- Advertisement -

நம்முடைய வழிபாட்டு முறைகளில் திதிகளுக்கு எப்பொழுதுமே தனித்துவம் உண்டு ஆகையால் தான் எல்லா வழிப்பாடும் விசேஷமான நாட்களும் திரியினை அடிப்படையாகக் கொண்டே நாம் கொண்டாடுகிறோம். அந்த வகையில் அமாவாசை, பௌர்ணமி திதி முக்கியமான ஒரு வழிபாட்டு தினமாக கருதப்படுகிறது.

இதில் அமாவாசை திதியானது நம் முன்னோர்கள் வழிபாட்டிற்கு உகந்த நாளாகவும் பௌர்ணமி திதியானது குலதெய்வ வழிபாடு சந்திர வழிபாடு போன்ற அனைத்து வழிபாட்டுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் நாளை வரக் கூடிய வைகாசி மாதத்தின் பௌர்ணமி திதியில் நாம் செய்யும் இந்த எளிய வழிபாடு நம்முடைய செல்வ வளத்தை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

செல்வ வளம் அதிகரிக்க பௌர்ணமி பரிகாரம்

இந்த வழிபாட்டை நாளைய தினம் மாலை ஆறு முப்பது மணிக்கு மேல் நிலவு தெரியும் நேரத்தில் தான் செய்ய வேண்டும். பௌர்ணமி திதி இன்று துவங்கினாலும் நாளை மாலை வரை உள்ளது. ஆகையால் இந்த பரிகாரத்தை நாளைய தினம் செய்வதே சிறந்தது. அதிலும் நாளைய தினம் வியாழக்கிழமை குபேரருக்கு உகந்த நாள் அதேபோல் நாளை தினத்தில் மாலை வேளையில் விசாக நட்சத்திரம் உள்ளது.

இது முருகருக்கு உகந்த நாள் இத்தகைய அற்புதமான நாளில் நாம் செய்யும் இந்த பரிகாரம் நம்முடைய வாழ்க்கையில் அளப்பரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. இந்த வழிபாடு செய்ய நாளை மாலை ஒரு சிறிய தட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கைப்பிடி உப்பை வைத்து அதன் மேல் ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நிலவு ஒளி நன்றாக தெரியும் இடத்தில் நின்று கொண்டு இந்த கல்லுப்பையும், நாணயத்தையும் நிலவிடம் காட்டுவது போல இரண்டு கைகளையும் உயர்த்தி வைத்துக் காட்டுங்கள்.

- Advertisement -

இப்படி செய்யும் பொழுது உங்கள் மனதில் உள்ள இப்படி செய்யும் பொழுது உங்களின் பணப்பிரச்சனைகள் அனைத்து தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி ஓம் சந்திரமவுலீஸ்வராய நமஹ என்ற இந்த மந்திரத்தையும் சொல்லிக் கொண்டே இருங்கள். பௌர்ணமி தினம் சந்திர பகவானுக்கு உரிய நாள் அன்றைய தினத்தில் அந்த சந்திரனுக்கு உரிய அதிதேவதையான சிவபெருமானுக்கும் உகந்த நாள்.

ஆகையால் நாளை பௌர்ணமி பரிகாரத்தில் இந்த மந்திரத்தை சொல்வது நமக்கு மேலும் நன்மை தரும். அது மட்டும் இன்றி கல் உப்பு நிறம் வெண்மை இது சந்திரனுக்குரியது கல் உப்பு மகாலட்சுமி தாயாரின் அம்சம் பொருந்தியது அதில் இருக்கக்கூடிய ஐந்து ரூபாய் நாணயம் குபேரருக்குரியது நாளைய தினம் குபேர வழிபாட்டிற்கு உரியனார் செல்வத்திற்கே அதிபதியான இத்தனை தெய்வங்களின் அனுகுறத்தையும் ஒன்றாக பெற்று தரக்கூடிய பரிகாரம் தான் இது.

- Advertisement -

இப்படி வழிபாடு செய்த பிறகு இந்த உப்பு நாணயம் இருக்கும் தட்டை பூஜை அறையில் வைத்து விடுங்கள். அடுத்த மாதம் வரை இது அங்கயே இருக்க வேண்டும். அடுத்த மாதம் இந்த நாணயத்தை எடுத்து விட்டு கல் உப்பை கால்படாத இடத்தில் கரைத்து விடுங்கள். மறுபடியும் இதே போல பழைய நாணயத்தையும் கல் உப்பையும் வைத்து வழிபட்டு பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் வீட்டில் செல்வ வளம் அதிகரித்து பணவரவு தாராளமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: விபத்துகள் ஏற்படாமல் இருக்க வழிபாடு

பௌர்ணமி நாளில் செய்யக் கூடிய இந்த பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கை உடன் இதை செய்தால் நல்ல பலனை பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -