- Advertisement -
- Advertisement -

தமிழர் திருநாள் தைப்பொங்கல் நாளில் பாரம்பரியமாக காப்பு கட்டும் முறை இருந்து வருகிறது. பஞ்ச மூலிகைகளால் கோர்க்கப்படும் இந்த காப்பு, குடும்பத்திற்கு செல்வ செழிப்பையும், ஆரோக்கியமான நலவாழ்வையும் கொடுக்க வல்லது. வாசலில் காப்பு கட்டும் முறை எதற்காக வந்தது? அதில் சேர்க்கப்படும் மூலிகைகள் என்னென்ன? எப்படி கட்ட வேண்டும்? என்பது போன்ற பொங்கல் காப்பு சார்ந்த ஆன்மீகம் சார்ந்த விஷயங்களை தொடர்ந்து இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

ஒரு நூற்றாண்டுக்கு முன் அடுக்கு மாடி வீடுகளும், மாட மாளிகைகளும் இல்லாத காலகட்டங்களில் குடிசை வீடுகளும், பனை ஓலை வீடுகளும் தான் அதிகம் இருக்கும். இவர்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பித்தான் தன் பிழைப்பை நடத்திக் கொண்டிருப்பார்கள். வருடம் ஒருமுறை கிடைக்கக்கூடிய மொத்த வருவாயை வைத்து தான் வாழ்நாள் திட்டத்தை தீட்டுவார்கள். வீட்டை சுத்தம் செய்து குப்பைகளை போகி அன்று நெருப்பில் போட்டு கொளுத்தி விடுவார்கள். அப்பொழுதெல்லாம் பிளாஸ்டிக் கிடையாது. வீட்டில் எளிதில் மக்கி போகக் கூடிய பொருட்களை தான் வைத்திருப்பார்கள்.

- Advertisement -

வீடுகளை புதுப்பிப்பதும், புனரமைப்பதும், சுண்ணாம்பு பூசி, காவி தீட்டி கோலாகலமாய் கொண்டாடப்படுவதும் இந்த தைத்திருநாளில் தான். புத்தாடை தரித்து, புதுப் பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானை வழிபடுவதற்கு முன்னமே காப்பு கட்டுவார்கள். ஐந்து வகையான மூலிகைகள் கொண்டது இந்த காப்பு. வேப்பிலை, கருந்துளசி, சிறுகண்பீளை, தும்பை இலை, ஆவாரம் பூ சேர்த்து காப்பாக கட்டுவார்கள். இதில் பிரண்டையும், மாவிலையும் கூட சேர்த்து கட்டப்படுவது உண்டு.

மாவிலையும், கருந்துளசியும் செல்வ செழிப்பையும், மகாலட்சுமியின் வரவையும் குறிக்கும். மாவிலை தோரணம் கட்டுவதால் மகாலட்சுமி அங்கு அருள் செய்கிறார். கருந்துளசி இருக்கும் இல்லங்களில் இஷ்ட சக்திகள் அண்டுவதில்லை. குடும்பத்தில் செல்வம் செழிக்க, மென்மேலும் பொருளாதார ரீதியாக உயர லட்சுமி தாயாரை வழிபடுவார்கள். ஆவாரம், உடல் சூட்டை தணித்து பல விதமான மருத்துவ குணங்கள் ஏராளம் பெற்றுள்ளது. சிறுக்கண்பீளை மூலிகை, மார்கழியில் தான் செழித்து வளரும். இதை பொங்கல் பூ என்பார்கள். இந்த மூலிகையின் பூக்கள் சிறுநீரக கற்களை உடைத்து வெளியேற்றும் அற்புத சக்தி கொண்டது. நீர்க்கடுப்பு, சிறுநீரக பாதையில் ஏற்படும் தொற்றுகள் அனைத்தையும் குணமாக்க கூடியது.

- Advertisement -

வேப்பிலை காற்றில் பரவக்கூடிய நச்சுகளை விரட்டி அடிக்க கூடியது. அதனால் தான் திருவிழாக்கள், பண்டிகை காலங்களில் வேப்பிலையை தோரணமாக கட்டி தொங்க விடுவார்கள். வீட்டில் பலர் கூடும் பொழுது வேப்பிலை தோரணம் மற்றும் காப்பு கட்டுவது ஆரோக்கியத்தை பாதுகாக்கும் என்று தான் நம் முன்னோர்கள் இப்படி செய்து வந்தனர். தும்பை தலைவலி, தலைபாரம் போன்றவற்றை நீக்கும் தன்மை கொண்டது. இதை முகர்ந்து பார்த்தாலே தலைவலி தீரும்.

இதையும் படிக்கலாமே:
மகர சங்கராந்தி பலன் 2025

நம் முன்னோர்கள் பின்பற்றும் ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும் அறிவியலும், மருத்துவமும், ஆன்மீகமும் ஒளிந்துள்ளது. இந்த தைத்திருநாள் பொங்கல் நாளில் வீட்டில் நாமும் மூலிகை காப்பு கட்டி உயிர் வாழ தேவையான உணவினை கொடுத்த சூரிய பகவானுக்கும், உழவுக்கு உதவி செய்யும் மாடுகளுக்கும், மழை அளித்த வருண பகவானுக்கும் நன்றி செலுத்தும் விதமாக சிறப்பாக கொண்டாடுவோம்.

- Advertisement -