
மனிதனுடைய மனதிற்குள் ஆயிரம் விதமான பிரச்சனைகள், தேங்கி கிடக்கும். குடும்ப பிரச்சனை, பிள்ளைகளுடைய கல்வி பிரச்சனை, வேலையில் பிரச்சனை, வியாபாரத்தில் பிரச்சனை, சொந்த பந்தங்களோடு பிரச்சனை, மருமகளாக இருந்தால் மாமியாருடன் பிரச்சனை வரும்.
மாமியாராக இருந்தால் மருமகளுடன் பிரச்சனை. இன்றைக்கு யாரைப் பார்ப்பது, யாரைப் பார்க்காமல் இருந்தால் சந்தோஷம் வரும், என்ன சமைப்பது, வேலைகளை எப்படி முடிப்பது, என்று பிரச்சனைக்கு பஞ்சமே இல்லை. தினமும் தூங்கி எழுந்தவுடன், கண்விழிக்கும் போது, நம்முடைய மனது லேசாக தான் இருக்கும். ஆனால் அந்த நாளை பிரச்சனை இல்லாமல் கடந்து செல்வது எப்படி என்று ஒரு நிமிடம் சிந்தித்தால் போதும்.
நம்முடைய மூளை குழம்பி போய்விடும். கண் விழிக்கும் போதே பிரச்சனைகளும் விழிக்கத் துவங்குகிறது. ஒரு நாளை இனிமையான நாளாக மாற்ற காலை எழுந்தவுடன் எப்படி வழிபாட்டை மேற்கொள்வது. ஒரு எளிமையான பயிற்சியை தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக இரண்டு கைகளையும் சாமி கும்பிடுவது போல வைத்துக்கொண்டு, உங்களுடைய நெஞ்சுக்குழிக்கு நேராக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிறந்த நட்சத்திரம் என்ன. அந்த நட்சத்திரத்தின் பெயரைச் சொல்லி, இன்றைய நாள் நல்ல நாளாக செல்லும். நான் நினைத்த நல்லது எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று சொல்லி, அப்படியே உங்களுடைய இரண்டு கைகளையும் அழுத்தம் கொடுங்கள்.
சாமி கும்பிடுவது போல தான் உங்களுடைய இரண்டு கைகளும் சேர்ந்து இருக்கிறது. இரண்டு உள்ளங்கைகளையும் அழுத்தம் கொடுக்க வேண்டும். பிறகு உங்களுடைய கைகளை லேசாக நெஞ்சு குழியிலும் அழுத்தம் கொடுத்தபடி வைத்து, எடுக்க வேண்டும். இரண்டு உள்ளங்கை ஒன்றாக சேருமிடம் நெஞ்சுக்குழி மையப்பகுதியில், அழுத்தம் கொடுப்பது, கொஞ்சம் லூஸ் விடனும், அழுத்தம் கொடுப்பது பிறகு கொஞ்சம் லூஸ் விடுங்க.
இது போல ஒரு நிமிடம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நீங்கள் பிறந்த நட்சத்திரத்தை மூன்று முறை சொல்ல வேண்டும். இந்த நாள் இனிய நாளாக அமையப்போகிறது என்பதை மனதில் ஆழ பதிய வைத்துக் கொண்டு, இந்த பயிற்சியை ஒரு நிமிடம் செய்து முடித்துவிட்டு, பிறகு உங்களுடைய அன்றாட வேலையை துவங்கி பாருங்கள்.
நிச்சயமாக அந்த நாள் முழுவதும் இனிய நாளாக அமையும். உங்களுடைய மனதிற்கு பிடித்த வேலைகளை மட்டும் செய்வீங்க. பெருசாக பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு வராது. ஒரே நாளில் இதெல்லாம் நடந்து விடுமா என்று கேட்டால் நிச்சயம் நடக்கும்.
அதற்கு உங்களுக்கு முழு நம்பிக்கை தேவை. ஒரே நாளில் உங்களுக்கு இந்த பயிற்சி பலன் தரவில்லை என்றாலும் இதை அப்படியே கைவிட்டு விட வேண்டாம். தொடர்ந்து 1 வாரம், 15 நாட்கள் இந்த பயிற்சியை நீங்கள் மேற்கொள்ளும் போது, உங்கள் வாழ்க்கையில் நிறைய நல்ல மாற்றங்கள் தொடர்ந்து நடப்பதை உணர்வீர்கள்.
இரவு நல்ல தூக்கத்தை பெறுபவர்களால் மட்டும் தான், மறுநாள் காலையில் வேலையில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். ஆகவே இரவு அதிக நேரம் கண் விழிக்க வேண்டாம். கைப்பேசி பார்க்க வேண்டாம். அதிகபட்சம் இரவு 10 மணிக்கு நீங்கள் படுத்து இருக்க வேண்டும். காலையில் 6:00 மணிக்கு கண் விழித்திருக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே: அடகு வைத்த நகையை திருப்ப சொல்ல வேண்டிய மந்திரம்
இந்த தூக்க நேரத்தை நீங்கள் கடைபிடித்தாலே வாழ்வில் இருக்கும் முக்கால்வாசி பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மற்றபடி வேலையின் காரணமாக இரவு நேரத்தில், கண்விழித்து இருப்பவர்களுக்கு இது பொருந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது. நல்ல தூக்கத்துடன் மேலே சொன்ன இந்த எளிய பயிற்சி உங்கள் வாழ்க்கையை சீர் செய்யும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.