
Rasikal mothiram in Tamil: மிகப் பழங்காலம் தொட்டே மனிதர்கள் ராசி கற்களை அலங்கார ஆபரணமாகவும், மாந்திரீக, தாந்திரீக பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தி வந்துள்ளனர். ஜோதிடத்திலும் இந்த ராசி கற்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் ஜாதகத்தில் உள்ள 12 ராசியினருக்கும் ஏற்ற ராசி கற்கள் குறித்தும், இன்ன பிற இரத்தினக் கற்களின் தன்மைகள் மற்றும் ராசிக்கல் மோதிரம் அணிவதால் ஏற்படுகின்ற பலன்கள் குறித்தும் இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசியில் பிறந்தவர்கள் பவளம், வைரம் மற்றும் புஷ்பராக கல்லை மோதிரமாக அணிந்து கொள்ளலாம்.
ரிஷப ராசிக்காரர்கள் வைரம் மற்றும் மரகதப்பச்சை, ஜேட் ரத்தினங்களை மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்ளலாம்.
மிதுன ராசிக்காரர்கள் மரகதம், வைரம் மற்றும் முத்து ரத்தினங்களை மோதிரமாக செய்து அணிந்து கொள்ளலாம்.
கடக ராசிக்காரர்கள் முத்து, கனகபுஷ்பராகம் ரத்தினங்களை மோதிரத்தில் பணித்து அணிந்துகொள்ளலாம்.
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாணிக்கம், புஷ்பராகக் கற்களை மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்ளலாம், இந்த ராசியினர் எக்காரணம் கொண்டும் வைரம் பதித்த மோதிரத்தை மட்டும் அணியக் கூடாது.
கன்னி ராசிகளில் பிறந்தவர்கள் ஜேட், மரகதம், வைரம் போன்ற ரத்தினங்களை மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்ளலாம்.
துலாம் ராசியில் பிறந்தவர்கள் வைரத்தை தங்கம் அல்லது வெள்ளி உலோகத்தில் மோதிரம் செய்து அணிந்து கொள்ள வேண்டும்.
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய் பகவானுக்குரிய பவளம், கனகபுஷ்பராகம் போன்ற கற்களை மோதிரமாக செய்து அணிந்து கொள்ளலாம்.
தனுசு ராசியில் பிறந்தவர்கள் கனகபுஷ்பராகம், நீலக்கல்லை வெள்ளி மோதிரத்தில் பதித்து அணியலாம்.
மகர ராசியில் பிறந்தவர்கள் நீலக்கல், வைரம் போன்றவற்றை மோதிரத்தில் பதித்து அணியலாம்.
கும்ப ராசியில் பிறந்தவர்கள் வைரம், நீலம் போன்ற கற்களை ராசிக்கல் மோதிரம் அணிந்து கொள்ளலாம்.
மீனராசியில் பிறந்தவர்கள் கனகபுஷ்பராகம், முத்து, வைரம் போன்ற கற்களை மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்ளலாம்.
இது மென்மையான மஞ்சள் தவிட்டு நிறம் உடையதாகவும், இந்த கல் கோமியம் எனப்படும் மாட்டின் சிறுநீர் நிறத்தில் இருப்பதால் இதற்கு “கோமேதகம்” என பெயர் ஏற்பட்டது. இந்த கல்லை மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்பவர்களுக்கு மனதில் தைரியம் பிறக்கும். உடலும், உள்ளமும் உற்சாகத்துடன் செயல்படும். புத்திசாலித்தனத்தையும், கல்வி மேம்பாட்டையும் கொடுக்கும். மேலும் வாக்கு சாதுர்யமும், வாக்கு வசியமும் உண்டாகும். வழக்கறிஞர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள், அரசியல் துறையில் இருப்பவர்கள் இந்த மோதிரத்தை அணிந்து கொள்வதால் அவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.
