- Advertisement -

வறுமையும் நோயும் விலக ஏற்ற வேண்டிய தீபம்

- Advertisement -

உடனடியாக ஒரு மனிதனுக்கு மன அழுத்தம் கொடுக்கக்கூடிய விஷயங்கள். முதலில் நோய்நொடி பிரச்சனை, இரண்டாவது வீட்டில் இருக்கும் வறுமை. இது இரண்டுமே ஒரு மனிதனுக்கு தீராத துன்பத்தை துயரத்தை உடனடியாக கொடுக்கும். இந்த இரண்டு கஷ்டத்திலிருந்து நம்மை நாமே விடுவித்துக் கொள்ள வேண்டும் என்றால், வீட்டில் இருக்கும் தரித்திரத்தை விரட்டி அடித்து விட்டு ஆரோக்கியத்தை பெற, மன நிம்மதியை பெற வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டிய எளிமையான வழிபாடு குலதெய்வ வழிபாடு.

குலதெய்வத்தை வேண்டி இந்த ஒரு தீப வழிபாட்டை செய்யும்போது, நமக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும். அந்த வழிபாடு என்ன. ஆன்மீகம் சார்ந்த பதிவு தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா. ஞாயிற்றுக்கிழமை அன்று சுத்தபத்தமாக குளித்து விட வேண்டும். இந்த பரிகாரத்தை செய்ப மன சுத்தம், உடல் சுத்தம், வீடு சுத்தம், எல்லாமும் தேவை. உடல் சுத்தம் என்றால் குளித்து முடித்துவிட்டு இருக்க வேண்டும்.

- Advertisement -

பெண்கள் மாதவிடாய் நாட்களிலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். தவறு ஒன்றும் கிடையாது. மாதவிடாயால் ஏற்படக்கூடிய உடல் உபாதைகளை தணிக்க கூடிய சக்தியும் இந்த விளக்கத்திற்கு உண்டு. மாதவிடாய் நேரத்தில் வரும் வலி வேதனை ஒரு பெண்ணுக்குப் பெரிய மன அழுத்தத்தை கொடுக்கும். அதை தணிக்க கூடிய வகையில் இந்த வழிபாடு அமைந்திருப்பதால், இதை நிச்சயம் அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்.

கடுகு எண்ணெய் பரிகாரம்

ஞாயிற்றுக்கிழமையில் உங்களுடைய வீட்டின் வரவேற்பறையில் இந்த விளக்கு ஏற்ற வேண்டும். ஒரு சின்ன தட்டுக்கு மேலே மண் அகல் விளக்கு வைத்து, அதில் கடுகு எண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். அந்த தீபத்தை ஐந்து நிமிடங்கள் பார்த்து குலதெய்வத்தை மனதார நினைத்து, உங்களுக்கு அந்த நேரத்தில் மன அழுத்தத்தை கொடுக்கக் கூடிய பிரச்சனை என்ன, அது சரியாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

- Advertisement -

உதாரணத்திற்கு உடம்பு சரியில்லை என்றால் உடல்நிலை சரியாக வேண்டும் என்று வேண்டுங்கள். அன்றைய தினம் நிதிநிலைமை ரொம்பவும் மோசமாக இருக்கிறது அதை மாற்ற வேண்டும் என்றால் அந்த சமயத்தில் இருக்கக்கூடிய, அந்த பிரச்சனையிலிருந்து உங்களை உடனடியாக காப்பாற்ற இந்த விளக்கிற்கு முன்பு வேண்டுதல் வைத்தால், பிரச்சனைக்கான தீர்வு உடனடியாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு அறையில் நீண்ட நாட்களாக யாராவது உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையிலேயே இருக்கிறார்கள் என்றால், வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை அந்த அறையில் இந்த கடுகு எண்ணெய் விளக்கை 1/2 மணி நேரம் எரிய விடுங்கள் போதும். அந்த நோயாளிக்கு இருக்கக்கூடிய உடல் உபாதைகள் பிரச்சனைகள் எல்லாம் படிப்படியாக குறைவதை உணர முடியும்.

- Advertisement -

நீண்ட நாட்களாக நோயால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு பலன் கிடைக்க ஐந்து வாரம் ஏழு வாரங்கள், எடுக்கும். மருத்துவத்தோடு சேர்ந்த இந்த ஆன்மீகம் வழிபாடு சீக்கிரம் பலனை கொடுக்கும். தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை மட்டும் இந்த விளக்கை வீட்டில் ஏற்றலாம். மற்று கிழமைகளில் ஏற்ற வேண்டாம்.

உங்களுடைய பிரச்சனைகள் விலகிச் செல்ல, உங்களுடைய நோய் நொடி அனைத்தும் உங்களை விட்டு விலகி செல்ல, எளிமையான இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக உங்களுடைய பிரச்சனைக்கு ஏற்ப தீர்வானது நிச்சயம் சீக்கிரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை குலதெய்வத்தை நினைத்து இந்த வழிபாட்டின் மீது நம்பிக்கை இருந்தால் மட்டும் பின்பற்றி பலன் பெறலாம். இத்தனை வாரம் ஞாயிற்றுக்கிழமை தான் இந்த விளக்கை ஏற்ற வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

இதையும் படிக்கலாமே: வேண்டியதைப் பெற கிருத்திகை முருகர் வழிபாடு

மனிதர்களுக்கு விட்டுவிட்டு பிரச்சனை வரும். எந்தெந்த வாரம் நீங்கள் பிரச்சினை எதிர்கொள்கிறீர்களோ, அந்த ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விளக்கை ஏற்றலாம், அல்லது அடுத்த வாரம் பிரச்சனை வரப்போகிறது என்றால் இந்த ஞாயிற்றுக்கிழமை, அந்த பிரச்சினையை தடுத்து நிறுத்த இந்த ஆன்மீகம் வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ளலாம்.

- Advertisement -