- Advertisement -

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். நோய்கள் இல்லாத மருந்து மாத்திரை என்று மருத்துவ செலவு இல்லாத குடும்பம் இருப்பதே மிகப்பெரிய அபூர்வமாக மாறிவிட்டது. கண்டிப்பாக முறையில் ஒவ்வொரு குடும்பத்திலும் யாராவது ஒருவராவது தொடர்ச்சியாக ஏதாவது ஒரு நோய்க்காக மருந்தை எடுத்துக் கொண்டுதான் வருவார்கள். அப்படி ஒரு நோய்க்காக ஒரு மருந்து எடுத்துக் கொண்டால் கூட பரவாயில்லை.

பல நோய்களுக்கு பல மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கும் நபர்களும் இருந்து கொண்டு தான் இருப்பார்கள். அவர்களுடைய வாழ்க்கையே மருந்தில்தான் ஓடிக்கொண்டிருக்கும். சாப்பாடு ஒரு கைப்பிடி என்றால் மருந்து மாத்திரைகள் இரண்டு கைப்பிடியாக இருக்கும். அந்த அளவிற்கு நோய்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் எந்த தானத்தை எப்படி செய்ய வேண்டும் யாருக்கு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

நோய்கள் தீர செய்யும் தானம்

பொதுவாக ஒருவருக்கு நோய்கள் ஏற்பட்டு இருக்கிறது என்றால் அவர்களுக்கு கர்ம வினை இருக்கிறது என்று அர்த்தம். நவகிரகங்களின் மாற்றத்தாலும் நவகிரகங்களின் தாக்கத்தாலும் தான் ஒருவருடைய ஜாதகத்தில் நோய்கள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். இந்த நவகிரகங்கள் அமைவது நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையில் தான். ஆக மொத்தம் நமக்கு நோய்கள் வருகிறது என்றால் கர்ம வினைகளால் நவகிரகங்கள் தரக்கூடிய நோய்கள் ஆக தான் அந்த நோய்கள் திகழும்.

அப்படிப்பட்ட நோய்களை நாம் சரி செய்வதற்கு உரிய மருத்துவரை அணுகி பரிசீலித்து மருந்து மாத்திரைகளை உண்ண வேண்டும். இப்படி மருந்து மாத்திரைகளை உண்பதோடு நாம் செய்யக்கூடிய சில தான தர்மங்களும் நம்முடைய கர்ம வினைகளை குறைக்கக்கூடிய ஒன்றாக திகழ்கிறது. அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இரண்டிற்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள் அவர்களை விட அதிகம் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்களுக்கு இந்த தானத்தை செய்யலாம். இந்த தானத்தை நாம் ஒரு குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் செய்ய வேண்டும். என்ன தானம் செய்ய வேண்டும்? அந்த தானம் தான் பழங்கள். நம்மால் எந்த பழங்களை வாங்கி தர முடியுமோ அந்த பழங்களை வாங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த பழங்களை என்றைக்கு யாருக்கு தரவேண்டும்? தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பழங்களை வாங்கி தர வேண்டும். தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்றே இல்லங்கள் இருக்கின்றன. மறுவாழ்வு இல்லங்கள் அல்லது நல இல்லங்கள் என்று இருக்கும். அப்படிப்பட்ட இல்லங்களை தேடி கண்டுபிடித்து அங்கு இருக்கக்கூடிய தொழுநோயாளர்களுக்கு உங்களால் இயன்ற பழங்கள் அது எந்த பழமாக இருந்தாலும் சரி.

- Advertisement -

ஒரு பழம் அல்லாமல் பலவிதமான பழங்களை வாங்கிக் கொண்டு போய் அவர்களுக்கு உங்கள் கையாளே தர வேண்டும். எப்பொழுது தரவேண்டும்? மாதத்தில் வரக்கூடிய 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் தர வேண்டும். இந்த தேதிகளை குறித்து வைத்துக் கொண்டு தொடர்ச்சியாக மூன்று முதல் ஐந்து மாதங்கள் நீங்கள் அந்த தொழுநோயாளிகளுக்கு பழங்களை தானமாக தருவதன் மூலம் உங்களுடைய கர்ம வினைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே:வற்றாத செல்வம் பெற வசம்பு பரிகாரம்

எப்பேர்பட்ட கிரக தோஷத்தால் உங்களுக்கு நோய்கள் ஏற்பட்டாலும் அந்த தோஷங்கள் என்பது நிவர்த்தி ஆவதை உங்களால் கண்கூடாக பார்க்க முடியும். தான தர்மங்களை செய்வதன் மூலம் மட்டுமே நம்முடைய கர்ம வினைகள் மாறும். அப்படி கர்ம வினைகள் மாறினால் தான் நம்முடைய கஷ்டங்களும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்

- Advertisement -