
விளக்கு வழிபாட்டிற்கு உகந்த மாதம் கார்த்திகை மாதம். பணக்கஷ்டம் தீருவதற்கு வேண்டுதல் வைக்க வேண்டிய மாதம் கார்த்திகை மாதம். ஈசனுக்கு உகந்த மாதம் கார்த்திகை மாதம். முருகனுக்கு, முருக பக்தர்கள் மாலை அணிந்து கொள்ளக்கூடிய மாதம் கார்த்திகை மாதம். கார்த்திகை தீபம் அண்ணாமலையாருக்கு ஜோதி ஏற்றக்கூடிய மாதம், கார்த்திகை மாதம் ஐயப்பனுக்கு மாலை போடக்கூடிய மாதம் கார்த்திகை மாதம்.
இப்படி இந்த கார்த்திகை மாதத்தின் சிறப்புகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். நல்ல மழையை கொடுக்கக் கூடிய காலம் கார்த்திகை மாதம். இந்த கார்த்திகை மாதத்தில் பெய்யும் மழை போல, நம் வீட்டில் பண மழை பொழிய வேண்டும் என்றால், நிலை வாசலில் என்ன தீபம் ஏற்ற வேண்டும், அந்த தீபத்தில் என்னென்ன பொருட்களை சேர்க்க வேண்டும் ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
சில பேர் வீடுகளில் எல்லாம் மார்கழி மாதத்தில் தான் நிலை வாசலில் தீபம் ஏற்றுவார்கள். ஆனால் கார்த்திகை முதல் நாளிலிருந்து மாலை நேரத்தில் நிலை வாசலில் 2 மண் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வைப்பது, குடும்பத்திற்கு அத்தனை நல்லது. கார்த்திகை மாதம், முடிந்தால் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஏற்றலாம். ஆனால் கார்த்திகை மாதத்தில் மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றுவது ரொம்ப ரொம்ப நல்லது.
இரண்டு மண் அகல் விளக்குகள் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து, நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். சாதாரண பஞ்சி திரி போட்டுக் கொள்ள வேண்டும். நிலைவாசலில் சின்ன சின்னதாக இரண்டு தட்டு வைத்து, அந்த தட்டுக்கு மேலே இந்த மண் அகல் விளக்கை வைத்து, நிலை வாசலில் இருபுறமும் இந்த தீபங்களை அழகாக ஏற்றி வையுங்கள். முடிந்தால் அந்த விளக்குக்கு பக்கத்தில் ஒவ்வொரு பூ வையுங்க இன்னும் சிறப்பு.
இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, எங்கள் வீட்டில் வறுமை என்னும் இருள் நீங்க வேண்டும் என்று, பிரார்த்தனை வைக்க வேண்டும். வீட்டில் செல்வமழை பொழிய வேண்டும் என்று கிரகலட்சுமியிடம், குலதெய்வத்திடம், மகாலட்சுமியிடம் வேண்டுதல் வைத்தால், உங்கள் வீட்டிற்குள் அன்றாடம் பணம் வந்த வண்ணம் இருக்கும். இந்த விளக்கில் நாம் போட வேண்டிய அற்புதமான மூன்று பொருட்கள் இருக்கிறது. மூன்றுமே மகாலட்சுமியை வசியம் செய்யக்கூடியது வாசம் நிறைந்தது.
ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரம் இது மூன்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து பொடி செய்து ஒரு டப்பாவில் போட்டு காற்று வெளியில் போகாமல் மூடி வைத்து விடுங்கள். நிலை வாசலில் விளக்கு ஏற்றிருக்கிறீர்கள் அல்லவா. அந்த எண்ணெயில் இரண்டு அல்லது மூன்று சிட்டிகை இந்த பொடியை போட்டு தீபம் ஏற்றி பாருங்கள். இந்த வாசம் நல்ல தேவதைகளையும் மகாலட்சுமியையும் வசியம் செய்து, உங்கள் நிலை வாசலில் நிரந்தரமாக அமர வைக்கும்.
இதையும் படிக்கலாமே: கார்த்திகை ஒன்றாம் தேதி ஏற்ற வேண்டிய தீபம்
உங்கள் வீட்டிற்குள் வருமையை நெருங்கவே விடாது. அத்தனை அற்புதம் வாய்ந்த விளக்கு இது. இந்த இரண்டு விளக்கு, கார்த்திகை மாதம் முழுவதும் மாலை நேரத்தில் எந்த வீட்டு நிலை வாசலில் ஏற்றப்படுகிறதோ, அந்த வீட்டில் நிச்சயம் பணக்கஷ்டம் நீங்கும் என்பது தான் நம்பிக்கை. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் ஏற்றிப் பாருங்கள். கார்த்திகை மாதம் முடிவதற்குள் உங்கள் குடும்பத்தில் நல்லது நடக்கும். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த தீப வழிபாடு இது. தேவைப்படுபவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம்.