
மார்கழி மாதம் என்பது தேவர்களின் பிரம்ம முகூர்த்த நேரம் என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட பிரம்ம முகூர்த்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பது மிகவும் சிறப்புக்குரியது. இந்த ஞாயிற்றுக்கிழமையை முறையாக பயன்படுத்தினோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பணத்தடைகள் அனைத்தும் நீங்குவதோடு செல்வ வளமும் அதிகரிக்கும். அப்படிப்பட்ட ஒரு அற்புதமான வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாக ஞாயிற்றுக்கிழமை என்பது சூரிய பகவானுக்குரிய கிழமை என்று நம் அனைவருக்கும் தெரியும். மற்ற நாட்களில் சூரிய பகவானை வழிபாடு செய்கிறோமோ இல்லையோ ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய பகவானை வழிபாடு செய்தோம் என்றால் சூரிய பகவானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. சூரிய பகவானின் அருள் நமக்கு கிடைத்துவிட்டால் நம்மிடம் இருக்கக்கூடிய நோய் நொடிகள் முற்றிலும் நீங்கும் என்றும், வேலை தொடர்பான அனைத்து விதமான கோரிக்கைகளும் நிறைவேறும் என்றும், அரசாங்க வேலை செய்பவர்களுக்கும், அரசியலில் இருப்பவர்களுக்கும் சூரிய பகவானின் அருள் கிடைத்துவிட்டால் அதில் அவர்கள் சிறந்து விளங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சூரிய பகவானை மார்கழி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்யும் முறை.
மார்கழி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையாக கருதக்கூடியது ஜனவரி மாதம் 12ஆம் தேதி. அன்றைய தினம் காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து குளித்து முடித்துக் கொள்ளுங்கள். பிறகு உங்களுடைய கையில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். இதை எடுத்துக்கொண்டு உங்களுடைய வீட்டிற்கு வெளியே சென்று கிழக்கு பார்த்தவாறு நின்று சூரிய பகவானை பார்த்தவாறு இந்த மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும். பிறகு திரும்பவும் வீட்டிற்குள் வந்து இந்த கல்லுப்பை சமையலுக்கு நாம் பயன்படுத்தும் உப்பில் சேர்த்து வைத்து விட வேண்டும்.
ஒருவேளை சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து கொள்ள முடியவில்லை என்று நினைப்பவர்கள் எந்த நேரம் எழுந்து கொள்கிறீர்களோ அப்பொழுது எழுந்து குளித்துவிட்டு வீட்டு பூஜை அறைக்குள் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை வலது கையில் வைத்துக்கொண்டு கிழக்கு பார்த்தவாறு நின்று இந்த மந்திரத்தை 27 முறை கூறலாம். பிறகு அதை நாம் சமையலுக்கு பயன்படுத்தும் உப்புவில் சேர்த்து வைத்து விட வேண்டும்.
இந்த முறையில் நாம் செய்வதன் மூலம் சூரிய பகவானின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். மேலும் இந்த வழிபாட்டு கல் உப்பை கையில் வைத்துக்கொண்டு செய்வது என்பதாலும் கல் உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது என்பதாலும் மகாலட்சுமியால் நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் அனைத்துமே கிடைக்கும். அதிலும் குறிப்பாக பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கும். செல்வ வளம் அதிகரிக்கும்.
“ஓம் ஆதித்யாய நமஹ”
இதையும் படிக்கலாமே: கற்றாழை செடி இருக்கக் கூடாத திசை
மிகவும் எளிமையான இந்த ஒரு மந்திரத்தை முழுமனதோடு மார்கழி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று கூறுபவர்களுக்கு சூரிய பகவான் மற்றும் மகாலட்சுமியின் அருளால் செல்வ வளம் அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.