- Advertisement -
வீட்டு குறிப்புகள்

காய்ந்துபோன கருவேப்பிலைகளை குப்பையிலா தூக்கி போடுறீங்க? இந்த விஷயங்களை தெரிஞ்சுகிட்டா கடையிலிருந்து காசு கொடுத்து காய்ந்த கருவேப்பிலையை வாங்கிட்டு வருவீங்க.

- Advertisement -

மலிவாகக் கிடைக்கக்கூடிய எந்த பொருளாக இருந்தாலும் அந்த பொருளின் அருமை பெருமைகள் நமக்கு தெறிவது கிடையாது. அன்றாடம் காய்கறிகள் வாங்கும்போது இனாமாக கொடுக்கப்படும் கருவறைகளில் அடங்கியுள்ள இரும்புச் சத்து ஏராளம். ஆனால் வெறும் வாசத்திற்காக சமையலில் கருவேப்பிலையை பயன்படுத்திவிட்டு, அதை நாம் தூக்கிப்போட்டு விடுகின்றோம். சத்துக்கள் நிறைந்த காய்ந்துபோன கருவேப்பிலைகளை பயனுள்ளதாக எப்படி மாற்றலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

உங்களுடைய வீட்டில் காய்ந்த பழைய கருவேப்பிலைகள் இருந்தாலும் சரி அல்லது வாங்கிய கருவேப்பிலைகளை நிழலிலேயே உலர்த்தி வைத்தாலும் சரி அல்லது பழைய கருவேப்பிலைகளை கடாயில் போட்டு லேசாக வறுத்து மொறுமொறுவென மாற்றிக் கொண்டாலும் சரி, இந்த கருவேப்பிலையை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு முதலில் பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். இந்த கருவேப்பிலைப் பொடியை எப்படி எல்லாம் பயனுள்ளதாக உபயோகிக்கலாம். இப்படி கருவேப்பிலைகளை அரைத்து ஸ்டோர் செய்து வைத்திருக்கும் இந்த பொடி ஆறு மாதங்கள் வரை கூட கெட்டுப் போகாது.

- Advertisement -

Tip no 1:
ஒரு டம்ளர் கொதிக்கின்ற தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் கருவேப்பிலைப் பொடியை ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த கருவேப்பிலை கலந்த தண்ணீர் மிதமான சூட்டிற்கு வந்த பிறகு, இந்த தண்ணீரை அப்படியே குடித்து விடலாம். தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் இந்த கருவேப்பிலை தண்ணீரை குடிப்பதன் மூலம் வயிற்றில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் கரையும். இதனால் தொப்பை படிப்படியாக குறையத் தொடங்கும். உடல் எடை வேகமாக குறையும். உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கும். முடி உதிர்வு குறையும். அப்படியே இந்த தண்ணீரை குடிக்க உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் சுடு தண்ணீரில் போட்ட கருவேப்பிலைகளை வடிகட்டிவிட்டு கூட குடிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tip no 2:
நீங்கள் அரைத்து வைத்திருக்கும் இந்த கருவேப்பிலை பொடியை கலவை சாதங்கள் செய்யும் போது பயன்படுத்திக்கொள்ளலாம். புளி சாதம் லெமன் சாதம் செய்யும்போது அந்த சாதத்தை கிளறும் போது, அரை ஸ்பூன் அளவு இந்த கருவேப்பிலை பொடியையும் சேர்த்து கலந்து விட்டால் நாம் செய்யக்கூடிய வெரைட்டி ரைஸ் வாசத்தோடு இருக்கும்.

- Advertisement -

Tip no 3:
அடுத்தபடியாக நீங்கள் சாதாரணமாக தலைக்கு தேய்க்கும் தேங்காய் எண்ணெயில் இந்த கருவேப்பிலை பொடியை ஒரு ஸ்பூன் அளவு போட்டு கலந்து வைத்துக்கொள்ளுங்கள். கருவேப்பிலை பொடி சேர்த்த இந்த தேங்காய் எண்ணெயை தினமும் தலையில் தடவிவந்தால் முடி கருகருவென வளரத் தொடங்கும். சீக்கிரத்தில் முடி வெள்ளையாகமலும் இருக்கும்.

Tip no 4:
செட்டிநாடு ஸ்டைலில் உங்களுடைய வீட்டில் சைவ கிரேவி, அசைவக் இரைவி எது செய்தாலும் அந்த கிரேவியை செய்து முடிக்கும்போது, இறுதியாக அரை ஸ்பூன் அளவு இந்த கருவேப்பிலைப் பொடியை மேலே தூவி விட்டு அதன் பின்பு இறக்கி பாருங்கள். அந்த கிரேவி செம டேஸ்டா இருக்கும்.

அது மட்டும் இல்லைங்க வீட்டில் வைக்கக் கூடிய சாம்பார், ரசம், குழம்பு எதில் வேண்டுமென்றாலும் அரை ஸ்பூன் இந்த கருவேப்பிலைப் பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள், கருவேப்பிலைகளை முழுமையாக தாளித்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடமாட்டார்கள். இப்படி சமையலில் பொடியாக சேர்த்து கொடுக்கும்போது நம் உணவோடு சேர்ந்து உள்ளுக்குச் சென்றுவிடும்.

Tip no 5:
அடுத்தபடியாக நிறைய குழந்தைகள் இட்லி பொடியை விருப்பமாக சாப்பிடுவார்கள். பெரியவர்களும் கூட. உங்களுடைய வீட்டில் நீங்கள் அரைத்த இட்லி பொடியாக இருந்தாலும் கடையில் வாங்கிய இட்லி பொடி யாக இருந்தாலும் அதில் இந்த கருவேப்பிலை பொடியை ஒரு ஸ்பூன் அளவு போட்டு கலந்து விட்டால், இட்லி பொடியோடு கருவேப்பிலைப் பொடி நம்முடைய வயிற்றுக்குள் சென்றுவிடும்.

- Advertisement -