
இந்த உலகத்தில் யாருக்கு தான் பிரச்சனை இல்லாமல் இருக்கிறது. ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை என்பது வரத்தான் செய்யும். கடன் பிரச்சினை, குடும்ப பிரச்சனை, வேலை தொடர்பான பிரச்சனை, பிள்ளைகளால் பிரச்சனை, கணவன் மனைவிக்குள் பிரச்சனை, அருகில் இருப்பவர்களால் பிரச்சனை, படிப்பில் பிரச்சனை, உடலில் பிரச்சனை என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். இந்த பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களுடைய விடாமுயற்சியையும் மேற்கொள்ள வேண்டும். விடாமுயற்சியோடு இந்த ஒரு எளிமையான பரிகாரத்தையும் நாம் செய்யும்பொழுது கண்டிப்பான முறையில் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் தவிடு பொடியாகும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒருவருக்கு பிரச்சனைக்கு மேல் பிரச்சினை வருகிறது, கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் வருகிறது என்றால் முதலில் அவர்களுடைய கர்ம வினைகள் காரணமாக இருந்தாலும் அருகில் இருப்பவர்களால் ஏற்படக்கூடிய கண் திருஷ்டியும் ஒரு வகையில் காரணமாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட கண் திருஷ்டியை விலக்குவதற்கும் கர்ம வினைகளை சரி செய்வதற்கும் தெய்வத்தின் அருள் என்பது கண்டிப்பாக வேண்டும். தெய்வத்தின் அருள் ஒருவருக்கு இருந்து விட்டால் அவர்களுக்கு இருக்க கூடிய எப்பேர்ப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சினை தீவதோடு அவர்கள் மகிழ்ச்சியுடனும் வெற்றிகரமான வாழ்க்கையையும் மேற்கொள்வார்கள் என்று கூறலாம்.
இந்த பரிகாரத்தை நாம் தினமும் செய்வது மிகவும் சிறப்பு. இயலாதவர்கள் செவ்வாய், வெள்ளி கிழமையில் மட்டுமாவது செய்ய வேண்டும். அப்படி வாரத்தில் இரண்டு முறை கூட செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் மாதத்தில் இரண்டு முறை அமாவாசை, பௌர்ணமி போன்ற தினங்களிலாவது செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை எவ்வளவு முறை நாம் செய்கிறோமோ அவ்வளவு சீக்கிரத்தில் நம்முடைய பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்றே கூறலாம்.
இதற்கு நமக்கு முக்கியமாக தேவைப்படக்கூடியது மூன்றே மூன்று இலைகள் தான். ஒன்று மா இலை. மாயிலை மகிழ்ச்சியை தரக்கூடிய இலை என்று கூறப்படுகிறது. அடுத்ததாக அரச இலை. அரச இலை தெய்வ அருளை பெறச் செய்யும் என்று கூறப்படுகிறது. மூன்றாவதாக வெற்றிலை. வெற்றியை தரக்கூடியது என்று கூறப்படுகிறது. இந்த மூன்று இலைகளையும் சம அளவு எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளுங்கள். அதை நிழலில் உலர்த்தி காய வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ளுங்கள்.
அவ்வாறு பொடி செய்யும் பொழுது இதனுடன் நாயுருவி விதை, வெண்கடுகு, பச்சை கற்பூரம் இவற்றையும் சேர்த்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். எப்பொழுதெல்லாம் வீட்டில் சாம்பிராணி தூபம் போடுகிறோமோ அப்பொழுதெல்லாம் இந்த பொடியையும் சேர்த்து வீடு முழுவதும் தூபம் காட்ட வேண்டும். இப்படி காட்டுவதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் கஷ்டமாக இருந்தாலும் தீய சக்தியாக இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கி தெய்வ அருள் பரிபூரணமாக கிடைக்கச் செய்யும். மேலும் நாம் மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு முயற்சிகளிலும் நமக்கு வெற்றிகள் கிடைக்கும். அதன் மூலம் மகிழ்ச்சியான வாழ்க்கையை நம்மால் வாழ முடியும்.
இதையும் படிக்கலாமே:புத்திசாலித்தனத்துடன் சிறப்பான வாழ்க்கை வாழ
அனைவரின் இல்லங்களிலும் தூபம் போடுவது என்பது அவ்வப்போது நடப்பது தான். அப்படி தூபம் போடும் பொழுது இந்த மூன்று இலைகளை பயன்படுத்தி தூபம் போட்டோம் என்றால் கண்டிப்பான முறையில் நம் வாழ்க்கையில் நல்ல மாற்றம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.