- Advertisement -
பொது பலன்

செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு – ஆகஸ்ட் 9 முதல்

நவகிரகங்ளில் சிவப்பு வண்ணம் கொண்ட ஒரு கிரகமாக செவ்வாய் கிரகம் இருக்கிறது. ரத்தம், போர், உடலின் வீரிய தன்மை ஆகிய அனைத்திற்கும் காரகனாக நவகிரகங்களில் செவ்வாய் பகவான் இருக்கிறார். இந்த செவ்வாய் பகவான் ஆகஸ்ட் மாதம் 09 ஆம் தேதியான இன்று அதிகாலை 05.12 மணிக்கு “கடக” ராசியிலிருந்து “சிம்ம” ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். இதனால் 12 ராசியினருக்கும் ஏற்படும் பலன்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:

- Advertisement -

மேஷ ராசிக்கு ஐந்தாவது இடமான சிம்ம ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் உடல்நலம் நன்றாக இருக்கும். உற்றார், உறவினரிடம் மதிப்பு ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் வர வேண்டிய பணம் வந்து சேரும். புதிய முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். பண வரவு செலவுகளில் பிரச்சனைகள் ஏதும் இருக்காது. தொலைதூரப் பயணங்களால் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலை நீடிக்கும்.

ரிஷபம்:

- Advertisement -

ரிஷப ராசிக்கு 4 ஆம் இடமான சிம்ம ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் உங்களுக்கு வரவேண்டிய பண வரவுகள் தாமதமாகும். உங்கள் குடும்ப தேவைகள் நிறைவேறும். பிறருடன் வீண் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வாங்கிய கடன்கள் அனைத்தையும் முழுமையாக அடைத்து மனநிம்மதி பெறலாம். கணவன் மனைவி இடையே சிறிய மனஸ்தாபங்கள் எழலாம். புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படும்.

மிதுனம்:

- Advertisement -

மிதுன ராசிக்கு 3 ஆம் இடமான சிம்ம ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் உங்களின் தொழில் வியாபாரகளில் நல்ல லாபம் கிடைக்கும் . பெண்களுக்கு நல்ல வரன்கள் அமையும். குடும்பத்தில் பல மங்கல நிகழ்வுகள் நடக்கும். சிலருக்கு புத்திர பேறு கிட்டும். உடல்நலம் மிக சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.

கடகம்:

கடக ராசிக்கு 2 ஆம் இடமாகிய சிம்ம ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் நீங்கள் புதிதாக தொடங்கும் எத்தகைய முயற்சிகளிலும் சற்று தாமத்திற்க்கு பின்பே வெற்றி கிட்டும். குடும்பத்திலுள்ள பெரியவர்களுடன் இணக்கம் உண்டாகும். பெண்களின் உடல்நிலை சிறிது பாதிக்கபடக்கூடும். அடிக்கடி பயணங்களும் தீர்த்த யாத்திரைகளையும் மேற்கொள்வீர்கள். கலைஞர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திகொள்ள வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்கு சிம்ம ராசியிலேயே செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். உறவினர்கள் மற்றும் வெளியாட்களிடம் மதிப்பும் மரியாதையும் மிகும். சகோதர உறவுகளால் ஆதாயம் ஏற்படும். தந்தை வழி சொத்துகள் கிடைக்கப்பெறுவர்கள். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். புதிய ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை உண்டாகும். தொழில்களில் நல்ல லாபம் ஏற்படும். கலைஞர்களுக்கு வெளிநாடுகள் செல்லும் யோகம் உண்டாகும். விவசாயம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.

கன்னி:

கன்னி ராசிக்கு 12 ஆம் இடமாகிய சிம்ம ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். திருமணம் போன்ற சுப காரியங்கள் தாமதம் ஆகும். உடலாரோக்கியம் அவ்வப் போது பாதிக்கபடும். பிறருடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. தன வரவுகள் சராசரியாக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் சற்று தாமதமாக கிடைக்க வாய்ப்புண்டு.

துலாம்:

துலாம் ராசிக்கு 11 ஆம் இடமாகிய சிம்ம ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் பொது வாழ்வில் இருப்பவர்கள் எதிலும் சற்று பொறுமையோடு இருக்க வேண்டும். எல்லாவற்றிலும் தடைகளும், தாமதங்களும் ஏற்படும். உங்களுக்கு வரவேண்டிய பணவரவுகள் சரியாக வந்து சேரா நிலை இருக்கும். ஒரு உடல்நலத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படலாம். பணியிடங்களில் பிறரின் சூழ்ச்சிகளுக்கு ஆளாக நேரும். மாணவர்கள் கல்வியில் கடின முயற்சி செய்ய வேண்டும்.

விருச்சிகம்:

விருச்சிகம் ராசிக்கு 10 ஆம் இடமாகிய சிம்ம ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் தொழில், வியாபாரங்களில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய சொத்துகள் வாங்கும் யோகம் ஏற்படும். வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் அமைப்பு ஏற்படும். பழைய கடன்களை எல்லாம் அடைத்து முடிப்பீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் இருந்தவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

தனுசு:

தனுசு ராசிக்கு 9 ஆம் இடமாகிய சிம்ம ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் வேலை தேடி அலைந்தவர்களுக்கு சற்று தடை, தாமதத்திற்கு பின்பு வேலை கிடைக்கும். வீட்டிலும் வெளியிடத்திலும் வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மை பயக்கும். தொழில் மற்றும் வியாபாரங்களில் சுமாரான நிகர லாபம் இருக்கும். அரசியலிலிருப்பவர்கள் அனைத்திலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். உடல்நலக் குறைபாடுகளும் அவ்வப்போது ஏற்பட்டு விலகும்.

மகரம்:

மகர ராசிக்கு 8 ஆம் இடத்தில் சிம்ம ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் உடல் நலம் நன்றாக இருக்கும். உறவினர்களிடம் மதிப்பு உண்டாகும். விஷேஷங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். மக்கள் செல்வாக்கு உண்டாகும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு மிகுந்த லாபங்கள் உண்டாகும். பெண்களுக்கு பொன், புத்தாடைகள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலை நீடிக்கும்.

கும்பம்:

கும்ப ராசிக்கு 7 ஆம் வீடான சிம்ம ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் உடலாரோக்கியம் அடிக்கடி பாதிக்கப்படும். கொடுக்கல் வாங்கல் நன்றாக இருக்கும். குடும்பத்தில் சிறு சண்டைகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரங்கள் சராசரியான நிலையில் இருக்கும். எந்த ஒரு விடயமும் சற்று தாமதத்திற்கு பின்பே நிறைவேறும். பெண்கள் வழியில் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மீனம்:

மீனம் ராசிக்கு 6 ஆம் இடமாகிய சிம்ம ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகியிருப்பதால் உடல் மற்றும் மனம் மிகுந்த உற்சாகமாக இருக்கும். வர வேண்டிய பழைய பாக்கிகள் அனைத்தும் வந்து சேரும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் பலருக்கு உண்டாகும். நீதிமன்ற வழக்குகள், பூர்வீக சொத்து பஞ்சாயத்துகளில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். காதல் சம்பாந்தமான விடயங்களில் வெற்றி கிட்டும். ஒரு சிலருக்கு தொலைதூர பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
ஜூன் மாத சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview
Here we have Sevvai peyarchi palangal august 2019 in Tamil. It is also called as Chevvai peyarchi palangal in Tamil.

- Advertisement -
Published by