- Advertisement -
வீட்டு குறிப்புகள்

இப்படி வீணா போன நான் ஸ்டிக் பேனை கூட பல வருஷத்துக்கு இனி பயன்படுத்தலாம். இந்த டிப்ஸ் தெரிஞ்சுகிட்டா.

- Advertisement -

நம்முடைய வீட்டில் நான் ஸ்டிக் பேன், நான் ஸ்டிக் கடாய், இவைகளை வாங்கி பயன்படுத்தும் பழக்கம் இப்போது அதிகமாக இருக்கிறது. பொதுவாகவே நான் ஸ்டிக் பாத்திரங்களுக்கு உள்ளே இருக்கும் அந்த கோட்டிங் நீங்கி விட்டால், அந்த பாத்திரங்களை பயன்படுத்தக் கூடாது. அதாவது நான் ஸ்டிக் கோட்டிஙில் ஒரு சின்ன கீறல் விழுந்து விட்டால் கூட அந்த பாத்திரம் பயன்படுத்துவதற்கான தகுதியை இழந்து விடும். உடனடியாக அதை மாற்றி விட்டு புதிய பாத்திரம் தான் வாங்க வேண்டும்.

உங்க வீட்ல இப்படி கீறல் விழுந்த நான்ஸ்டிக் பாத்திரம் உள்ளதா. உங்களுக்கு தேவைப்பட்டால் அந்த நான்ஸ்டிக் பாத்திரத்தை இப்படி மாற்றி பயன்படுத்தி பாருங்கள். உங்களுக்கு இந்த குறிப்பு தேவை என்றால் மட்டும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். கஷ்டப்பட்டு எல்லோரும் இந்த குறிப்பை பின்பற்ற வேண்டும் என்று அவசியம் கிடையாது. ஏனென்றால் சில பேர் நினைக்கலாம். இவ்வளவு கஷ்டப்படுவதற்கு அந்த பேனை தூக்கிப்போட்டு விட்டு, புதுசு வாங்கிக் கொள்ளலாம் என்று. சரி வாங்க குறிப்பை பார்த்து விடுவோம்.

- Advertisement -

உங்க வீட்ல பழைய நான் ஸ்டிக் பேன், தோசை கல் எது இருந்தாலும் அதை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் பேக்கிங் சோடா 2 ஸ்பூன், ஹார்பிக் 2 ஸ்பூன், வினிகர் 2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக கலந்தால் அப்படியே நுரை பொங்கி ஒரு லிக்விட் நமக்கு கிடைத்திருக்கும். இந்த லிக்விடை நான்ஸ்டிக் பேன் மேலே முழுவதும் தடவி விடுங்கள். ஒரு நாரை வைத்து கூட தடவிக் கொள்ளலாம். 1 மணி நேரம் அந்த பேன் அந்த லிக்விடில் அப்படியே ஊறட்டும். (டாய்லெட்டுக்கு பயன்படுத்தாத புது ஹேர் பிக்கை இதற்கு பயன்படுத்துங்கள்.)

அதன் பின்பு ஒரு ஸ்டீல் நாரை கொண்டு இந்த நான்ஸ்டிக் பேனை நன்றாக தேய்த்துக் கொடுத்தால் நான் ஸ்டிக் அனைத்தும் முழுமையாக நீங்கி வர தொடங்கும். தேவைப்பட்டால் உப்பு காகிதத்தை பயன்படுத்தி கூட நான் ஸ்டிக்கை தேய்த்து எடுத்து விடலாம். அதாவது அந்த கோட்டிங் அனைத்தும் நீங்க தொடங்கும். எல்லா கருப்பு நிற நான் ஸ்டிக்கும் முழுமையாக நீங்கிய பின்பு சுத்தமான தண்ணீரில் ஒரு முறை உங்களுடைய பேனை கழுவி விடுங்கள். (ரொம்ப கஷ்டப்பட்டு இதை தேய்க்க வேணாம். அதுக்காக பாத்திரம் தேய்ப்பது போல மேலோடு தேய்த்தாலும் நான் ஸ்டிக் நீங்காது. ஓரளவுக்கு அழுத்தம் கொடுத்து தேய்த்தால் நான் ஸ்டிக் முழுவதும் கருப்பு நிறமாக வெளியே நீங்கிவிடும்.)

- Advertisement -

இப்போது இந்த பேனை நாம் பயன்படுத்த பழக வேண்டும். கொஞ்சமாக நல்ல தண்ணீரை சுத்தம் செய்த பேனில் ஊற்றி ஒரு எலுமிச்சம் பழத்தை வெட்டி அதனுடைய சாரை அந்த தண்ணீரில் பிழிந்து, அந்த எலுமிச்சை தோலையும் அந்த தண்ணீரில் போட்டு அடுப்பை பற்ற வைத்து இந்த தண்ணீரை பேனில் நன்றாக கொதிக்க வையுங்கள். அதில் ஏதாவது கிருமி இருந்தால் கூட நீங்கி விடும். கொதிக்க வைத்த தண்ணீரை கீழே ஊற்றிவிட்டு எலுமிச்சை தோலை வைத்தே பேனை சுத்தமாக தேய்த்து கழுவி விடுங்கள். இறுதியாக ஒரு முறை சோப்பு போட்டு சுத்தமாக கழுவி கொள்ளுங்கள். பிறகு பேனை அடுப்பில் வைத்து சூடு செய்து கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி புளி அல்லது வெங்காயம் போட்டு நன்றாக தேய்த்து பழக வேண்டும்.

அதன் பின்பு நீங்கள் ஊற்றிய எண்ணெய் எல்லாம் நன்றாக ஒரு துணியில் துடைத்து எடுத்து விட்டு பேனை நீங்கள் எதற்கு வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். சிறிய கல் தோசை ஊற்ற, முட்டை ஆம்லெட் போட, அல்லது வேறு ஏதாவது கருணைக்கிழங்கு வறுவல் சேனைக்கிழங்கு வறுவல், மீன் பொறிக்க இப்படி பல ரெசிபிகள் செய்ய அல்லது கட்லெட் செய்யக்கூட இந்த பேனை நீங்கள் மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. குப்பையில் தூக்கி போடும் பேனை கூட பல வருடங்கள் வைத்து நாமே பயன்படுத்தும் அளவிற்கு இந்த குறிப்பு பயனுள்ளதாக இருக்கும்.

- Advertisement -