- Advertisement -
சமையல் குறிப்புகள்

அடடா! வாயில் வைத்தவுடனே இவ்வளவு சுவையா என்று நீங்களே ஆச்சரியப்படும் வகையில் மிகவும் சுவையான பொடி இட்லி

- Advertisement -

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உணவுகளை சமைத்துக் கொடுக்க வேண்டும் என்பது தான் அனைத்து தாய்மார்களின் ஆசையாக இருக்கும். ஆனால் காலை உணவாக இட்லி, தோசையை தவிர வேறென்ன சுலபமாக செய்ய முடியும். காலை நேரத்தில் குழந்தைகளை பள்ளிக்கு கிளப்பவும், கணவரை வேலைக்கு அனுப்பவும் என நேரம் சரியாக இருக்கும். இதற்கிடையே எங்கிருந்து விதவிதமான உணவுகளை சமைக்க முடியும். ஆனால் வழக்கமாக செய்யும் இட்லி தோசையை சற்று வித்தியாசமாக செய்து கொடுத்தால் அதன் சுவையும் அருமையாக தான் இருக்கும். அப்படி ஹோட்டல்களிலும் ரெஸ்ட்டாரன்ட்களிலும் கிடைக்கும் பொடி இட்லி, பொடி தோசையை அனைவரும் விருப்பமாக தான் சாப்பிடுகிறார்கள். அதனை எப்படி வீட்டிலும் அதே சுவையில் செய்யலாம் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இவ்வாறு பொடி இட்லி செய்து கொடுத்தால் காலையில் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட விருப்பமாக சாப்பிட்டு முடிப்பார்கள்.

தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு – 100 கிராம், கடலைப்பருப்பு – 50 கிராம், எள் – 50 கிராம், மிளகு – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், வரமிளகாய் – 20, கட்டி பெருங்காயம் – 25 கிராம், கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன், இட்லி – போதுமான அளவு.

- Advertisement -

செய்முறை:
முதலில் இட்லி பாத்திரத்தில் இட்லி ஊற்றி உங்களுக்குத் தேவையான அளவு இட்லியை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பின் மீது ஒரு பேன் வைத்து கொள்ளவேண்டும். பேன் நன்றாக சூடேறியதும் அதில் 50 கிராம் எள் சேர்த்து நன்றாகப் பொறிய விட வேண்டும். எள் முழுவதுமாக பொறியும் வரையில் அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் வறுத்த எள்ளை வேறொரு தட்டிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். பிறகு கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொண்டு, அதனையும் தட்டிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். பின்னர் உளுத்தம் பருப்பையும் ஐந்திலிருந்து பத்து நிமிடம் பொறுமையாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு மிளகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் தான் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் 20 வரமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே எண்ணெயில் 25 கிராம் கட்டி பெருங்காயம் சேர்த்து பெருங்காயம் முழுவதுமாக பொறிந்து வரும் வரை வதக்க வேண்டும். பொறிந்த பெருங்காயத்தை உளுத்தம் பருப்புடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இவை அனைத்தையும் ஆற வைத்து, ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மிளகாயுடன் சேர்த்து மறுபடியும் இவற்றை அரைக்கவேண்டும். ஆனால் இதனை பவுடர் பதில் இல்லாமல் சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பின் மீது கடாய் வைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு சேர்த்து தாளித்து, அதனுடன் ஒரு ஸ்பூன் மிளகாய் பொடி சேர்த்து, பிறகு வேக வைத்த இட்லிகளையும் சேர்த்து கலந்து விட்டு, கொஞ்சம் கொஞ்சமாக மிளகாய் பொடியை சேர்த்து கிளறி கொடுத்தால் போதும். சுவையான பொடி இட்லி தயாராகிவிடும்.

- Advertisement -