- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

பிரச்சினைகளை தீர்க்கும் வேப்ப எண்ணெய் தீபம்

வீட்டில் தீபம் ஏற்றும் வழக்கம் என்பது அனைவருக்கும் இருக்கும். அப்படி ஏற்றக்கூடிய தீபத்தில் எந்த எண்ணையை ஊற்றி ஏற்றுகிறோமோ அதற்கேற்ற பலனும், எந்த திரியை போட்டு ஏற்றுகிறோமோ அதற்கு ஏற்ற பலனும் நமக்கு ஏற்படும். இதோடு மட்டுமல்லாமல் எந்த நேரத்தில் நாம் ஏற்றுகிறோம் என்பதற்கும் பலன் இருக்கும். எந்த கிழமையில் ஏற்றுகிறோம் என்பதற்கும் பலன் இருக்கும். எந்த தெய்வத்தை நினைத்து ஏற்றுகிறோம் என்பதற்கும் பலன் இருக்கும். இப்படி தீபம் ஏற்றுவதில் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது. இந்த பலன்களை உணர்ந்து நாம் தீபம் ஏற்றும் பொழுது நம்முடைய பிரச்சினைகள் தீரும். அப்படி நம்முடைய பிரச்சினைகள் தீர்வதற்கு வேப்ப எண்ணையை பயன்படுத்தி எந்த நாளில் எப்படி தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்ப்போம்.

நம்முடைய வாழ்க்கையில் பல பிரச்சனைகளை நாம் சந்தித்துக் கொண்டுதான் இருப்போம். அதிலும் மிகவும் குறிப்பாக இருக்கக்கூடிய சில பிரச்சனைகள் இருக்கிறது. அந்த பிரச்சனை நமக்கு ஏற்பட்டு விட்டால் அதனால் நம்முடைய வாழ்க்கையை தலைகீழாக மாறிவிடும். முதல் பிரச்சினை பண பிரச்சனை. இது நம்முடைய வாழ்க்கையில் ஏற்பட்டு விட்டால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வீட்டில் நிம்மதி இருக்காது. சண்டே சச்சரவுகள் அதிகரிக்கும். வெளியில் தலை காட்ட முடியாத சூழ்நிலை உண்டாகும்.

- Advertisement -

அடுத்ததாக தீராத நோய்வாய்ப்பட்டவர்கள் அந்த நோயை சரி செய்வதற்காக மருத்துவமனைக்கு சென்று மருத்துவம் பார்த்தாலும் அந்த நோயின் தாக்கம் குறையாமல் அவதிப்பட்டு கொண்டிருப்பார். மூன்றாவதாக நாம் முக்கியமான பிரச்சினையாக நினைப்பது எதிர்மறை ஆற்றல்கள். நமக்கோ நம் வீட்டில் இருப்பவர்களுக்கோ அல்லது நம் வீட்டிற்கோ கண் திருஷ்டியோ, ஏவல், பில்லி, சூனியம் போன்ற எதிர்மறை ஆற்றல்கள் ஏற்பட்டு விட்டால் அதனால் நம்முடைய வாழ்க்கை திசை மாறி போய்விடும்.

இப்படிப்பட்ட முக்கியமான பிரச்சனைகளில் இருந்து நம்மை காப்பாற்றுவதற்கு வேப்பெண்ணெய் நமக்கு உதவி செய்யும். இந்த தீபத்தை அகல் விளக்கில் தான் ஏற்ற வேண்டும். காமாட்சி அம்மன் விளக்கிலோ, குத்துவிளக்கிலோ ஊற்றி ஏற்றக்கூடாது. ஒரு சிறிய தாம்பாள தட்டை வைத்து அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து அந்த அகல் விளக்கில் தான் வேப்பெண்ணையை ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். அந்த அகல் விளக்கை வேறு எந்த தீபத்திற்காகவும் உபயோகப்படுத்தக் கூடாது.

- Advertisement -

வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமிக்கு உரிய தினம். வீட்டு பூஜை அறையில் சுக்கிர கோரையில் அதாவது காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இப்படி தொடர்ந்து 48 வாரங்கள் நாம் தீபம் ஏற்றி வர நம்முடைய கடன் பிரச்சினைகள் பண பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். தீராத நோய்க்கு காரணமாக திகழ்பவர் சனி பகவான். சனி பகவானுக்குரிய கிழமையான சனிக்கிழமை அன்று சனிஹோரையான காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். தொடர்ந்து 48 வாரங்கள் வழிப்பட தீராத நோயின் தாக்கம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

நம்மிடமும் நம்மை சுற்றிலும் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் சூரியனை கண்ட பனி போல விலகி ஓட வேண்டும் என்றால் ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய ஹோரையான காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 48 வாரங்கள் செய்துவர வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும். மூன்று நாட்களும் தொடர்ச்சியாக ஏற்றினாலும் தவறு கிடையாது. ஒரே அகல்விளக்கில் மூன்று நாட்களும் நாம் தீபம் ஏற்றலாம். மற்ற கிழமைகளில் ஏற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தொடர்ந்து 48 வாரங்கள் ஏற்றினால் தான் அதற்குரிய பலனை நம்மால் அடைய முடியும்.

இதையும் படிக்கலாமே: கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினை தீர வழிபாடு
மிகவும் எளிமையான இந்த தீப வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கி மகிழ்ச்சியாக வாழ முடியும்.

- Advertisement -