இக்கல்லை உற்று பார்க்கும்போது அதற்குள்ளாக மெல்லிய ரேகைகள் ஓடுவதை பார்க்க முடியும். அதிலும் குறிப்பாக 6 ரேகைகள் ஓடுவது போல இருந்தால் அது மிகவும் உயர்தரமான நீலக்கல் ஆகும்.
இந்தக் கல்லை மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்பவர்களுக்கு ஞானம், சாந்தம், பெருந்தன்மை, தீய பழக்கங்களில் விடுபடுதல் போன்றவை ஏற்படும்.
நீலக்கல் ஆன்மீகத்திற்கு மிகவும் ஏற்ற ஒரு கல்லாக உள்ளது. யோக, தியானக் கலைகளை கற்பவர்கள் இந்த இந்த கல்லை மோதிரத்தில் அணிந்து கொள்வதால், ஆழ்மன தெளிவு உண்டாகும். அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி போன்ற சனி கிரக தோஷங்களில் இருந்து காத்துக் கொள்ள நினைப்பவர்கள் இந்த நீலக் கல் மோதிரத்தை வலது கையின் நடுவிரலில் நிச்சயம் அணிந்து கொள்ள வேண்டும்.
இது நவரத்தின கல் இல்லை. இது கடல்வாழ் உயிரினம் ஒன்றின் எச்சம் மிகுந்து கிடைக்கும் ஒரு வகை எலும்பு கூடு ஆகும். இந்த பவள பாறை உயிரினம் உலகெங்கிலும் உள்ள கடல் பகுதியில் கிடைக்கிறது. பல நிறங்களிலும் பவளம் கிடைத்தாலும், சிவப்பு நிற பவளத்தை மட்டுமே அனைவரும் விரும்பி அணிகின்றனர்.
இந்த கல்லை மோதிரமாக அணிபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் குறைவதோடு, பொறுமை குணம் அதிகரிக்கிறது. ஜாதகத்தில் செவ்வாய் பகவானால் ஏற்படுகின்ற தோஷங்களை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
எதிர்பாராத விபத்து, ஆயுதங்களால் ஆபத்து போன்றவற்றை இந்த பவள மோதிரம் அணிந்து கொள்வதால் தடுக்கலாம் என இரத்தினக்கல் நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படி நமக்கு ஏதேனும் ஆபத்து வர போவதாக இருந்தால் நாம் மோதிரமாக அணிந்திருக்கும் பவள கல்லின் நிறம் வெளுத்து நம்மை எச்சரிக்கை செய்யும் எனவும் கூறுகின்றனர்.
இந்த கல் நிறமற்றதாகவும், வெளிரிய மஞ்சள் நிறத்திலும் அல்லது மஞ்சள் நிறமாகவும், சிவப்பு நிறத்திலும் பலவிதமாக கிடைக்கின்றது. நிறத்திற்கு ஏற்ப கனகபுஷ்பராகம் எனவும், மஞ்சள் புஷ்பராகம் எனவும் அழைக்கப்படுகிறது.
இக் கல்லை மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்பவர்களுக்கு இதய நோய், புற்றுநோய், நுரையீரல், நோய்கள் போன்றவை குணமாகும் என கூறப்படுகின்றது. கண் பார்வை இழப்பை தடுப்பதாகவும் கொள்கின்றனர்.
இந்தக் கல்லை வீட்டில் வைத்திருந்தாலே தீ விபத்து மற்றும் எதிர்பாராத விபத்துக்கள் ஏற்படாமல் காக்கும். தலையணைக்கு அடியில் வைத்து தூங்குபவர்களுக்கு கெட்ட கனவுகள், தூங்கும்போது எழுந்து நடக்கும் குறைபாடு போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.
புஷ்பராக கல் பிறருடனான பகைமை, எதிரிகளின் சதி, சூழ்ச்சி, விபத்துகளில் காயம், எதிர்பாராத மரணம், பில்லி, செய்வினை, சூனியங்கள், மன நோய் ஏற்படுதல் போன்ற வற்றில் இருந்து அவர்களை காக்கும் என கருதப்படுகிறது.
