- Advertisement -

பிரதோஷ நாளில் நந்தி பகவானுக்கு செலுத்த வேண்டிய மாலை

நாளைய தினம் புதன்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பிரதோஷ தினம். நம்முடைய கஷ்டங்களுக்கு எல்லாம் விடிவு காலம் பிறக்க நாளைய தினம் சிவன் வழிபாடு மிக மிக அவசியம். உங்களுடைய வேலையில் பிரச்சனை, குடும்பத்தில் பிரச்சனை, திருமணம் நடக்கவில்லை, வீட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியம் பிரச்சனை, அவமானப் பிரச்சனை இப்படி இந்த பிரச்சனைகள் இருந்தாலும் சரி, அதை சரி செய்ய இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரம் உங்களுக்கு கை கொடுக்கும்.

பிரதோஷ நாளில் நந்தி தேவர் வழிபாடு

நாளை நந்திகேஸ்வரருக்கு உங்கள் கையால் அருகம்புல் மாலை சாத்த வேண்டும். இந்த அருகம்புல் சர்வரோக நிவாரணம் தரக்கூடிய ஒரு பொருள். பிரதோஷம் என்றாலே வில்வ இலையை கட்டித் தான் எம்பெருமானுக்கும் நந்திகேஸ்வரருக்கும் மாலையாக அணிவிப்பார்கள். ஆனால் இந்த அருகம்புல் மாலை அதைவிட பல மடங்கு சிறப்பானது.

- Advertisement -

இரண்டு அல்லது மூன்று கட்டு அருகம்புல் வாங்கிக்கோங்க. ஒரு மஞ்சள் நிற நூலில் இந்த அருகம்புல்லை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வைத்து மாலையாக உங்கள் கையால் கட்ட வேண்டும். பூ கட்டுவது போலவே கட்டிக் கொள்ளுங்கள். உங்களுடைய மனதில் ஏதாவது ஒரு கோரிக்கையை நினைத்துக் கொண்டே இந்த மாலையை கட்டுங்கள்.

பிரதோஷ நேரத்தில் முதலில் நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். அப்போது நந்தி பகவானிடம் வேண்டிக் கொண்டு இந்த மாலையை அர்ச்சகர் இடம் கொடுங்கள். அது நந்தி பகவானுக்கு செலுத்தப்படும். இந்த மாலையில் வழியாக நீங்கள் சொன்ன வேண்டுதலை நந்தி பகவான் எம்பெருமான் ஈசன் காதுகளில் போய் சொல்லுவார்.

- Advertisement -

நிச்சயம் உங்களுடைய வேண்டுதல் பலிக்கும் என்பது நம்பிக்கை. சுவாமிக்கு சாத்திய இந்த அருகம்புல்லை கொண்டுவந்து குடிக்கின்ற தண்ணீரில் இரண்டு போட்டு அந்த தண்ணீரை குடித்தால் உடல் ஆரோக்கியம் பெறும்.

அடுத்தபடியாக மணி. சின்னதாக இருக்கக்கூடிய மணியை, வேண்டிக் கொண்டு நந்திகேஸ்வரனுடைய கழுத்தில் கட்டலாம். திருமணம் நடக்கவில்லை என்பவர்கள் இந்த மணியை பிரதோஷத்தன்று நந்தி பகவான் கழுத்தில் கட்டுவதாக பிரார்த்தனை வைத்துக்கொள்ளுங்கள் நிச்சயம் உங்களுக்கு திருமணம் நடக்கும். திருமண தடை விலக நந்திகேஸ்வரருக்கு மணி வாங்கி சாத்த வேண்டும்.

- Advertisement -

வீட்டில் அவமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகமாக இருக்கிறது. கடன் வாங்கி விட்டோம் அல்லது எங்களுடைய பிள்ளைகள் தவறான பாதைக்கு செல்கிறார்கள். எங்களுடைய குடும்பத்தில் அப்பா தவறான பாதைக்கு செல்கிறார். தலை நிமிர்ந்தே வாழ முடியவில்லை. அக்கம்பக்கம் வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் எங்களை ரொம்பவும் அவமானப்படுத்துகிறார்கள் என்றால் நந்திகேஸ்வரருக்கு வஸ்திரதானம் செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இன்று கூர்ம ஜெயந்தி. சொல்ல வேண்டிய மந்திரம்

வஸ்திரதானம் செய்வது நம் வீட்டில் ஏற்படக்கூடிய அவமானத்தை குறைக்கும் எனபது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.  நந்தி பகவானை தரிசனம் செய்துவிட்டு பிறகு எம்பெருமானை தரிசனம் செய்ய செல்லுங்கள். கேட்ட வரத்தை எல்லாம் அள்ளிக் கொண்டு வரலாம். ஆன்மீகம் சொல்லும் இந்த எளிமையான பரிகாரங்கள் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்று நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -