
வாயில்லா ஜீவன்களுக்கு எப்போதுமே நமக்கு நடக்கும் நல்லது கெட்டதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளக்கூடிய சக்தி இருக்கும் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். மனிதர்கள் கண்ணுக்குத் தெரியாத விஷயங்கள் கூட, வாயில்லா ஜீவன்களுக்கு தெரியும். நாய், பூனை, பசுமாடு, பறவைகள் என்று வாயில்லா ஜீவன்களை வீட்டில் வளர்க்கும் பழக்கமும் நம்மிடத்தில் பாரம்பரியமாகவே தொன்று தொட்டு இருக்கிறது.
காலம் காலமாக வீட்டிற்கு வரும் கஷ்டத்தை, இந்த வாயில்லா ஜீவன்கள் தன்னகத்தை ஏற்றுக் கொள்ளும். வீட்டிற்கு ஒரு துன்பம் வரும் சமயத்தில் வீட்டில் இருக்கும் நாய் பசு அல்லது பறவை அல்லது ஏதோ ஒரு உயிரினம், நாம் வளர்க்கும் ஒரு வாயில்லா ஜீவன் நமக்காக உயிரை விடும் என்று சொல்லுவார்கள். இதை அனுபவத்திலும் நாம் பார்த்திருப்போம். இப்படி வாயில்லா ஜீவன்களுக்கும் நமக்கும் எப்போதுமே ஒரு பந்தம் இருக்கிறது. அதேபோல தான் பல்லி. நம்முடைய வாழ்வின் நல்லது கெட்டதை சொல்லக்கூடிய சக்தி இந்த பல்லிக்கு உண்டு என்று காலம் காலமாக நம்பப்படுகிறது.
நம் வீட்டில் இருக்கும் பல்லியை குலதெய்வத்தின் ரூபமாகவும் முன்னோர்களின் ரூபமாகவும் பார்க்கின்றோம். பல வீடுகளில் பல்லி நடமாட்டம் இருக்கும். பல்லி இல்லாத வீடே இல்லை என்று கூட சொல்லலாம். நிச்சயம் ஓரிரு பல்லியாவது வீடுகளில் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை என்று அர்த்தம். அமானுஷ்யமான சக்திகள் இருக்கக்கூடிய இடத்தில் பல்லி நடமாடாது என்பது ஒரு நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.
உங்களுடைய வீட்டில் பல்லி இருக்கிறது என்றால் அதை அப்படியே விட்டு விடுங்கள். உணவுப் பொருட்களில் மட்டும் அது விழாமல் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். மற்றபடி இருக்கின்ற பல்லியை அடித்து கொன்று வெளியில் தூக்கிப் போடக்கூடாது. அது பாவம். சில பேர் வீட்டில் பீரோவுக்கு அடியில், பூஜை அறையில், சுவாமி படத்திற்கு பின்னால் பல்லி இருக்கும். ஆனால் அது சத்தம் எழுப்பாது.
இப்படி ஒரு வீட்டில் பல்லி இருந்து, அது சத்தம் எழுப்பவில்லை என்றாலும் அது ஏதோ ஒரு அபசகுனத்தில் அறிகுறிதான். வாரம் தோறும் வெள்ளிக்கிழமை குலதெய்வத்தை நினைத்து வீட்டில் பால் சாம்பிராணி போட்டு, அந்த புகையை வீடு முழுவதும் காண்பித்தால், 5 வாரம் வெள்ளிக்கிழமை இதே போல இந்த பரிகாரத்தை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால், உங்கள் வீட்டில் பல்லி சத்தம் போட துவங்கிவிடும். ஒரு பாசிட்டிவ் எனர்ஜி உங்களுக்குள் கிடைக்கும். குலதெய்வத்தின் ஆசியும் உங்கள் வீட்டிற்கு கிடைக்கும்.
அதேபோல நீங்கள் சில நல்லது கெட்டதை சிந்திக்கும் போது, சில முடிவுகளை எடுப்பதில் தடுமாறும்போது, பல்லி சத்தம் போடும். அப்போது நம்மை அறியாமல் நமக்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜி வரும். இந்த வேலையை செய்தால் சரியாக வரும் என்று ஒரு தீர்மானத்தைக் கூட எடுப்போம். இப்படி பல்லியின் சத்தம் நமக்கு நன்மையைத்தான் செய்யும்.
இதையும் படிக்கலாமே: அதிர்ஷ்டம் சொல்லும் அண்டங்காக்கை
பல்லி சத்தம் போடாமல் இருக்கும் பட்சத்தில் கவலை வேண்டாம். பால் சாம்பிராணி தூபம் போடுங்கள். பல்லி சத்தம் போட்டுக் கொண்டே உங்கள் வீட்டில் இருந்தால் அந்த குலதெய்வத்தின் ஆசிர்வாதமும் முன்னோர்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டே இருப்பீர்கள். பல்லியும் நம் வீட்டில் நடமாடும் ஒரு தெய்வம் தான் என்ற தகவலுடன், ஆன்மீகம் சார்ந்த இந்த தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் சந்தோஷத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.