- Advertisement -
வீட்டு குறிப்புகள்

சிங்கை 24 மணி நேரமும் சுத்தமாக வைத்துக் கொள்ள வீட்டு குறிப்பு

- Advertisement -

பொதுவாக நம் வீட்டில் பயன்பாட்டில் இருக்கும் சிங்க் வாஷ்பேஷன் இவைகளை எல்லாம் கழுவி சுத்தம் செய்வதற்குள் இல்லத்தரசிகளுக்கு கை வலிக்கத் தொடங்கி விடும். அதிலும் உப்பு கறை அதிகமாக படியும் வீட்டில் பாத்ரூமிலிருந்து வாஷ்பேஷன் வரை சுத்தம் செய்வதற்குள் போதும் போதும் என போகும்.

ஒருமுறை வாஷ்பேஷன் பாத்ரூம் சிங்கை எல்லாம் சுத்தம் செய்து விட்டால், அடுத்த 10 நாட்களுக்கு மீண்டும் அழுக்காக கூடாது. மீண்டும் மீண்டும் உப்பு கறை படியாமல் இருக்க எப்படி சுத்தம் செய்வது பயனுள்ள வீட்டு குறிப்பு இதோ உங்களுக்காக.

- Advertisement -

24 மணி நேரமும் சிங்க் சுத்தமாக இருக்க

இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள், 2 பொருள் தான். லெமன் சால்ட், இதை எலுமிச்சை உப்பு என்று சொல்லுவார்கள். எல்லா மல்லிகை கடைகளிலும், டிபார்ட்மென்டல் ஸ்டோரிலும் குறைவான விலையில் இந்த பொருள் கிடைக்கிறது. வாங்கிக் கொள்ளுங்கள். பிறகு ஆப்ப சோடா. இது பெரும்பாலும் எல்லோர் வீட்டிலேயும் இருக்கும்.

அதையே இந்த குறிப்புக்கும் பயன்படுத்தலாம். ஒரு சின்ன கிண்ணத்தில் 3 டேபிள் ஸ்பூன் லெமன் சால்ட் எடுத்தால், 1 டேபிள் ஸ்பூன் ஆப்ப சோடா எடுத்துக் கொள்ளவும். இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக கலந்து சிங்கிள் நன்றாக தூவி, ஒரு ஸ்டீல் நாரை வைத்து தேய்க்கும் போது அதில் இருக்கும் உப்பு கறைகள், அழுக்கு எல்லாம் சுத்தமாக நீங்கிவிடும். பத்து நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து இப்படி சுத்தம் செய்து வர, உங்க சிங் பார்ப்பதற்கு எப்போதுமே அழகாக இருக்கும்.

- Advertisement -

ஸ்டீல் சிங்குக்கும் இந்த குறிப்பை பயன்படுத்தலாம். கல்லில் போடப்பட்டிருக்கும் சிங்குக்கும் இந்த குறிப்பை பயன்படுத்தலாம். அதே போல உங்களுடைய வாஷ்பேஷன் கழுவுவதற்கும், இந்த பொடியை பயன்படுத்துங்கள். ரொம்பவும் உப்பு கறை இருந்தால் இந்த பொடியை தூவி எல்லா இடங்களிலும் படும்படி தேய்த்து விட்டு, 15 லிருந்து 20 நிமிடம் ஊற வைத்துவிட்டு, மீண்டும் ஸ்டீல் நாரை வைத்து தேய்த்துப் பாருங்கள். சுலபமாக கறைகள் நீங்கும்.

இதே போல குளியல் அறை, கழிவறை, குளியலறை கதவுக்கு பின்னால் இருக்கும் உப்பு கறையை சுத்தம் செய்யவும் இந்த பொடியை நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம். கூடுதலாக உப்பு கறை இருக்கிறது, போகவே மாட்டேங்குது அப்படின்னா இந்த பொடியோடு கொஞ்சம் கோலப்பொடியையும் சேர்த்து நரநரவென உப்பு கறை படிந்த இடத்தை தேய்க்கும் போது, அந்த கறை சீக்கிரம் நீங்குவதை பார்க்க முடியும்.

இதையும் படிக்கலாமே: கரப்பான் பூச்சி தொல்லையில் இருந்து தப்பிக்க

ஆனால் அடிக்கடி ஸகோலப்பொடி சேர்க்கும்போது அது சாக்கடையை அடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. பார்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் பொறுப்பு. இந்த எளிமையான வீட்டு குறிப்பு இல்லத்தரசிகளுக்கு எல்லாம் மிகவும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -