- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

நீண்ட நாள் நோய்கள் சரியாக செல்ல வேண்டிய கோவில்

நீண்ட நாட்களாக நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு அதற்காக பல மருத்துவமனைகளில் ஏறி இறங்கி பல மருந்துகளை சாப்பிட்டு வந்தும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று என்ற நிலையில் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய வாழ்நாளில் சம்பாதித்த பணத்தைவிட அதிகளவு பணத்தை மருத்துவ செலவிற்காகவே செலவு செய்து இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் எந்த சிவபெருமானின் ஆலயத்திற்கு சென்று எப்படி வழிபட்டால் அவர்கள் நோயின் தாக்கம் குறைந்து ஆரோக்கியமாக வாழ்வார்கள் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

அழிக்கும் தொழிலை செய்யக்கூடியவராக திகழ்ந்தவர் தான் சிவபெருமான். அவரை நாம் வணங்குவது மூலம் நம்முடைய உடலில் இருக்கக்கூடிய நோய்களை அழிப்பார் என்றும் நாம் கூறலாம். அப்படி சிறப்பு மிகுந்த சிவபெருமானை திருப்பராய்த்துறை என்னும் ஊருக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய ஆலயத்தில் வழிபட வேண்டும்.

- Advertisement -

இந்த திருப்பராய்த்துறை என்பது திருச்சியில் இருந்து கரூர் செல்லும் வழியில் இருக்கிறது. பெட்டவாய்த்தலை என்னும் ஊரில் இறங்கி இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும். இந்த சிவன் கோவில் தேவார பாடல் பெற்ற ஸ்தலமாக திகழ்கிறது. இந்த கோவிலுக்கு என்று பல சிறப்புகள் இருக்கின்றன.

நடராஜர் அவதாரம் எடுப்பதற்கு மூல காரணமான நிகழ்ச்சி நடைபெற்ற இடமாக இந்த திருப்பராய்த்துறை விளங்குகிறது. நடராஜராக சிவபெருமான் அவதாரம் செய்வதற்கு முன்பாக பிட்சாடனராகவும், விஷ்ணு மோகினி ஆகவும் அவதாரம் எடுத்து முனிவர்கள் மற்றும் அவர்களின் மனைவி களின் கர்வத்தை அழித்ததாகவும் அதற்குப் பிறகுதான் நடராஜர் அவதாரம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக பராய்துறைநாதர் என்று பெயரில் இருக்கிறார். இங்கு வீற்றிருக்கும் அம்பிகைக்கு பசும்பொன் மயிலாம்பிகை என்று பெயர். அப்படிப்பட்ட ஆலயத்தில் இருக்கக்கூடிய தல விருச்சமாக கருதப்படுவது தான் பராய்மரம். பராய் மரத்தை தல விருச்சமாகக் கொண்ட ஒரே ஆலயம் இந்த ஆலயம் தான். மேலும் அதனால் தான் இந்த ஊருக்கு திருப்பராய்த்துறை என்ற பெயரும் வந்தது என்று கூறப்படுகிறது.

திங்கட்கிழமை தோறும் இந்த கோவிலுக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய பராய் மரத்திற்கு 11 குடம் தண்ணீரை ஊற்ற வேண்டும். பிறகு 11 நெய் தீபங்களை ஏற்றி வைக்க வேண்டும். பிறகு அந்த தல விருச்சத்தை 11 முறை சுத்தி வந்து நமஸ்காரம் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் செய்து வந்தால் நம்முடைய உடலில் இருக்கக்கூடிய நோய்களின் தாக்கமானது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். நோய்கள் எதுவும் இல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே செவ்வாய்க்கிழமை குளிகை நேர பரிகாரம்

மிகவும் சிறப்பு மிகுந்த இந்த ஆலய வழிபாட்டில் நம்பிக்கை இருப்பவர்கள் முழு மனதுடன் இந்த வழிபாட்டை மேற்கொண்டு நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கையை பெறலாம்.

- Advertisement -