
ஒவ்வொரு மனிதரையும் ஒவ்வொரு மாதிரியான பிரச்சனை சூழ்ந்து இருக்கிறது. ஒருவருக்கு கடன் பிரச்சனை, ஒருவருக்கு ஆரோக்கிய பிரச்சனை, ஒருவருக்கு பண பிரச்சினை, ஒருவருக்கு குடும்பமே பிரச்சனை, ஒரு சில பேருக்கு தொழில் பிரச்சனை, இப்படி உங்களுக்கு வாழ்க்கையில் துன்பத்தைத் தரும் பிரச்சனை எது. அந்த பிரச்சனை நாளையோடு முடிய வேண்டும்.
நாளையோடு உங்களுடைய பிரச்சனைகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்றால், நாளைய தினம் விநாயக சதுர்த்தி அன்று என்ன பரிகாரம் செய்வது. ஆன்மீக ரீதியான ஒரு தாந்த்ரீக பரிகாரம் பற்றிய தகவலைத்தான் இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
நாளை விநாயகர் சதுர்த்தி. விநாயகரை மனதார நினைத்துக் கொண்டு வழிபாட்டிற்கு முன்பு அல்லது வழிபாட்டிற்கு பின்பு இந்த பரிகாரத்தை செய்து விட்டால், உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும். இந்த பரிகாரத்திற்கு உங்களுக்கு தேவை எருக்கன் இலை. முக்கியமான மூன்று பிரச்சனைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
எல்லா பிரச்சனைகளையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் ஒவ்வொரு இலை. அந்த எருக்கன் இலையில் ஒரு வரியில் உங்களுடைய பிரச்சனைகளை எழுதுங்கள். நீல நிற பேனா, ஸ்கெட்ச் எதைப் பயன்படுத்த வேண்டும் என்றாலும் பிரச்சனையை எழுதலாம்.
கடன் நீங்க, வறுமை நீங்க, வேலையில் இருக்கும் பிரச்சினை நீங்க, எதிரி தொல்லை விலக, நோய் நொடி விலக, இப்படி உங்களை விட்டு எந்த பிரச்சனை விலக வேண்டுமோ அந்தப் பிரச்சனையை அந்த எருக்கன் இலையில் எழுதிக் கொள்ளுங்கள். பிரச்சனைகள் எழுதிய இந்த இலையை உங்கள் உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு விநாயகரை மனதார நினைத்து இந்த பிரச்சனை இன்றோடு என்னை விட்டு விலக வேண்டும் என்று பிராத்தனை வைக்கவும்.
பிறகு அந்த இலைகளை, ஒரு தட்டின் மீது அல்லது மண் அகல் விளக்கின் மீது வைத்து ஒரு கற்பூரத்தை வைத்து, அந்த இலையை கொளுத்தி விடுங்கள். (ஒவ்வொரு இலையின் தனித்தனியாக வைத்து ஒரு கற்பூரத்தை வைத்து எரிக்க வேண்டும். மூன்று இலைகளை, தனித்தனியாக எரித்து அந்த சாம்பலை உடனடியாக வீட்டில் இருந்து வெளியில் தூக்கி போட்டு விட வேண்டும்). உங்களை விட்டு விலக வேண்டிய பிரச்சனையை மட்டும் தான் இந்த இலையில் எழுதி, நெருப்பில் போட்டு எரிக்க வேண்டும். தவிர நல்ல விஷயங்களை எழுதி நெருப்பில் போட்டு பொசுக்கி விடாதீர்கள்.
உதாரணத்திற்கு செல்வம் சேர வேண்டும், நகைகள் சேர வேண்டும், பணம் காசு வேண்டும், என்று எழுதி எரிக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. நம்மை விட்டு வெளியேற வேண்டிய கஷ்டங்களை எழுதினால் போதும். சில பேருக்கு தீய பழக்க வழக்கம் இருக்கும். அந்த தீய பழக்க வழக்கங்கள் விலக வேண்டும் என்றும் இந்த இலையில் எழுதலாம். வீடு வேண்டும் வாகனம் வேண்டும் இப்படி எல்லாம் எழுதி எரிக்கக் கூடாது.
இதையும் படிக்கலாமே: காரிய சித்தி மாலை பாடல் வரிகள்
நாளைய தினம் உங்கள் கஷ்டங்களை எருக்க இலையில் எழுதி கற்பூர தீயில் போட்டு எரித்து விட்டால் நீங்கள் எழுதிய அந்த கஷ்டம் அன்றிலிருந்து, அந்த நொடியில் இருந்து உங்களை விட்டு விலகி விடும் என்பது ஒரு நம்பிக்கை இருக்கிறது. எருக்கன் இலை பெரும்பாலும் நாளைய தினம் எல்லா இடங்களிலும் கிடைக்கும். உங்களுக்கு கிடைக்காது அரிது என்றால், பூக்கடைக்காரர்களிடம் சொல்லி வைத்து அந்த இலையை வாங்கி வைத்து இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன எளிமையான இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை விநாயக சதுர்த்தி அன்று செய்து பலன் பெறுங்கள்.