத்து வெந்தய நிறத்திலான ஜாக்கெட் துணியும், நாவல் பழத்தையும் பிரசாதமாக தர வேண்டும்.
அன்றைய தினம் நாம் அம்பிகைக்கு மல்லிகைப்பூ, தாமரைப் பூக்களை வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். அர்ச்சனைக்கும் இதே மலர்களை நாம் உபயோகப்படுத்தலாம்.
“ஓம் நமோ சாமுண்டி தேவியே நமஹ”
என்னும் மந்திரத்தை 108 முறை கூறி மல்லிகை பூக்களால் அம்பிகைக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். இப்படி நாம் வழிபாடு செய்வதன் மூலம் நாம் நினைத்த காரியம் நடப்பதற்கு அம்பிகை நமக்கு அருள் புரிவார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:ஒருவருக்கு கடன் பிரச்சினை வர காரணம் என்ன?
நவராத்திரியின் இறுதி நாள் அன்று இந்த முறையில் அம்பிகையை வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்தேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்