- Advertisement -
சமையல் குறிப்புகள்

புதிதாக சமையல் பழகுறவங்க கூட இந்த டிப்ஸ் பாலோ பண்ணா ஈசியா புல்கா செஞ்சிடலாம்.

- Advertisement -

சப்பாத்தி பூரி இந்த வரிசையில் இப்போது அதிகம் பேர் விரும்புவது புல்கா தான். இது ஒரு புறம் வெந்ததும் எடுத்து எரியும் தணலில் மறு புறம் போட்டு செய்வார்கள். இதனால் உப்பலாகவும் அதிக மேன்மையாகவும் இருக்கும். இது வட மற்றும் தென்னிந்தியாவில் இந்த புல்கா மிகவும் பிரபலம். இதற்கு அதிகமாக எண்ணெய் தேவை படாது என்பது மட்டுமல்ல இது செய்யும் முறையும் சற்று வித்தியாசமாக இருப்பதால் மற்ற அனைத்தையும் விட இந்த புல்கா சாப்பிட அனைவருக்கும் பிடிக்கும். அந்த வகையில் இந்த புல்கா புதிதாக சமையல் பழகுறவர்கள் கூட எளிதாக செய்ய தான் இந்த பதிவு.

புல்கா செய்ய தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 11/2 கப், உப்பு – 1 டீஸ்பூன், எண்ணெய் அல்லது நெய் – 2 டீஸ்பூன், பால் – 1/4 கப்.

- Advertisement -

முதலில் ஒரு பவுலில் ஒன்றரை கப் கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உப்பையும் எண்ணெய்யும் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். இந்த எண்ணெய் மாவின் எல்லா பக்கங்களையும் படுமாறு நன்றாகப் பிசைந்து கொள்ளுங்கள். அதன் பிறகு பாலை ஊற்றி பிசைய தொடங்குங்கள். (காய்ச்சிய பால் ஆக இருந்தால் நல்லது காய்ச்சாத பாலாக இருந்தால் பிரிட்ஜில் இருந்து எடுத்து நேரடியாக உபயோகிக்காமல் சிறிது நேரம் வெளியே வைத்துவிட்டு உபயோகிக்கலாம்). பால் ஊற்றி பிசைந்த பிறகு லேசாக தண்ணீரும் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள். இதற்கு பால் மட்டும் சேர்தால் பத்தாது, எனவே கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பிசைய தான் வேண்டும். பிசைந்த பிறகு லேசாக எண்ணெய் தடவி மூடி வைத்து விடுங்கள்.

அரை மணி நேரம் கழித்து நீங்கள் பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து இன்னொரு முறை நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அந்த உருண்டைகளை சப்பாத்தி தேய்க்கும் கட்டையில் வைத்து தேய்க்க வேண்டும். புல்காவிற்கு அதிக கனமாகவும் தேய்க்க கூடாது, அதே சமயம் அதிக மெல்லிதாகவும் இருக்கக் கூடாது. ஒரு மீடியம் பதத்தில் இந்த மாவை திரட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி மாவை திரட்டும்போது கட்டாயமாக எண்ணெய் தேய்த்து விட கூடாது. மாவை தொட்டு தான் தேய்க்க வேண்டும். அதுவும் மிகவும் குறைவான அளவில் தான் மாவை தேய்க்க வேண்டும், இல்லை எனில் இதை நாம் ஸ்டவ்லில் போடும் போது புல்கா கறுத்து விடும்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் தோசை கல்லை வைத்து விடுங்கள். நாம் தோசை கல்லில் தேய்த்து வைத்த புல்காவை போட்டு, உடனே அடுத்த பக்கம் திருப்பி போட்டு விடுங்கள். (இப்போது தான் இதில் குறிப்பிட்டிருக்கும் அந்த டிப்ஸை நாம் பயன்படுத்த போகிறோம்) அதாவது அடுத்த பக்கம் போட்ட பிறகு அந்தப் பக்கம் இந்த மாவு நன்றாக வேகம் வரை தோசை கல்லிலேயே இருக்கட்டும் திருப்ப வேண்டாம். ஒரு நிமிடம் ஆனால் போதும் நன்றாக ஒரு புறம் வெந்துவிடும் அதன் பிறகு வேகாத பக்கத்தை எடுத்து எரிந்து கொண்டிருக்கும் ஸ்டவ்வின் தீயில் போட்டால் புல்கா நன்றாக உப்பி வரும்.

இதையும் படிக்கலாமே: அட்டகாசமான சுவையில் ஒரு சூப்பர் ரெசிபி தான் இந்த தேங்காய் பால் அல்வா. இதை வீட்டிலே எப்படி ஈஸியா செய்றதுன்னு தெரிஞ்சிக்கலாமா?.

பொதுவாக நாம் புல்கா செய்யும் போது ஒரு பக்கம் போட்டு லேசாக வெந்ததும் மறுபக்கம் திருப்பிப் போட்டு அதன் மறுபுறத்தை எடுத்து நாம் போட்டு எடுத்தால் தான் வரும். ஆனால் ஒரு சிலர் இரண்டு புறமும் மாற்றி மாற்றி போட்டு இந்த புல்காவை சொதப்பி விடுவார்கள். இந்த முறையில் ஒரே ஒரு முறை போட்டு திருப்பி வேக விட்டு வேகாத மற்றொரு புறத்தை ஸ்டவ்வில் வைக்கும் போது வேலையும் சீக்கிரமாக முடியும். புல்காவும் வெந்து நன்றாக உப்பி இருக்கும். இதை புதிதாக சமையல் பழகுபவர்கள் கூட சுலபமாக இந்த முறையில் புல்கா செய்யலாம். நீங்களும் இனி உங்கள் வீட்டில் இந்த முறையில் செய்து பாருங்கள். இனி புல்கா செய்வது கஷ்டம் என்ற வார்த்தைக்கு இடம் இல்லாமல் அடிக்கடி செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்.

- Advertisement -