- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

வேண்டுதல் நிறைவேற சிதறு தேங்காய் பரிகாரம்

நாம் செல்லும் காரியத்தில் நமக்கு வெற்றிகள் கிடைக்க வேண்டும் என்றாலோ அல்லது நாம் தொடங்கும் காரியம் எந்தவித தடையும் இல்லாமல் நல்லபடியாக நடந்தேற வேண்டும் என்றாலோ விநாயகப் பெருமானை வழிபட்டுவிட்டு ஒரு சிதறு தேங்காயை அவருக்கு உடைத்து விட்டு அந்த வேலையை செய்ய ஆரம்பிப்போம். எத்தனை எண்ணிக்கையில் தேங்காயை உடைத்தால் என்னென்ன வேண்டுதல்கள் நிறைவேறும் என்பதை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

விநாயகப் பெருமானுக்கு உகந்த தினமாக கருதப்படுவது சங்கடஹர சதுர்த்தி. சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானை பலரும் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். இதில் மிகவும் குறிப்பாக சொல்லக்கூடியது தான் சிதறு தேங்காய். எத்தனை எண்ணிக்கையில் சிதறு தேங்காயை உடைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் செயல்பட்டால் நம்முடைய வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும்.

- Advertisement -

பொதுவாக சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருப்பவர்கள் காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய விநாயகரின் படத்தை சுத்தம் செய்து அவருக்கு சந்தன குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். மாலை நேரத்தில் சந்திர உதயம் ஆகும் பொழுது அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு நடக்கக்கூடிய அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொள்ள வேண்டும்.

கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டில் இருக்கும் விநாயகரின் படத்திற்கு முன்பாக அமர்ந்து தங்களால் இயன்ற பிரசாதத்தை நெய்வேத்தியமாக வைத்து விநாயகப் பெருமானை வழிபாடு செய்வார்கள். இதே சிதறு தேங்காய் உடைப்பதாக இருக்கும் பட்சத்தில் முதல் நாளே தேங்காயை வாங்கி வந்து வீட்டில் வைத்து விட வேண்டும். முதல் நாள் இரவு வாங்க இயலவில்லை என்பவர்கள் அன்றைய தினம் காலையிலாவது வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

மாலையில் விநாயகர் ஆலயத்திற்கு சென்று வழிபாடு அனைத்தையும் நிறைவு செய்த பிறகு சிதறு தேங்காயை உடைத்து விட்டு வர வேண்டும். சரி இப்பொழுது எந்த வேண்டுதலுக்கு எத்தனை தேங்காய் உடைக்க வேண்டும் என்று பார்ப்போமா? கடன் பிரச்சினை தீர விநாயகப் பெருமானுக்கு ஏழு தேங்காய்களை உடைக்க வேண்டும். குழந்தை பாக்கியம் பெற ஒன்பது தேங்காயை உடைக்க வேண்டும். கல்வியில் சிறந்து விளங்க ஐந்து தேங்காயை உடைக்க வேண்டும். உடல் நலம் பெறவும், தொழிலில் சிறந்து விளங்கவும் மூன்று தேங்காயை உடைக்க வேண்டும்.

காலையில் வாங்கி வந்த இந்த தேங்காய்களை மாலையில் அருகில் இருக்கும் ஆலயத்திற்கு எடுத்துச் சென்று விநாயகருக்கு முன்பாக வைத்துவிட்டு விநாயகருக்கு இரண்டு தீபங்களை ஏற்றி வைத்து அவரிடம் உங்களுடைய வேண்டுதலை கூற வேண்டும். பிறகு விநாயகரை எத்தனை தேங்காய் வாங்கி வைத்திருக்கிறீர்களோ அத்தனை முறை வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறையும் ஒரு தேங்காயை கையில் எடுத்துக்கொண்டு அவரை வலம் வந்து அவரிடம் உங்களுடைய வேண்டுதலை வைத்துவிட்டு சிதறு தேங்காயாக உடைக்க வேண்டும்.

- Advertisement -

இதேபோல் கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் ஏழு தேங்காய் உடைப்பது போல ஏழு சங்கடஹர சதுர்த்தி தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். எத்தனை தேங்காயை சிதறு தேங்காயாக உடைக்கிறோமோ அத்தனை முறை விநாயகரை வலம் வந்து உடைக்க வேண்டும். அதேபோல் அத்தனை சங்கடஹர சதுர்த்தியும் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இப்படி முழுமனதோடு விநாயகப் பெருமானை வழிபாடு செய்து சிதறு தேங்காய் உடைப்பதன் மூலம் நம்முடைய வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும். அந்த காரியம் நடைபெறுவதில் இருக்கக்கூடிய தடைகளும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: மன நிம்மதி பெற பைரவர் வழிபாடு

சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானுக்கு முழு நம்பிக்கையுடன் இப்படி சிதறு தேங்காய் உடைப்பதன் மூலம் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகளும் உடைந்து சுக்குநூறாக போகும்.

- Advertisement -