- Advertisement -
சமையல் குறிப்புகள்

வேலை மிச்சமாக 5 நிமிடத்தில் செய்யக்கூடிய சுவையான உருளைக்கிழங்கு வெங்காய சாதம். சமைத்த உடனே நொடிப்பொழுதில் அனைத்தும் தீர்ந்து விடும்

- Advertisement -

இப்பொழுது குளிர்காலம் என்பதால் அனைவருக்கும் சற்று சோம்பேறி தனமாகவே இருக்கும். அதிலும் லாக்டவுன் காலம் என்பதனால் இரவு தாமதமாக உறங்கி, காலையில் தாமதமாக எழுவது என்பது பலரின் வழக்கமாக மாறிவிட்டது. இவ்வாறான நேரங்களில் வேகமாக சமைப்பதும், வித விதமாக சமைப்பதும் சற்று சிரமமாகத்தான் இருக்கும். ஆனால் மழைக்காலம் என்பதனால் ஏதேனும் சூடாகவும் சுவையாகவும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே இருக்கும். இதற்கு ஏற்றார் போல் மிகவும் எளிமையான மற்றும் விரைவாக சமைக்க கூடிய ஒரு சுவையான வெங்காய உருளைக்கிழங்கு சாதத்தை எப்படி செய்வது என்பதை பற்றி தான் பார்க்கப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
சாதம் – 3 கப், பெரிய வெங்காயம் – 2, உருளைக்கிழங்கு – 2, எண்ணெய் – 4 ஸ்பூன், பச்சை மிளகாய் – 3, சில்லி ஃப்ளேக்ஸ் – ஒரு ஸ்பூன், மிளகுத் தூள் – ஒரு ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு இணுக்கு, கொத்தமல்லி இலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் உருளைக்கிழங்கை நன்றாக கழுவிக் கொண்டு, தோல் நீக்கி அதனை தேங்காய் சீவலை பயன்படுத்தி நன்றாக துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு கடாயை வைத்து எண்ணெய் சேர்க்க வேண்டும் என்னை நன்றாக காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும் பின்னர் சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இவை நன்றாக வதங்கியதும் இதனுடன் துருவி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். குறிப்பு: உருளைக்கிழங்கை துருவி சேர்த்துள்ளதால் தண்ணீர் ஏதும் சேர்க்காமல் எண்ணெயிலேயே வதக்கிக் கொள்ள நன்றாக வெந்து விடும். பிறகு இதனுடன் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

பின்னர் எடுத்து வைத்துள்ள சாதத்தை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறி விட்டு ஒரு ஸ்பூன் மிளகு தூள் மற்றும் ஒரு ஸ்பூன் சில்லி சாஸ் சேர்த்து நன்றாக கலந்து மசாலா அனைத்தும் சாதத்துடன் சேர்ந்து வரும்வரை கிளறி விட்டு ஐந்து நிமிடங்கள் அப்படியே விட வேண்டும் பின்னர் இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்க வேண்டும். அவ்வளவுதான் ஐந்தே நிமிடத்தில் சுவையான உருளைக்கிழங்கு வெங்காய சாதம் தயாராகிவிட்டது.

உருளைக்கிழங்கு என்று சொன்னாலே பிடிக்காத குழந்தைகள் என்று எவரும் இருக்கமாட்டார்கள். அதனை வெங்காயத்துடன் சேர்த்து செய்த இந்த சுவையான சாதத்தை குழந்தைகளுக்கு பரிமாறி கொடுத்தால் போதும். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு சமைத்த அனைத்து சாதமும் தீர்ந்துவிடும். குளிர்காலத்திற்கு ஏற்ற மிகவும் எளிமையாகவும் சுவையாகவும் சமைக்கக் கூடிய இந்த சாதத்தை ஒரு முறை செய்து பாருங்கள். மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருப்பீர்கள்.

- Advertisement -