- Advertisement -
சமையல் குறிப்புகள்

உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்து நிறைந்த இந்த கேழ்வரகு மாவு களியை இப்படி சுலபமாக குக்கரில் செய்து பாருங்கள்

- Advertisement -

நமது பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியமான ஒரு உணவு என்னவென்றால் அது கேப்பகளி. தினமும் காலையில் நமது முன்னோர்கள் இந்த உணவை காலை உணவாக உண்டு வந்தனர். எனவேதான் அவர்கள் அதிக வயதுடன் மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் 50 வயதில் செய்த வேலையை கூட இப்போதுள்ள தலைமுறையினரால் 20 வயதில் கூட செய்ய முடிவதில்லை. அந்த அளவிற்கு இது போன்ற உணவுகள் அவர்களை மிகவும் ஆரோக்கியமாக வைத்திருந்தது. ஆனால் இன்றைய தலைமுறையினரரோ ஃபாஸ்ட்ஃபுட், ஷவர்மா, சேட்ஐடம்ஸ் போன்ற உணவுகளை மிகவும் விருப்பமாக சாப்பிடுகின்றனர். இவை உடம்பிற்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது. எனவே இவற்றைத் தவிர்த்து விட்டு குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த ஆரோக்கியமான உணவுகளை சமைத்து சாப்பிடுங்கள். இப்பொழுது இருப்பவர்கள் மிகவும் சுலபமாக செய்யும் வகையில் இந்த கேழ்வரகு களியை எப்படி குக்கரில் செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையானபொருட்கள்:
கேழ்வரகு மாவு – ஒரு கப், தண்ணீர் – 2 கப், உப்பு – அரை ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
ஒரு கப் கேழ்வரகு மாவிற்க்கு 2 கப் தண்ணீர் எடுத்துக் கொள்வது சரியான அளவாகும். முதலில் ஒரு கப் கேழ்வரகு மாவை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.

பிறகு குக்கரில் வைத்து வேக வைக்கும் அளவிற்கு ஏற்ற ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து அடுப்பின் மீது வைத்து, ஒரு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் நன்றாக சூடானதும் கரைத்து வைத்துள்ள கேழ்வரகு மாவினை இதில் ஊற்றி நன்றாக கலந்துவிட வேண்டும். பிறகு இதனை கைவிடாமல் கிளறினால் மட்டுமே கட்டிகள் படாமல் இருக்கும

- Advertisement -

இவை சிறிது நேரத்தில் சற்று கெட்டியான பதத்திற்கு வந்துவிடும். அப்பொழுது அடுப்பை அனைத்துவிட்டு மாவில் சிறு கட்டிகள் கூட இல்லாமல் நன்றாக கலந்துவிட வேண்டும். பிறகு குக்கரை அடுப்பில் வைத்து அதில் ஒரு சொம்பு தண்ணீர் ஊற்றி கொள்ள வேண்டும்.

பின்னர் கேழ்வரகு மாவு கலந்து வைத்துள்ள கிண்ணத்தை குக்கரில் வைத்து குக்கரை மூடி, 4 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பின்னர் குக்கரில் பிரஷர் குறைந்ததும் குக்கர் மூடியை திறந்து உள்ளே இருக்கும் கேழ்வரகு மாவு கிண்ணத்தை வெளியே எடுக்க வேண்டும். பிறகு ஒரு கரண்டியை வைத்து நன்றாக கலந்து விட்டு பரிமாறி கொடுக்க வேண்டும்.

இந்த கேழ்வரகு மாவு களியுடன் பொட்டுக்கடலை சட்னி, வேர்க்கடலை சட்னி அல்லது மீன் குழம்பு, கருவாட்டு குழம்பு இதுபோன்ற எவற்றை வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். ஒருமுறை இவ்வாறு செய்து சாப்பிட்டு பாருங்கள். இதன் சுவைக்கு மீண்டும் அடிக்கடி இதனை செய்து சாப்பிடுவீர்கள்.

- Advertisement -