- Advertisement -
- Advertisement -

அருள் இல்லாதவர்களுக்கு அவ்வளவும் இல்லை. பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலகம் இல்லை. இன்றைய சூழ்நிலையில் பொருளாதார ரீதியாக மேம்பாடு அலையாதவர்களுக்கு, அதாவது பணம் காசு இல்லாதவர்களுக்கு, மதிப்பும் மரியாதையும் ஒரு துளி கூட கிடைப்பது கிடையாது. நிரந்தர பொருளாதார முன்னேற்றத்திற்கு நாம் எவ்வளவுதான் ஓடி ஓடி உழைத்தாலும், இந்த பணம் மட்டும் கையில் நிரந்தரமாக தங்குவதில்லை.

வருமானத்தை உயர்த்த பொருளாதார நிலையை மேம்படுத்த என்னதான் செய்வது. அயராது உழைக்க வேண்டும். முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உங்களுக்கு தெரிந்த வேலைகளை மனதிருப்தியோடு செய்ய வேண்டும். விடாமுயற்சி மட்டும் தான் வருமானத்தையும், பொருளாதாரத்தையும் உயத்தி கொடுக்கும். இது முதல் விஷயம்.

- Advertisement -

இவ்வளவு எல்லாம் செய்தும், பணம் தங்கவில்லை என்றால் ஏதோ ஒரு துரதிஷ்டம். ஏதோ ஒரு தடை நம் நிலை வாசலில் நிற்கிறது என்று தானே அர்த்தம். ஏதோ ஒரு கெட்ட நேரம் கிரக சூழ்நிலை நம்மை முன்னேற விடாமல் தடுக்கிறது என்றுதான் அர்த்தம். அந்த தடைகளை அகற்ற, ஏதாவது ஆன்மீகம் சொல்லும் தாந்திரீக பரிகாரத்தை பின்பற்றலாம்.

பணம் தரும் மந்திர பரிகாரம்

அப்படி ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இன்றைய பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பரிகாரத்தை செய்கிறேன் என்று யாரிடமும் வெளியில் சொல்லாதீர்கள். அடுத்தவர்கள் பார்க்கும்படி இந்த பரிகாரத்தையும் செய்யாதீர்கள். இரவு எல்லோரும் தூங்கிய பிறகு ஆள் நடமாட்டம் அடங்கிய பிறகு 10 மணி போல நிலை வாசலில் கதவை திறந்து, நிலை வாசலுக்கு வெளிப்பக்கத்தில் நீங்கள் செல்லுங்கள்.

- Advertisement -

வீட்டிற்கு உள் பக்கம் பார்த்தவாறு நின்று கொள்ளுங்கள். உள்ளங்கைகளில் கொஞ்சமாக இந்த பொடியை எடுத்துக் கொள்ளுங்கள். எந்த பொடி. பட்டை, இலவங்கம், ஏலக்காய், காய்ந்த மல்லிகை பூ, கொஞ்சமாக பச்சை கற்பூரம், சேர்த்து எல்லாவற்றையும் கொஞ்சம் பொடி போல அரைத்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளவும்.

இந்த பொருட்களை எல்லாம் மிக்ஸி ஜாரில் போட்டாலே அரை பட்டு கிடைத்துவிடும். இந்த பொடியை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, வீட்டிற்குள் ஊதி விடுங்கள். அப்படியே அது பறந்து வீட்டிற்குள் வந்துவிடும். இந்த பொடியை ஊதி விட்டுவிட்டு “ஏகம் அநேகம் என்னுள்ளே இருக்கட்டும்” என்ற மந்திர வார்த்தையை மூன்று முறை சொல்லிவிட்டு வீட்டிற்குள் வந்து நீங்கள் எப்போதும் போல தூங்கலாம் அவ்வளவுதான்.

- Advertisement -

தொடர்ந்து இந்த பரிகாரத்தை 48 நாள் செய்தால், உங்கள் வீட்டில் தடையில்லா பண வரவு, தடையில்லா பொருளாதார முன்னேற்றம் இருக்கும். 48 நாட்களுக்குப் பிறகு இந்த பரிகாரம் செய்வதை நீங்கள் நிறுத்திக் கொள்ளலாம். 48 நாள் இந்த பரிகாரத்தை செய்து முடிக்கும் போது உங்களுடைய பொருளாதாரத்தில் ஓரளவுக்கு வளரக்கூடிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வந்திருக்கும்.

பணத்தடைகள் விலகி இருக்கும். கடுமையான கடன் சுமை குறைந்திருப்பதையும் கண்கூடாக பார்க்கலாம். அதாவது கண்ணுக்கு தெரியாமல் உங்களுக்கு நிறைய நல்லது நடக்க துவங்கும். பிறகு ஒரு மூன்று மாதம் கழித்தோ, ஆறு மாதம் கழித்தோ, 48 நாள் இந்த பரிகாரத்தை மீண்டும் செய்வதன் மூலம் எந்த தவறும் கிடையாது.

இதையும் படிக்கலாமே: வருமானம் பெருக ஏகாதசி பரிகாரம்

ஆண் பெண் யார் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்ய மாதவிடாய் நாட்கள் ஒரு தடை கிடையாது. மாதவிடாய் நாட்களிலும் பெண்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். தொடர்ந்து 48 நாள் இதை செய்யும் போது நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -
Published by