- Advertisement -

மகாலட்சுமியை ஈர்க்கும் பண வசிய பரிகாரம்

- Advertisement -

மனிதர்கள் அனைவருக்கும் இருக்கக்கூடிய பிரச்சனை இது. பண பிரச்சனை. பணம் வருமானமாக வீட்டிற்குள் வரவில்லை, அப்படியே பணம் வீட்டுக்கு வந்தாலும், வந்த பணம் நிலையாக தங்க வில்லை, இதுதான் பிரச்சனை. உங்களுக்கு வரக்கூடிய வருமானம் 100 ரூபாயாக இருந்தாலும் சரி, அந்த நூறு ரூபாயை உங்களுடைய வீட்டில் 24 மணி நேரம் இப்படி வைத்து விட்டு, பிறகு எடுத்து செலவு செய்து பாருங்கள்.

அந்த 100 ரூபாய் மீண்டும் 200 ரூபாய் வருமானமாக உங்களைத் தேடி வரும். பணத்தின் மீது இருக்கும் கண் திருஷ்டியை நீக்கி, உங்களுக்கு வருமானத்தை அதிகரித்து தரக்கூடிய எளிமையான ஒரு சூட்சுமம் வித்தையை தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவு மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

ஒரு சின்ன கண்ணாடி பவுல் எடுத்துக்கோங்க. அதில் 2 ஸ்பூன் வெண்கடுகு போடுங்க. ஒரு துண்டு பச்சை கற்பூரம் போடுங்க. இந்த 100 ரூபாயை அந்த கிண்ணத்தில் வைத்து, உங்களுடைய வீட்டில் பீரோவுக்கு உள்ளேயும் வைக்கலாம். அல்லது அலமாரி போன்ற இடங்களிலும் வைத்து விடலாம். 24 மணி நேரம் நீங்கள் வைத்த பணம் அந்த பவுலில் அப்படியே வீட்டில் இருக்கட்டும்.

பிறகு உங்களுடைய தேவைக்கு ஏற்ப எடுத்து செலவு செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுடைய வீட்டில் வருமானம் பல மடங்காக பெருகும். வீண் செலவு குறையும். மருத்துவ செலவு குறையும். இது நிதர்சனமான உண்மை. பெரிய அளவில் இந்த பரிகாரத்திற்காக நீங்கள் செலவு செய்யப்போவது கிடையாது. 50 ரூபாய் செலவு செய்தால் பரிகாரத்தை முடித்து விடலாம்.

- Advertisement -

கிண்ணத்தில் இருக்கும் பச்சை கற்பூரம் கரைந்தவுடன் புதுசாக வைத்தால் போதும், வெண்கடுகை மாதத்திற்கு ஒரு நாள் மாற்றினாலும் போதும் என்பது குறிப்பிடத்தக்கது. 100 ரூபாய் என்பது உதாரணத்திற்காக சொல்லப்பட்டுள்ள பணம். குடும்பத் தலைவியின் கையில், பத்தாயிரம் கணவர் கொடுக்கிறார். குடும்ப தலைவியை செலவை பார்த்துக் கொள் என்று, அந்த பத்தாயிரத்தை கொண்டு வந்து இந்த கிண்ணத்தில் வையுங்கள். 24 மணி நேரம் கழித்து பிறகு இந்த பணத்தை எடுத்து செலவு செய்ய வேண்டும். வீட்டு தேவைகளுக்காக செலவு செய்து கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் இந்த சின்ன பரிகாரம் உங்களுடைய வாழ்க்கையில் பெரிய அளவில் சேமிப்பை கொண்டு வந்து சேர்க்கும் என்றால், நிச்சயம் நம்ப மாட்டீங்க. முயற்சி செய்து பாருங்கள். பரிகாரம் பலன் அளித்தால், இந்த பரிகாரத்தை பின்பற்றிய பிறகு, வீட்டில் வீண் செலவு குறைகிறது, கையில் சேமிப்பு 10 ரூபாய் தங்குகிறது, என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றினால், இந்த பரிகாரத்தை நீங்கள் எப்போதும் செய்து கொள்ளலாம்.

- Advertisement -

எப்போதெல்லாம் உங்கள் கைக்கு பணம் வருகிறதோ அப்போதெல்லாம் அந்த கிண்ணத்தில் அந்த பணத்தை போட்டு வைக்க வேண்டும் அவ்வளவுதான். எனக்கு பரிகாரம் பலனளிக்கவில்லை இந்த பரிகாரத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்றால் பரிகாரத்தை நீங்கள் பின்பற்ற வேண்டாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது, எந்த ஒரு குற்றமும் ஏற்படப்போவது கிடையாது.

அடுத்தபடியாக ஒரு பண வசிய திலகத்தை தயார் செய்து தினமும் நெற்றியில் வைத்து பாருங்கள். பண ஈர்ப்பு உங்களுக்கு அதிகரிக்கும். கிராம்பு, பட்டை, ஏலக்காய், அன்னாசி பூ, பச்சை கற்பூரம், இந்த பொருட்களை எல்லாம் கற்பூரத்தில் போட்டு எரித்து சாம்பல் ஆக்கி விடுங்கள். பச்சை கற்பூரத்திலேயே எரித்து சாம்பலாக்கி இந்த சாம்பலில் கொஞ்சமாக நெய்விட்டு கலந்து இந்த கருப்பு மையை தினமும் உங்களுடைய இரண்டு புருவத்திற்கு மத்தியில் திலகமாக இட்டுக் கொண்டால், பணத்தை நீங்கள் அதிகமாக வசியம் செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: சிவபெருமானின் சக்தி வாய்ந்த நான்கெழுத்து மந்திரம்

இதுபோக தினமும் ‘பணம் எனக்கு தினம் தினம் வசியமாகிறது. பணம் என்னை நோக்கி வந்து கொண்டே இருக்கிறது. இந்த பணத்தை எனக்கு கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி’ என்று சொல்லிக் கொண்டே இருங்கள். நிச்சயம் நீங்களும் ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள் பெரிய பணக்காரராக மாறிவிடுவீர்கள். நாம் என்ன நினைக்கிறோமோ, அதுதான் நடக்கும். நீங்களும் மேலும் சொன்ன விஷயங்களை பின்பற்றுங்கள். நானும் நிச்சயம் பணக்காரன் ஆவேன் என்று நம்புங்கள். நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -