- Advertisement -
ஜோதிடம்

சனி வக்கிர நிவர்த்தி 2024

- Advertisement -

வரும் நவம்பர் 15ஆம் தேதி சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். இந்த வக்கிர நிவர்த்தியானது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வக்ர நிவர்த்தி தாக்கம் ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை தரப்போகிறது. நிம்மதியான வாழ்க்கையை கொடுக்க போகிறது. எந்தெந்த ராசிகளுக்கு இனி வரக்கூடிய நாட்களில் அதிர்ஷ்டம் அடிக்க போகிறது, என்பதைப் பற்றி இன்றைய ஜோதிடம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு கடந்த சில நாட்களாக வாழ்க்கையில் பெரிய அளவில் தடை இருந்திருக்கும். நீங்கள் எதிர்பார்த்த நல்லது எதுவுமே நடந்திருக்காது. ஆனால் நவம்பர் 15க்கு மேலாக நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு, கிடைக்கும். நீண்ட நாட்களாக முயற்சி செய்து கொண்டிருந்த நல்ல வேலை கிடைக்கும். வீட்டிலிருந்த சுப காரிய தடைகள் விலகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் இருக்கும். நிதி நிலைமை சீராகும். உங்களுக்கான தடைகளை தகர்க்க சனி பகவான் ஆசிகளை வழங்குவார்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை தடைப்பட்டு இருந்த அத்தனை நல்ல காரியங்களும் இனி வரக்கூடிய நாட்களில் டக்கு டக்குனு நடக்க துவங்கும். நீண்ட நாள் முயற்சி செய்து தோற்றுப் போன காரியங்கள் எல்லாம் நவம்பர் 15க்கு பிறகு தானாக வெற்றியோடு உங்களைத் தேடி வரும். நிதி நிலைமை சீராகும். வசூலே செய்ய முடியாது என்று சொன்ன கடனை வசூல் செய்வீர்கள். திருப்பி அடைக்கவே முடியாத கடனை எல்லாம் திருப்பிக் கொடுப்பீர்கள். மன நிம்மதியை அடைவீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இதுநாள் வரை ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் சிக்கி இருந்திருப்பீர்கள். பொருளாதார சம்பந்தப்பட்ட பிரச்சனையில் சிக்கி இருந்திருப்பீர்கள். எதிரி தொல்லையால் அவதிப்பட்டு வந்திருப்பீர்கள். இந்த எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காண நவம்பர் 15க்கு மேல் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நிச்சயம் நீங்கள் இழுந்ததெல்லாம் திரும்பவும் உங்கள் கையை வந்து சேரும். இழந்த வாழ்க்கையை சனி பகவான் உங்களுக்கு மீட்டுக் கொடுத்து விடுவார்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இது நாள் வரை வாழ்க்கையில் இருந்து வந்த இடர்பாடுகள் அனைத்தும் விலகும். நிதிநிலைமை சீராகும். தொழிலில் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை இருந்திருக்கும். பணம் ஒரே இடத்தில் முடங்கி போயிருந்திருக்கும். அந்தப் பிரச்சினைகளை எல்லாம் சரி செய்து உங்கள் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் சரியாகி, குடும்ப பிரச்சனைகள் சரியாகி நிம்மதியாக மூச்சு விடக் கூடிய நேரம் கூடிய விரைவில் வரப்போகிறது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை வாழ்க்கையில் இருந்து வந்த தடைகள் எல்லாம் சரியாகும். நடக்கும் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்த நல்ல காரியங்கள் எல்லாம் இதுநாள் வரை ஒன்று கூட நடந்து இருக்காது. நவம்பர் 15க்கு பிறகு பாருங்கள். ஒவ்வொரு நல்ல காரியங்களாக உங்களுடைய வீட்டில் நடக்க துவங்கும். நீங்களே எதிர்பாராத நல்ல செய்தி உங்களை தேடி வரும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் எல்லாம் மீண்டும் நடக்கும் சுப செலவுகள் ஏற்படும். நிதி நிலைமையில் உயர்ந்த இடத்திற்கு செல்வீர்கள். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு வாழ்வில் இனி வசந்த காலம் வீசக்கூடிய நாட்கள் தான். நீண்ட நாட்களாக வேலை தேடி கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. கை நிறைய சம்பாதிக்க துவங்கி விடுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சண்டைகள் எல்லாம் சரியாகும். தவறாக புரிந்து கொண்ட கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் மேலோங்கும். அத்தனை நன்மைகளும் இனி உங்களை தேடி வரும்.

- Advertisement -