- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

சனிபகவானின் பிடியிலிருந்து விடுபட இந்த எளிய பரிகாரங்களைச் செய்து வந்தால் போதும், விரைவாக சனிபகவானின் தாக்கம் குறையும்

சனி பகவானை போன்று நன்மை செய்பவர் எவரும் இல்லை. ஆனால் நவகிரகங்களிலேயே உயரிய இடத்தில் இருப்பவராக சனி பகவான் இருக்கிறார். ஆனால் பலரும் சனி பகவானை கண்டு மிகவும் அச்சம் கொள்கின்றனர். சனி போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை என்ற வார்த்தைக்கு ஏற்ப சனிபகவான் நமது ஜாதகத்தில் இருந்துவிட்டால் படாத துயரத்தையும் படவேண்டும். அப்படி இல்லை என்றால் நினைத்துப் பார்க்காத அளவிற்கு பெரிய அதிர்ஷ்டத்தை அடைய வேண்டும். சனியின் ஆட்சி வீடு மகரம் மற்றும் கும்பம். உச்ச வீடு துலாம். நீச வீடு மேஷம். பகை வீடு சிம்மம். சனிபகவானின் தாக்கம் நீங்கள் செய்யும் நன்மை தீமைகளை பொருத்து நல்லவைகளாக நடப்பதும், தீயவையாக நடப்பதும் அமைகிறது. அவ்வாறு சனிபகவானின் தாக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும்? என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

சனி பகவான் மிகுந்த வலிமை வாய்ந்த வராக இருக்கிறார். எனவே எப்பொழுதும் சனி பகவானை நேர் எதிரே நின்று வணங்கக் கூடாது. சற்றே சாய்வான திசையில் நின்று தான் வணங்க வேண்டும். சனியை “சாய்வாய் நின்று வழிபடு” என்ற பழமொழி ஒன்று இருக்கிறது. நல்லது நினைப்பவர்களுக்கு சனிபகவான் என்றும் நன்மை மட்டுமே செய்வார். ஆனால் தீமை செய்பவர்களுக்கு நிச்சயம் தண்டனை கொடுக்காமல் இருக்க மாட்டார்.

- Advertisement -

சனியின் தாக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்று நினைப்பவர்கள் தகுந்த பரிகாரங்களை செய்ய, மெல்லமெல்ல அவற்றிலிருந்து எளிதாக விடுபட முடியும். அதற்காக சனிபகவானின் உரிய தெய்வமான சிவபெருமானை வழிபட வேண்டும். சிவபெருமானுக்கு திங்கட்கிழமை அன்று பால் அபிஷேகம் மற்றும் வில்வ இலை அர்ச்சனை செய்வதன் மூலம் சனிபகவான் கொடுக்கக்கூடிய தண்டனையிலிருந்து எளிதில் விடுபடலாம்.

பரிகாரம்: 1
சனி பகவானின் பிடியில் இருந்து விடுபடுவதற்கு சனிக்கிழமை அன்று, நவகிரக கோவிலுக்குச் சென்று முதலில் சனி பகவானின் முன்னிலையில் ஒரு தேங்காயை இரண்டாக உடைத்து கொள்ள வேண்டும். பிறகு சிறிதளவு எள்ளை இரண்டு கருப்பு நிற துணியில் வைத்து மூட்டையாக கட்டி கொள்ள வேண்டும். பின்னர் இரண்டு தேங்காயிலும் நல்லெண்ணெய் ஊற்றி, இந்த எள் மூட்டைகளை எண்ணெயில் வைத்து, தீபம் ஏற்றி சனிபகவானை வணங்கி வர கூடிய விரைவிலேயே சனி தோஷத்தில் இருந்து விடுபடலாம்.

- Advertisement -

பரிகாரம்: 2
சனி பகவான் பிடியில் இருக்கும் பொழுது அதிகப்படியான கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், அந்தத் துன்பங்கள் சற்று படிப்படியாக குறைய ஆரம்பிக்க வேண்டும் என நினைப்பவர்கள் முதலில் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். அதற்கு 108 கருப்பு உளுந்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரவு படுக்கும் முன் உங்கள் தலையணைக்கு அடியில் இந்த உளுந்தைப் வைத்துக் கொண்டு தூங்க வேண்டும். மறுநாள் காலை தலைக்கு குளித்து முடித்த பிறகு, கோவிலுக்குச் சென்று, உங்கள் கையில் 108 கருப்பு உளுந்தை வைத்துக் கொண்டு, சனிபகவானை 108 முறை வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறை வலம் வரும் பொழுதும் சனி பகவானின் முன் ஒவ்வொரு உளுந்தாக தரையில் போட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் விரைவாக உங்கள் துன்பங்கள் குறைய ஆரம்பிக்கும்.

- Advertisement -