மரகதம் ரத்தினக் கற்களில் மிகவும் விலை அதிகமானது. இதை பச்சைக்கல் எனவும் சிலர் அழைப்பார்கள். மரகதத்தை மோதிரத்தில் பதித்து அணிபவர்களுக்கு நல்ல வசதியும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் அமையும்.
இதயக்கோளாறு, இரத்தக்கொதிப்பு, அல்சர், புற்றுநோய், தலைவலி, கண், மூக்கு, நாக்கு, தோல் தொடர்பான நோய்களையும் குணமாக்கும்.
தொலைதூர நாடுகளுக்கு கப்பல், விமான பயணத்தின் மூலம் செல்பவர்கள் இந்த மரகத பச்சை கல்லை மோதிரத்தில் பதித்து அணிந்து கொண்டு செல்வதால் எதிர்பாரா கப்பல், விமான விபத்துகள் ஏற்படுவதில் இருந்து நம்மை காக்கும்.
காவல் துறை, ராணுவம் போன்ற துறைகளில் பணிபவர்கள் இந்தக் கல்லை மோதிரமாக அணிவதால் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்.
இந்த கல் இளஞ்சிவப்பு, இரத்த சிவப்பு நிறங்களில் கிடைக்கும். ரத்தினங்களில் இது தான் தலைசிறந்த ரத்தினக்கல் என சிலர் கூறுகின்றனர்.. அதனால் இந்த கல்லை “இரத்தினராஜா, ராஜரத்தினம், ராஜமாணிக்கம்” என அழைக்கின்றனர்.
இந்த கல்லை அனுபவங்களுக்கு வாழ்வில் உயர்வுகள் உண்டாகும். மன தைரியம் பெருகும். குற்றவாளிகள் நண்பர்கள் நேர்மை இல்லாமல் நடந்து கொள்வதாக இருந்தால் மோதிரத்தில் உள்ள இந்த கல்லின் நிறம் மங்கலாகி எச்சரிக்கை செய்யும் என கூறப்படுகிறது.
தீய எண்ணங்களையும், மனக்கவலை களையும் அகற்றும். இக்கல்லை அணிந்து கொள்பவர்களுக்கு தீய ஆவிகள், பஞ்சம், புயல், இடி, மின்னல் போன்றவற்றால் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்.
நவரத்தினங்களில் பாறையில் இருந்து பெறப்படாமல், ஒரு உயிரினமிடமிருந்து பெறப்படுகின்ற ஒரே ரத்தினம் முத்து ஆகும். கடலில் உள்ள சிப்பியின் வயிற்றில் உருவாவது தான் இந்த முத்து. தற்போது உலகெங்கிலும் செயற்கை முத்துக்களும் தயாரிக்கப்படுகின்றன.
கண் தொடர்பான நோய்கள், மூத்திரக் கடுப்பு, குடல் அலர்ச்சி, வயிற்றிலுள்ள அமிலத்தன்மை மாறுபடுதல் போன்ற உடல் தொடர்பான நோய்கள் முத்து மோதிரம் அணிவதால் நீங்குவதாக கூறப்படுகின்றது.
உண்மையான முத்தினை மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்பவர்களுக்கு காதல் வாழ்க்கையில் வெற்றியை கொடுக்கும். திருமணமான தம்பதிகள் இதை அணிந்து கொண்டால் மன ஒற்றுமையுடன் வாழ்வார்கள்.
முத்து பதித்த மோதிரத்தை அணிந்து கொள்பவர்கள், எதிர்மறை ஆற்றல் மிகுந்த இடங்களில் இருக்க நேர்ந்தால், அந்த முத்து பதித்த மோதிரத்தை தாந்திரீக முறையில் காய்ச்சாத பசும் பாலில் போட்டு ஊறவைத்து, சிறிது நேரம் கழித்து மஞ்சள் கலந்த தண்ணீரால் கழுவி சுத்தம் செய்த பிறகே மீண்டும் அணிந்து கொள்ள வேண்டும்.
