
ரெஸ்டாரன்ட் மற்றும் சாட் கார்னர் போன்ற இடங்களில் கிடைக்கும் இந்த கட்லட் ரிச்சான சுவையில், செம டேஸ்ட்டில் அட்டகாசமாக நம் வீட்டிலேயும் சுலபமான முறையில் செய்து விடலாம். குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடித்த இந்த கட்லட் உருளைக் கிழங்கு மற்றும் வாழைக்காயை வைத்து சுலபமான முறையில் வீட்டிலேயே எப்படி தயாரிப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள போகிறோம்.
உருளைக்கிழங்கு – இரண்டு
வாழைக்காய் – ஒன்று
உப்பு – சிறிதளவு
பெரிய வெங்காயம் – ஒன்று
மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன்
கரம் மசாலா – அரை ஸ்பூன்
தனியா தூள் – ஒரு ஸ்பூன்
சாட் மசாலா – அரை ஸ்பூன்
பிரட் கிரம்ஸ் – இரண்டு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உருளைக்கிழங்கு வாழைக்காய் கட்லட் செய்வதற்கு தேவையான எல்லா பொருட்களையும் முதலில் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ரெண்டு உருளைக்கிழங்கு, ஒரு வாழைக்காயை கழுவி சுத்தம் செய்து இரண்டாக நறுக்கி குக்கரில் போட்டு இரண்டு விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் வாழை காய்களை ஒரு துருவியில் போட்டு துருவி எடுத்துக் கொள்ளுங்கள்.
துருவி எடுத்த இந்த வாழைக்காய் மற்றும் உருளைக்கிழங்கு துருவலுடன் ஒரு பெரிய வெங்காயத்தை தோலுரித்து பொடிபொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். பின்னர் இந்த கலவைக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து மசாலா வகைகளை சேர்க்க வேண்டும். மேற்கூறிய அளவின்படி சாட் மசாலா, கரம் மசாலா, தனியா தூள், மிளகாய்த் தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.
கடைசியாக பிரட் கிரம்ஸ் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். தயார் செய்து வைத்துள்ள இந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கட்லெட் வடிவில் தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். கட்லெட் செய்வதற்கு அதிக எண்ணெய் தேவைப்படாது. கட்லெட்டை வறுத்து எடுக்க கொஞ்சம் போல எண்ணெய் விட்டால் போதுமானது.
இதையும் படிக்கலாமே:
பிள்ளைகள் நன்றாக படிக்க சியாமளா நவராத்திரி வழிபாடு
எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொரு கட்லெட்டாக போட்டு ஒருபுறம் நன்கு சிவக்க வெந்து வந்ததும் மறுபுறம் திருப்பி போட வேண்டும். மறுபுறமும் நன்கு வெந்து வரவே, எண்ணெயை வடிகட்டி விட்டு ஒரு தட்டில் டிஷ்யூ பேப்பர் அல்லது நியூஸ் பேப்பர் வைத்து போடுங்கள். சுடச் சுட இந்த அருமையான சுவையுள்ள உருளைக்கிழங்கு மற்றும் வாழைக்காய் கட்லெட்டை டொமேட்டோ சாஸ், சில்லி சாஸ், கிரீன் சட்னி, தேங்காய் சட்னி, கார சட்னி போன்றவற்றை வைத்து சாப்பிட்டால், ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் ரிச்சான செம டேஸ்ட் கிடைக்கும். வீட்டில் செய்தது என்றால் யாரும் நம்பவே மாட்டார்கள். எல்லோருமே விரும்பி சுவைத்து சாப்பிடக் கூடிய இந்த கட்லட்டை நீங்களும் இதே முறையில் செய்து கொடுத்துப் பாருங்கள். கண்டிப்பாக பாராட்டு வாங்குவது உறுதி.