- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

சஷ்டி விரதம் யாரெல்லாம் இருக்க வேண்டும்? இந்த விரதத்தின் மூலம் கிடைக்கப்பெறும் பலன்கள் என்னென்ன? இவற்றைப் பற்றிக் கூறும் சஷ்டி வரலாறு

தீபாவளிக்கு அடுத்து வரும் அமாவாசையை தொடர்ந்து வரும் ஆறு நாட்கள் சஷ்டி எனப்படுகிறது. இன்றைய நாளில் முருகப்பெருமானுக்கு விரதமிருந்து பூஜைகள் செய்வது அனைவரின் வழக்கமாகும். வேலை கிடைக்க வேண்டும் என்பவர்கள், திருமண தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டும் என்பவர்கள், ஆரோக்கியம் குறைபாடு உள்ளவர்கள், தொழில் வளர்ச்சி அடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் போன்ற அனைவரும் இந்த சஷ்டி விரதத்தை முறையாக மேற்கொண்டு இறுதிநாளான ஆறாவது நாளன்று கண்விழித்து முருகனைத் தொழுது சஷ்டி விரதத்தை முடித்துக் கொள்வது சிறந்த பலனைக் கொடுக்கிறது. அவ்வாறு புனிதமான இந்த சஷ்டி விரதத்தின் வரலாறு பற்றியும் இதனை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

சஷ்டி:
படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன் காசிபன் என்ற இரு மகன்கள் இருந்தனர் அதில் தமிழன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று இறுதியில் சிவபெருமானின் மாமனாரான ஆனால் இவரின் தீயவினைகள் காரணமாக சிவபெருமானால் உருவாக்கப்பட்ட வீரபத்திரன் மூலமாக கொல்லப்படுவார்.

- Advertisement -

காசிபன் அவர்கள் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்து பல வித சக்திகள் பெற்றிருந்தார். பின்னர் அசுரர்களால் ஏவப்பட்ட பெண்மணியான மாயை என்பவரை திருமணம் செய்து ஐந்து பிள்ளைகளைப் பெற்றார். அந்த பிள்ளைகளும் சிவபெருமானை நோக்கி தவம் புரிய ஆரம்பித்தனர். அதில் ஒருவரான சூரபத்மன் கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும், 1008 அண்டம் ஆட்சி புரியவும், இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றிருப்பார். பிறகு சாகா வரம் வேண்டும் எனவும் சிவபெருமானிடம் வரம் கேட்பார்.

அதற்கு சிவபெருமான் மனிதனாக பிறந்த எவரும் ஒருமுறை சாகத்தான் வேண்டும் என்று கூறி உனக்கு எப்படிப்பட்ட மரணம் வேண்டும் என்று கேட்டிருப்பார். அதற்கு சூரபத்மன் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத ஒருவரால் மட்டுமே எனக்கு மரணம் நிகழ வேண்டும் என்ற வரத்தை வாங்கி இருப்பார். இப்படி வரம் வாங்கிய பின்னர் சூரபத்மன் இந்திரன் உட்பட அனைத்து முக்கோடி தேவர்களையும் சிறை பிடிக்க ஆரம்பித்தான்.

- Advertisement -

இதனை சிவபெருமானிடம் முறையிட்ட தேவர்களை காப்பாற்ற எண்ணி சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளை வெளியிட, அதனை வாயு பகவான் சரவண பொய்கையில் இருக்கும் ஆறு தாமரைகளின் மீது சேர்த்துவிடுவார். பின்னர் இந்த ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகளாக மாறி கார்த்திகைப் பெண்களின் மூலம் வளர்க்கப்படுவர். இவரே ஆறுமுகன் என அழைக்கப்படும் முருகப் பெருமான் ஆவார்.

முருகப்பெருமான் முதல் ஐந்து நாட்களில் சூரபத்மனின் மகன் மற்றும் அவரது படைகளை அழித்து விடுவார். அதன் பின்னர் ஆறாவது நாள் சூரபத்மனை அழிக்க நினைக்க அவன் மாமரமாக மாறி மறைந்திருப்பான். பார்வதிதேவி கொடுத்த வேலையை வைத்து மாமரத்தை இரண்டாக பிளந்து ஒரு பாதியை மயிலாகவும், மறு பாதியை தனது கொடியின் சின்னமான சேவலாகவும் மாற்றிக்கொள்வார். இந்த ஆறு தினங்களே சஷ்டி தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆறு நாட்களும் விரதம் இருந்து முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து அந்த பாலை பிரசாதமாக பருக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கிறது. மற்றும் இந்த ஆறு நாள் விரதத்தின் மூலமாக தடைபட்டுக் கொண்டிருக்கும் காரியங்கள் அனைத்தும் சிறப்புடன் நடைபெறும். நமக்கு தேவையான வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இந்த சஷ்டி விரதத்தை முறையாக கடைபிடித்தால் நல்ல பலனை பெற முடியும்.

- Advertisement -