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தீய ஆற்றல்களை விரட்டவும் முத்துப் பதித்த மோதிரத்தை பலரும் அணிந்து கொள்கின்றனர்.
பொதுவாக இந்த கல் இளம் பச்சை நிறத்தில் இருக்கும். இந்தக் கல்லின் நடுவில் மேலிருந்து கீழாக ஒரு கோடு போன்ற அமைப்பு இருக்கும். வெளிச்சத்தில் அந்த கோடு பூனையின் கண்போல மிளிரும். அதனால் இந்த இரத்தின கல்லை ஆங்கிலத்தில் Cats Eye என அழைக்கின்றனர்.
இந்தக் கல்லை அணிபவர்களுக்கு மனம் தொடர்பான நோய்கள் குணமாகும். காதலர்களிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பய உணர்வு நீங்கும். கெட்ட கனவுகள் ஏற்படாமல் தடுக்கும். குழந்தைகளுக்கு இந்த வைடூரியம் பதித்த ஆபரணங்களை அணிவதால் அவர்களின் உடல் ஆரோக்கியம் சிறக்கும். பாதுகாப்பு உண்டாகும்.
இந்த கல்லை மோதிரத்தில் பணிந்து அணிபவர்களுக்கு மனம், உடல், சிந்தனைகளில் நல்ல விதமான மாற்றங்கள் ஏற்படும். சூதாட்டம். குதிரைப் பந்தயம் போன்ற விளையாட்டுகளில் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் சக்தி இந்த வீடு வாரியத்திற்கு உண்டு.
நவரத்தினங்களிலேயே அதிக விலை மதிப்புள்ளது வைர கல்லாகும். மிகுந்த ஒளிவீச்சு தன்மையுடைய கல்லாக இது திகழ்கிறது. எனினும் வைரம் அனைவரும் அணிந்துகொள்ள தக்க ஒரு நவரத்தின கல் இல்லை என ரத்தினக் கல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அக்காலங்களில் பிராமண சமூக மக்கள் புதிதாக ஒரு வைரக்கல்லை வாங்கினால், அதை ஆபரணமாக செய்து அணிந்து கொள்வதற்கு முன்பாக தங்கள் வீடுகளில் சில காலம் வைத்திருப்பார்கள் எனவும், அப்படி அந்த வைரம் வீட்டில் இருக்கும் காலத்தில் அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு நன்மையான பலன்கள் கிடைத்தால், அந்த வைரத்தை ஆபரணமாக செய்து அணிந்து கொள்வார்கள் என்றும், தீய பலன்களை ஏற்படுத்தினால் அந்த வைரத்தை ஏதேனும் கோயிலுக்கு தானம் வழங்கி விடுவார்கள் என்கிற ஒரு வழக்கம் இருந்ததாக கூறப்படுகின்றது.
எனவே வைரக்கல்லை அனைவரும் அணிந்து கொள்வதைத் தவிர்த்து அந்த கல் அணியும் தகுதியுள்ள ராசி லக்னம் கொண்டவர்கள் மட்டுமே அணிந்து கொள்ள வேண்டும். வைரத்தை அணிந்து கொள்பவர்களுக்கு இல்லற வாழ்க்கை இன்பமாக இருக்கும்.
சளி, ரத்த சீழ்வடிதல், ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகள் தொடர்பான நோய்கள், முகத்தில் வரக்கூடிய வாதம், குளிர்காய்ச்சல், மனநோய், நீரிழிவு நோய், பெண்களுக்கு ஏற்படும் கருப்பை கோளாறு முதலியவற்றைக் குணப்படுத்தும் ஆற்றல் உங்களுக்கு உண்டு.
ஜாதகத்தில் வைரக்கல் சுக்கிர பகவானின் தோஷங்களை போக்கும் சக்தி கொண்டதாக கருதப்படுகிறது.