- Advertisement -
பொது பலன்

Horoscope : யாருக்கெல்லாம் சொந்தவீடு கட்டும் யோகம் உண்டு தெரியுமா ?

காணி நிலம் வேண்டும், அதில் ஒரு வீடு வேண்டும் என நூறு ஆண்டுகளுக்கு முன்பு மகாகவி பாரதியார் ஒரு மனிதனுக்கான தேவை குறித்து பாடினார். இன்றைய காலத்தில் பலருக்கும் சொந்த வீடு, மனை போன்றவற்றை வாங்கும் நிலை ஏற்பட வேண்டும் என விரும்புகின்றனர். ஒரு மனிதனின் முன்வினை வினைகளுக்கு ஏற்பவே இப்பிறவி அமைகிறது. இப்பிறவி நமக்கு சிறப்பாக இருக்க நமது ஜாதகத்தில் கிரகங்களின் நிலைகள் சரியாக அமைய வேண்டும். சொந்த வீடு, மனை அமைவது குறித்து ஜோதிட கலை கூறும் விடயங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் ஒரு ஜாதகருக்கு சொந்த வீடு அமைய காரகனாக சுக்கிரனும், சொந்த நிலம் அமைவதற்கு காரகனாக பூமிகாரகனான செவ்வாய் கிரகமும் சுட்டிக்காட்டப்படுகின்றனர். பூமி காரகன் செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்று பலமாக நான்கில் அல்லது நான்காம் அதிபதியின் சேர்க்கை பெற்றிருந்தால், ஒருவருக்கு பூமியோகம் உண்டாவது மட்டுமின்றி பூமியுடன் கூடிய வீட்டை வாங்கக்கூடிய யோகம் அல்லது பூமியை வாங்கி அதில் வீடு கட்டி குடிபுகும் யோகம் ஏற்படுகிறது.

- Advertisement -

மேலும் ஒருவருக்கு சொந்த வீடு, மனை அமைய ஜாதகத்தில் லக்னத்திற்கு நான்காம் வீடு அல்லது பாவம் பலமாக இருக்க வேண்டும். ஜென்ம லக்னத்திற்கு நான்காம் வீட்டு அதிபதி ஆட்சி, உச்சம் பெற்று இருந்தால் அரண்மனை போன்ற வீடு யோகம் மற்றும் அதிகமான பூமி சார்ந்த சொத்துகள் அமையும் யோகமும் உண்டாகிறது. அனவைருமே சொந்த வீடு கட்டி குடிபுகும் யோகம் ஏற்படுமா என்பதை ஜாதகத்தில் கிரகங்களின் பார்வை, பிற கிரகங்களுடனான கூட்டணி நன்மையான பலன்களை தருவதாக இருக்க வேண்டும்.

சொந்த வீட்டுமனை அமைய ஜாதக ரீதியாக நான்காம் பாவம் பலமாக அமைய வேண்டும். இந்த நான்காம் வீட்டு அதிபதி கேந்திர ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய லக்னத்திற்கு 1,4,7,10 ஆம் வீட்டு அதிபதிகளுடன் இணைந்திருந்தாலும், திரிகோண ஸ்தானங்களில இருந்தாலும் அல்லது லக்னத்திற்கு 5,9 ம் அதிபதிகளின் சேர்க்கை பெற்றிருந்தாலும் சுப ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 2,11 வீட்டு அதிபதிகளின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் சொந்த வீடு, மனை யோகம் ஏற்படும்.

- Advertisement -

ஒருவருக்கு சொந்தவீடு அமையக்கூடிய யோகம் உண்டானாலும், அந்த வீட்டின் அமைப்பு எப்படி இருக்கும் என்பதனையும் நான்காம் பாவத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும். சிலருக்கு மாட மாளிகை மற்றும் அரண்மனை போன்ற வீடுகளிலும், உயரமான கட்டிட வீடுகளிலும் வசிக்கக்கூடிய யோகம் ஏற்படுகிறது. ஜாதகத்தில் நான்காம் பாவம் பலமிழந்து இருப்பவர்களுக்கு ஓட்டு வீடு, குடிசை வீடுகளில் வசிக்கும் நிலை ஏற்படுகிறது. நான்காம் வீட்டில் எத்தனை பலமான கிரகங்கள் அமைகின்றதோ, நான்காம் அதிபதியுடன் எத்தனை பலமான கிரகங்கள் சேர்க்கை பெறுகின்றதோ, நான்காம் வீட்டை எத்தனை பலமான கிரகங்கள் பார்வை செய்கின்றதோ அத்தனை வீடுகள் அமையக் கூடிய அற்புதமான யோகம் அந்த ஜாதகருக்கு ஏற்படும்.

ஒருவரின் ஜாதகத்தில் சூரியன், கேது ஆகிய கிரகங்கள் 4ஆம் வீட்டில் இருந்தால் அவருக்கு அமையக்கூடிய வீடு பார்பதற்கு அழகாக இருந்தாலும் உறுதி தன்மையற்றதாக இருக்கும். நான்காம் வீட்டில் சந்திரனிருந்தால் அழகான புதிய வீடு அமையும் யோகமும், சுக்கிரன் இருந்தால் மிகவும் அம்சமான, வசதி வாய்ப்பு மிகுந்த வீடும் அமையும்.

- Advertisement -

நான்கில் குரு இருந்தால் மிகவும் உறுதியான, முதல் தரமான வீடு அமையும். மேலும் புதிய வீடு கட்டக்கூடிய யோகம் உண்டாகும். செவ்வாய் இருந்தால் வீட்டில் விரிசல்கள், பிளவுகள் ஏற்படக்கூடிய நிலையும் சமயங்களில், வீட்டிற்கு தீயினால் ஆபத்துகளும் ஏற்படும். நான்காம் பாவத்தில் சனி, ராகு அமையப்பெற்றாலோ, 4ம் வீட்டையோ, 4ம் அதிபதியையோ, சனி, ராகு பார்த்தாலும் பழைய வீடு வாங்கும் யோகம் சிலருக்கு ஏற்படுகிறது.

ஒருவருக்கு நான்காம் அதிபதி பலம் பெற்று அமைந்திருந்து அதனுடைய திசை அல்லது புத்தி நடைபெற்றாலும், நான்கில் பலமாக அமையப்பெற்ற கிரகத்தின் திசை அல்லது புத்தி நடைபெற்றாலும், சுக்கிரனின் திசை அல்லது புத்தி நடைபெற்றாலும், அத்துடன் கோட்சார கிரக நிலையும் சாதகமாக இருந்தால் அதிகளவில் அசையாச் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.

ஒருவரின் ஜனன ஜாதகத்தில் நான்காம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு தேடிவரும். நான்காம் வீட்டை குரு, சுக்கிரன் பார்வையிட்டாலும் சொகுசு வாழ்க்கை அமையும். செவ்வாய்க்கு அதிபதி முருகனையும், சுக்கிரனுக்கு அதிபதி ஸ்ரீரங்கநாதரையும் வணங்கி வந்தால் சொந்த வீடும் சொகுசான வாழ்க்கையும் ஒருவருக்கு கிடைக்கின்ற நிலை உருவாகும்.

English overview:
Here we have Sondha veedu manai yogam in Tamil. It is also called as Jathagathil sukran in Tamil or Sevvai graham palangal in Tamil or Sondha veedu jothidam in Tamil or Sondha veedu amaiya in Tamil.

- Advertisement -