- Advertisement -
மந்திரம்

உடலில் இருக்கும் கொடிய நோய்களில் இருந்து மீண்டு வர, புதிய நோய்கள் வராமல் இருக்க தினமும் இந்த ஒரு மந்திரத்தை துதித்து வந்தால் போதும்.

இந்த உலகில் ஒரு மனிதனின் விலைமதிக்க முடியாத சொத்து என்றால் அது கடும் நோய்கள் ஏதும் இல்லாத அவனின் உடல் நலம் தான். அந்த வகையில் வாழ்நாள் முழுவதும் நம் உடலில் கடும் நோய்கள் ஏற்படாமல் காக்கும் ஆற்றல் வாய்ந்த ஒரு எளிய மந்திரம் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

மிகப் பழமையான இரண்டு மருத்துவ முறைகளான சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் மருத்துவத்திலும், ஒரு மனிதனின் உடலில் பல வகையான நோய்கள் ஏற்படுவதற்கு அவர்களின் உடலில் இருக்கின்ற “வாதம், பித்தம், கபம்” ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படுகின்ற சமச்சீரற்ற தன்மை தான் என மிக தெளிவாக கூறியுள்ளன. இந்த உண்மையை தற்காலத்திய நவீன மருத்துவ ஆய்வாளர்களும் ஆராய்ந்து ஏற்றுக் கொண்டுள்ளனர்.

- Advertisement -

மிகப் பழங்காலத்திலேயே நாட்டில் வாழ்ந்த ஞானிகளும், யோகிகளும் “மருத்துவம், கணிதம், வானியல் ரசவாதம்” போன்ற பல்வேறு துறைகளில் பல ஆய்வுகளை செய்து மனிதனின் வாழ்க்கையில் இவை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என தெளிவாக சுவடிகளில் எழுதி வைத்தனர். ஜோதிடத்தை நன்கு ஆய்ந்த நமது முன்னோர்கள் இந்த பிரபஞ்சத்தில் இருக்கின்ற நவக்கிரகங்கள் பூமியில் வாழ்கின்ற மனிதனின் உடலில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை கண்டுபிடித்தனர். அதிலும் குறிப்பாக நமது உடலில் இருக்கின்ற “வாதம், பித்தம், கபம்” ஆகிய மூன்று நாடிகளிலும் “ராகு, கேது” ஆகிய “நிழல்” கிரகங்கள் நீங்கலாக மற்ற 7 கிரகங்களின் தாக்கம் இருப்பதையும் கண்டறிந்து முறையாக வகைப்படுத்தி உள்ளனர்.

அந்த வகையில் சூரியன் நம் உடலில் பித்தத்திற்கு காரகனாகிறார். சந்திரன் வாதம் கபம் ஆகிய இரண்டுக்கும் காரகனாகிறார். செவ்வாய் பித்தத்திற்கு காரகனாகிறார். புதன் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றிற்கும் காரகனாகிறார். குரு கபத்திற்கு காரகனாகிறார். சுக்கிரன் வாதம், கபம் இரண்டிற்கும் காரகனாகிறார். சனி வாதத்திற்கு காரகன் ஆகிறார்

- Advertisement -

ஒரு ஜாதகத்தில் மேற்கண்ட கிரகங்கள் அமைகின்ற நிலைகளுக்கு ஏற்ப அந்த ஜாதகரின் உடலில் இருக்கின்ற வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படுகின்ற மாற்றங்களால் நோய்கள் ஏற்படுகின்றன.

மேற்சொன்ன கிரகங்களின் தாக்கத்தால் நமது நாடிகளில் மாற்றம் ஏற்பட்டு கடுமையான நோய்கள் நம்மை பீடிக்காமலிருக்க, நாம் அனைவரும் முறையான உணவு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். நல்ல உறக்கம், சீரான ஓய்வு, மன அமைதி போன்றவை நமக்கு கிடைப்பதை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதோடு தினமும் காலையில் சூரிய உதயம் முன்பாக எழுந்து, கிழக்கு திசையை பார்த்தவாறு

ஓம் ஹ்ரீம் ஆதித்யாயச, சோமாயச,
மங்களாய, புதாயச,
குரு, சுக்கிர, சனிப்யச்ச
ராகவே, கேதவே நமக

எனும் மந்திரத்தை 21 முறை துதித்து விட்டு மற்ற பணிகளை மேற்கொள்வதால் நமது உடலில் நவக்கிரகங்களின் தாக்கத்தால் வாதம், பித்தம், கபம் ஆகிய நாடிகளில் சமசீரற்ற தன்மை ஏற்படாமல் தடுத்து, நமது உடலில் கடுமையான நோய்கள் ஏற்படாமல் காக்கும். அதே சமயம் ஏற்கனவே நோயால் பாதிக்க பட்டவர்களுக்கு அவை சரியாவதற்கான வழிகள் பிறக்கும். உதாரமாக, அந்த நோயை சரியாக அறிந்து அதை சரிசெய்யக்கூடிய மருத்துவரை நாம் அணுகுவதற்குரிய வழி பிறக்கும்.

இதையும் படிக்கலாமே:  நீங்கள் செலவு செய்யும் 1 ரூபாய் கூட 1000 ரூபாயாக உங்களுக்கு திருப்பி கிடைக்க இதை மட்டும் மறக்காமல் செய்து விடுங்கள் போதும். பணம் பல மடங்கு பெருகும்.

பின்குறிப்பு: ராகு, கேது ஆகிய கிரகங்கள் மூன்று நாடிகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்றாலும், அந்த கிரகங்களின் அருள் வேண்டும் என்பதற்காக மந்திரத்தில் ராகு, கேது கிரகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

- Advertisement -