
குளிக்கப் பயன்படுத்தும் பக்கெட் முதல் பிளாஸ்டிக் பொருட்களில் தண்ணீர் பிடித்து வைக்க பயன்படுத்தும் எல்லா விதமான பொருட்களிலும் வெள்ளை வெள்ளையாக உப்பு கரை படிந்து இருக்கும். இந்த உப்பு கரையை கண்டுக்காமல் விட்டுவிட்டால் நாளடைவில் அழுக்கு படிந்து பக்கெட் உடையாமலேயே தூக்கிப் போடும் நிலை வந்துவிடும். 10 பைசா செலவில்லாமல், கெமிக்கல் எதுவும் கலக்காமல் நம் வீட்டிலேயே தேவையில்லாத இந்த பொருளை வைத்து எப்படி நொடியில் பக்கெட்டை புதிது போல மாற்றுவது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.
நீண்ட நாட்களாக உபயோகத்தில் இருக்கும் பக்கெட்டில் தண்ணீரில் இருக்கும் உப்பு கரை கொஞ்சம் கொஞ்சமாக படிந்து பிளாஸ்டிக்கோடு ஒட்டிக் கொண்டு விடும். இதை எவ்வளவு தான் நீங்கள் சோப்பு போட்டு தேய்த்தாலும் சுத்தமாக நீங்காது. இதற்காக ஆசிட் போன்ற கெமிக்கல் வகை பொருட்களை பயன்படுத்தி சிலர் சுத்தம் செய்வது உண்டு. கெமிக்கல் பொருட்கள் பயன்படுத்துவதால் நம் உடலுக்கு அலர்ஜி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
அது போன்ற கெமிக்கல் வகை நெடியை ஏற்படுத்தும் என்பதால் எல்லோருக்கும் ஒத்துப் போவது இல்லை, பலருக்கு இது ஒவ்வாமையை ஏற்படுத்தும். எனவே ரொம்பவே சுலபமாக கைகளாலேயே பயன்படுத்தக் கூடிய இந்த ஒரு பொருளை பயன்படுத்தி உங்கள் பாக்கெட்டை நீங்கள் வாங்கிய பொழுது எப்படி இருந்ததோ, அதே போல பளபளப்பாக செய்ய முடியும்.
வாரம் ஒரு முறையாவது இட்லி, தோசைக்கு மாவு அரைத்து வைத்து இருப்பீர்கள். இந்த மாவு கடைசியாக புளித்துப் போய்விடும். கொஞ்சம் தானே இருக்கிறது, புளித்த மாவில் என்ன செய்வது? என்று தெரியாமல் கீழே பலரும் ஊற்றி விடுவது உண்டு. புளித்து போன இந்த மாவைக் கொண்டு ஆரோக்கியமான விஷயங்களை செய்ய முடியும். அதில் ஒருவகை இது போல உப்புக் கரை படிந்த பக்கெட்டை சுத்தம் செய்வது ஆகும்.
பிளாஸ்டிக் பொருட்களில் படிந்துள்ள உப்பு கரையின் மீது கொஞ்சம் புளித்த மாவை கெட்டியாக தடவிக் கொள்ள வேண்டும். 15 நிமிடம் நன்கு உலர விட்டு பின்னர் ஸ்கிரப்பர் போட்டு தேய்த்து கொடுத்தால் ரொம்பவே சுலபமாக உப்பு கரை நீங்கி பளிச்சென மாறும். அதிகப்படியான உப்பு கரை உள்ள பொருட்களில் கொஞ்சம் புளித்த மாவுடன், பேக்கிங் சோடா கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இதே போல செய்தால் சுலபமாக உப்பு கரை நீங்கும்.
மேலும் புளித்த மாவை கொண்டு உங்கள் வீட்டு செடிகளை நன்கு செழிக்கச் செய்ய முடியும். புளித்த மாவுடன் 5 லிட்டர் அளவிற்கு தண்ணீரை கரைத்துக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் கழித்து தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை உங்கள் வீட்டில் வளரும் பூச்செடி, காய்கனி செடிகளுக்கு ஊற்றி மற்றும் தெளித்து வந்தால் பூக்காத செடிகள் நன்கு பூத்து குலுங்க துவங்கும். புளித்த மாவில் உருவாகக் கூடிய ஒரு வகை நுண்ணுயிரிகள் இந்த எதிர்வினையை புரிந்து நமக்கு நன்மைகளை கொடுக்கிறது. வீணான பொருள் தானே என்று இனி புளித்த மாவை தூக்கி எறியாமல் இப்படி பயனுள்ள வகையிலும் மாற்றிக் கொள்ளலாமே!